கண்ணை பறிக்கும் மின்னொளியில் ஒளிரும் திருமலை நாயக்கர் மகால்! தங்கம் வெளியிட்ட சூப்பர் பதிவு
சென்னை: மின்னொளியில் ஒளிரும் மதுரை திருமலை நாயக்கர் மகால் சங்க கால பாண்டியர்கள் ஆண்ட மதுரையின் சிறப்பை விளக்குகிறது என்றும் அந்த மகால் குறித்தும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கியுள்ளார். 17ஆம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களால் இந்த நாயக்கர் மகால் கட்டப்பட்டது.
இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஒளிரும் திருமலை நாயக்கர் அரண்மனை மதுரை மிகத் தொன்மையான வரலாற்றைக் கொண்டது. சங்க காலப் பாண்டியரின் தலைநகராக விளங்கியது. பல்வேறு இலக்கியங்களும் வெளிநாட்டார்க் குறிப்புகளும் மதுரையின் சிறப்பினை எடுத்துக் கூறுகின்றன.

மதுரையைத் தலைமையிடமாக் கொண்டு கி. பி. 17ஆம் நூற்றாண்டில் நாயக்க மன்னர்கள் ஆட்சி செய்தனர். நாயக்கர் மன்னர்களில் சிறப்பு வாய்ந்தவராக திருமலை நாயக்கர் கி.பி.1623- 1659 வரை ஆட்சிசெய்தார். திருமலை நாயக்க மன்னர் கி.பி.1636 ஆம் ஆண்டில் மதுரையில் அரண்மனை ஒன்றினைக் கட்டினார். இந்த அரண்மனையே தற்போது அம்மன்னரின் பெயரால் திருமலை நாயக்கர் அரண்மனை என்றழைக்கப்படுகிறது.
தென்னிந்தியாவில் எஞ்சியுள்ள பண்டைய அரண்மனைகளில் மிகவும் எழில் வாய்ந்த அரண்மனைகளில் ஒன்றாக மதுரைத் திருமலை நாயக்கர் அரண்மனை திகழ்கிறது. திருமலை நாயக்கர் அரண்மனை சொர்க்க விலாசம், ரங்க விலாசம் என இரண்டு முக்கியப் பகுதிகளைக் கொண்டிருந்தது.

இந்த அரண்மனை அரியணை மண்டபம், அந்தப்புரம், நாடகசாலை, பள்ளியறை, பூசை அறை, படைக்கலன், வசந்தவாவி, மலர்வனம் போன்ற பகுதிகளை உள்ளடக்கியிருந்தது. திருமலை மன்னரின் பேரன் சொக்கநாத நாயக்க மன்னர் தனது தலைநகரை மதுரையிலிருந்து திருச்சிராப்பள்ளிக்கு மாற்றினார். எனவே இந்த அரண்மனையின் ஒரு பகுதியை இடித்து திருச்சிராப்பள்ளியில் புதிய அரண்மனையை உருவாக்கினார்.
தற்போது அரண்மனையின் நான்கு ஒரு பகுதி மட்டும் எஞ்சியுள்ளது. திருமலை நாயக்கர் அரண்மனை இந்தோ-சாரசனிக் கட்டடக் கலைப் பாணியில் கட்டப்பட்டதாகும். இந்துக் கோயில்களின் கட்டடக் கலையும் முகமதியக் கட்டடக் கலையும் இணைந்து கட்டப்படும் கலையை இந்தோசாரசனிக் கட்டக்கலை என்றழைப்பர். இவ்வரண்மனையில் சென்னை மாகாண ஆளுநர் 1879-ஆம் ஆண்டு ரூ 5 இலட்சம் மதிப்பில் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டார். திருமலை நாயக்கர் அரண்மனை தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்டச் சின்னமாக 1972-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு நல்ல முறையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தேர்தல் அறிக்கையில் பண்டைய மரபுச் சின்னங்கள் அவற்றின் தொன்மை மாறாமல் பேணிப் பாதுகாக்கப்படும் என்று அறிவித்தார். அதனடிப்படையில் திருமலை நாயக்கர் அரண்மனை, தஞ்சாவூர் மராட்டா அரண்மனை, தரங்கம்பாடி டேனீஷ்கோட்டை ஆகிய வரலாற்றுச் சின்னங்களில் பாதுகாப்பு, மறு சீரமைப்பு பணிகள் ரூ. 16.92 கோடி மதிப்பில் நடைபெற்று வருகின்றன.
மேலும், திருமலை நாயக்க அரண்மனை நாடகசாலை, பள்ளியறை பகுதிகளில் புனரமைப்பு, பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் மூன்று கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது. திருமலை நாயக்கர் அரண்மனையில் மேற்குப்புறத்தில் கம்பிவேலி மற்றும் புல்வெளித்தளம் ரூ 61 இலட்சத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அரண்மனையின் தொன்மையை பாதுகாக்கும் வண்ணம் அனைத்துத் தளப்பகுதிகளிலும் ஒரே மாதிரியான கற்கள் ரூ 3.73 கோடி மதிப்பில் பதிக்கப்பட்டு வருகின்றன.
திருமலை நாயக்கர் அரண்மனையை நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் பார்வையிட்டு வருகின்றனர். மதுரைக்கு வட இந்தியாவில் இருந்து வருகை தரும் பார்வையாளர்களும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் இந்த அரண்மனையைக் கண்டுகளிக்கின்றனர்.
ஒளிரும் திருமலை நாயக்கர் அரண்மனை
— Thangam Thenarasu (@TThenarasu) July 25, 2024
மதுரை மிகத் தொன்மையான வரலாற்றைக் கொண்டது. சங்க காலப் பாண்டியரின் தலைநகராக விளங்கியது. பல்வேறு இலக்கியங்களும் வெளிநாட்டார்க் குறிப்புகளும் மதுரையின் சிறப்பினை எடுத்துக்கூறுகின்றன.
மதுரையைத் தலைமையிடமாக் கொண்டு கி. பி 17ஆம் நூற்றாண்டில் நாயக்க… pic.twitter.com/Vx0VDeWu1V
பகல் நேரம் தவிர்த்து இரவு நேரத்திலும் திருமலை நாயக்கர் அரண்மனையின் எழிலைக் காண்பதற்கு உள் மற்றும் வெளிப்பகுதிகளில் ஒளியூட்டி அழகூட்டுவதற்கு மரபு சார் ஒளிவிளக்குகள் பொருத்தப்பட்டு வருகின்றன. திருமலை நாயக்கர் அரண்மனையினை உலகத்தரம் வாய்ந்த வரலாற்றுச் சின்னமாக உயர்த்தும் வகையில் பல்வேறு பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.
வருங்கால தலைமுறையினருக்கு இத்தகைய மரபுச் சின்னங்களைத் தொன்மை மாறாமலும் காலம் கடந்து நிலைத்து நிற்கும் வகையில் பாதுகாத்து எடுத்துச் செல்வது நமது தலையாய கடமையாகும் என்ற உன்னத நோக்குடன் பணிகள் நடைபெற்று வருகின்றன. "மரபு நம் உரிமை; அதை மீட்டெடுத்தல் தமிழர் தம் கடமை" என்ற என்ற உயரிய நோக்கோடு தமிழ்நாடு அரசு செயலாற்றி வருகிறது. இவ்வாறு அவர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications