தமிழ்நாடு வீழ்ச்சிப்பாதையில் செல்கிறது.. சில்லறை பணவீக்கம் 6.81% ஆக உயர்வு.. தங்கம் தென்னரசு வேதனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டின் சில்லறை பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவது கவலையளிப்பதாக முன்னாள் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் 5.92% ஆக இருந்த தமிழ்நாட்டின் சில்லறை பணவீக்கம், செப்டம்பர் மாதம் 6.81% ஆக உயர்ந்திருப்பது தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியின் குறியீடு என்றும், இது விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவதில் இந்த அரசின் மெத்தனப்போக்கை காட்டுவதாகவும் விமர்சித்துள்ளார்.

தமிழத்தில் கடந்த ஜூன் மாதத்திற்கு பிறகு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக அரிசி விலை மாதம் ஒரு முறை அதிகரிப்பது போல் அதிகரித்து வருகிறது. சமையல் எண்ணெய் விலையும் அதிகரித்து வருகிறது.

Thangam Thennarasu concern Tamil Nadu is on a downward spiral retail inflation has risen to 6 81

விலைவாசி உயர்வு

கடந்த செப்டம்பர் மாதம் லிட்டர் ரூ.130-க்கு விற்பனை செய்யப்பட்ட பாமாயில், தற்போது ரூ.140 ஆக அதிகரித்துள்ளது. இதே போன்று சூரியகாந்தி எண்ணெய் கடந்த மாதம் ரூ.150-க்கு விற்பனை செய்யபட்ட நிலையில் தற்போது ரூ.160 -ஆக உயர்ந்துள்ளது. அரிசி, எண்ணெய் மட்டுமின்றி, மளிகை, பருப்பு வகைகள், தக்காளி, பூண்டு, வெங்காயம் உள்ளிட்ட மக்களின் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விலை உயர்ந்துள்ளது.

இதற்கிடையே கடந்த ஆகஸ்ட் மாதத்திற்கான விலைவாசி உயர்வு (பணவீக்கம்) தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட விவரத்தில், தமிழகம் 5.92 சதவீதமாக உயர்ந்துள்ளது. தேசிய சராசரி 4.82 சதவீதமாக இருந்த நிலையில், தமிழ்நாட்டில் 5.92 சராசரியாக இருந்தது. கடந்த மாதமே இப்படி இருக்கையில் இந்த மாதம் பணவீக்கம் மேலும் உயர்ந்து அதிர்ச்சி தந்துள்ளது.

6.81 சதவீதமாக உயர்வு

இதன்படி செப்டம்பர் மாதத்திற்கான விலைவாசி உயர்வு (பணவீக்கம்) தொடர்பான மத்திய அரசி வெளியிட்டுள்ள விவரத்தில் 6.81 சதவீதமாக அதிகரித்துள்ளது. தேசிய சராசரியே 5.54% என்று தான் இருக்கிறது. ஆனா தமிழ்நாட்டில் பணவீக்கம் அதிகரித்துள்ளது. இதனை எதிர்க்கட்சிகள் தவெக அரசை சரமாரியாக விமர்சித்து வருகின்றனர்.

முன்னாள் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசும், சில்லறை பணவீக்க உயர்வு, ஜி.எஸ்.டி வரி வசூல் குறைவு எனத் தமிழ்நாடு வீழ்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும், அரசு உடனடியாக இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-

தங்கம் தென்னரசு வேதனை

தமிழ்நாட்டின் சில்லறை பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. ஆகஸ்ட் மாதம் 5.92% ஆக இருந்த தமிழ்நாட்டின் சில்லறை பணவீக்கம், செப்டம்பர் மாதம் 6.81% ஆக உயர்ந்திருப்பது தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியின் குறியீடாக இருப்பதை மறுக்கமுடியாது.

தேசிய சராசரியே 5.54% என இருக்கும்போது, தமிழ்நாடு அதைவிடக் கூடுதலாகச் சில்லறை பணவீக்கத்தைக் கொண்டிருப்பது விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவதில் இந்த அரசின் மெத்தனப்போக்கை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது. அதிலும் குறிப்பாக, கிராமப்புறப் பணவீக்கம் 7.17% ஆக இருப்பது, விலை உயர்வு கிராமப்புற எளிய மக்களையே அதிகம் பாதிக்கிறது என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது.

சில்லறை பணவீக்க உயர்வு, ஜி.எஸ்.டி வரி வசூல் குறைவு எனத் தமிழ்நாடு வீழ்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கும் போது, இனியும் வினோத கணக்குகளைச் சொல்லிக் கொண்டிருக்காமல் அரசு உரிய நடவடிக்கை எடுத்துப் பணவீக்கத்தை உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+