ஜிஎஸ்டி வரிவசூல் சரிவு.. “தமிழ்நாட்டின் நிதி நிர்வாகத்திற்கு முக்கிய எச்சரிக்கை” - தங்கம் தென்னரசு
சென்னை: ஜிஎஸ்டி வரி வருவாயில் தேசிய அளவில் பல மாநிலங்கள் முன்னேறி வரும் நிலையில், தமிழ்நாட்டின் வரிவசூலில் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்தச் சரிவு, தமிழ்நாட்டின் நிதி நிர்வாகத்திற்கு ஒரு முக்கியமான எச்சரிக்கை என முன்னாள் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
முடிவடைந்த ஆகஸ்ட் மாத மாநில சரக்கு மற்றும் சேவை வரி (SGST) வசூல் குறித்த தகவல்கள் தமிழ்நாட்டின் நிதி நிலைமை குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளன. நாட்டின் பிற முக்கிய மாநிலங்கள் ஜிஎஸ்டி வரி வசூலில் வளர்ச்சியைக் கண்டு வரும் சூழலில், தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி வசூல் 1% சரிவைச் சந்தித்துள்ளது.

இதுதொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் சமூக வலைததள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "GST வரி வருவாயில் தேசிய அளவில் பல மாநிலங்கள் முன்னேறி வரும் நிலையில், தமிழ்நாட்டின் வரிவசூலில் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்தச் சரிவு, தமிழ்நாட்டின் நிதி நிர்வாகத்திற்கு ஒரு முக்கியமான எச்சரிக்கை. தேசிய அளவில் GST வருவாய் உயர்ந்துள்ள நிலையில், தமிழ்நாட்டின் வரிவசூல் சரிவை சந்தித்துள்ளது.
இந்த சரிவுக்கான காரணம் என்ன? இதைச் சரிசெய்ய தவெக அரசு எடுக்கப் போகும் நடவடிக்கை என்ன? அடுத்தடுத்த மாதங்களில் வருவாய் வளர்ச்சியை உறுதி செய்ய அரசு வைத்திருக்கும் திட்டம் என்ன? இந்தக் கேள்விகளுக்கு தமிழ்நாடு அரசு தெளிவான பதிலும், செயல் திட்டமும் அளிக்குமா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.


Click it and Unblock the Notifications
