Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்நாட்டின் புது நிதியமைச்சர் தங்கம் தென்னரசு! ஐடி துறை அமைச்சராக பிடிஆர் நியமனம்! ஸ்டாலின் அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு நிதி அமைச்சராக தங்கம் தென்னரசு நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அமைச்சர் டிஆர்பி ராஜாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

நிதி அமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில்நுட்ப துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்று இரண்டு வருடங்கள் முடிந்துவிட்டன. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் இரண்டு ஆண்டு முடிவில் சில அமைச்சர்களை மாற்ற முடிவு செய்துள்ளார்.

கடந்த ஆண்டும் சில அமைச்சர்கள் மாற்றம் செய்யப்பட்டனர். ஆனால் பெரிய அளவில் அமைச்சரவை மாற்றம் அப்போது நடக்கவில்லை. முதல் மாற்றமாக அமைச்சரவையில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் நீக்கப்பட்டார். ஆவடி நாசர் மீது பல்வேறு புகார்கள் சர்ச்சைகள் இருந்தன.

இன்னொரு பக்கம் அமைச்சர் பதவியில் மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜா சேர்க்கப்பட்டு உள்ளார். இவர் கடந்த 2 வருடமாகவே அமைச்சராக வேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் இருந்தன.

இந்த நிலையில் தற்போது அவர் தொழில்துறை அமைச்சராகி உள்ளார்.

 Thangam Thennarasu is the new Finance minister of Tamil Nadu : IT department to PTR Palanivel Thiagarajan

பிடிஆர் மாற்றம் : நிதித்துறையில் சிறப்பாக செயல்பட்டு வந்த பிடிஆர் ஐடி துறைக்கு மாற்றப்பட்டு உள்ளார்.

கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்படும் ஆடியோ என்று ஒரு ஆடியோ வைரலாகி வருகிறது. திமுகவினர் மீதே குற்றச்சாட்டு வைக்கும் விதமாக ஆடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி உள்ளது.

இந்த ஆடியோவின் உண்மைத்தன்மை அறியப்படவில்லை. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் இன்னொரு ஆடியோவும் வெளியாகி இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த இரண்டு ஆடியோக்களின் உண்மைத்தன்மை தெரியவில்லை. அமைச்சர் பிடிஆர் இந்த ஆடியோ ஜோடிக்கப்பட்டது, பொய்யானது என்று குறிப்பிட்டு இருந்தார்.

மறுப்பு : இந்த நிலையில் நேற்று வெளியான ஆடியோ குறித்து பிடிஆர் விளக்கி உள்ளார். ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட பொய்யான வீடியோக்களை வெளியிட்டு பிடிஆர் அளித்துள்ள விளக்கத்தில், இது தன்னுடைய குரல் இல்லை என்று அவர் விளக்கம் அளித்து உள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் மறுப்பு : சமீபத்தில் இந்த சர்ச்சைகளுக்கு முதல்வர் ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைத்தார். உங்களில் ஒருவன் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பதில் அளிக்கையில், பிடிஆர் ஆடியோ குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், இந்த ஆடியோ குறித்து அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஏற்கனவே இரண்டு முறை விளக்கம் அளித்துவிட்டார். இந்த மட்டமான ஆடியோ அரசியல் பற்றி நான் பேச விரும்பவில்லை.

மக்களுக்கான பணிகளை செய்யவே எனக்கு நேரம் சரியாக இருக்கிறது. மட்டமான அரசியல் செய்யும் நபராளுக்கு நான் விளம்பரம் தேடித்தர விரும்பவில்லை, என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

இந்த நிலையில்தான் தற்போது பிடிஆர் மாற்றப்பட்டு உள்ளார்.

 Thangam Thennarasu is the new Finance minister of Tamil Nadu : IT department to PTR Palanivel Thiagarajan

பிடிஆர் விளக்கம்: முன்னதாக ஆடியோ பற்றி விளக்கம் சொன்ன பிடிஆர், எனது இந்த விளக்கம் 22 ஏப்ரல் 2023 அன்று நான் வெளியிட்ட எழுத்துப்பூர்வமான அறிக்கையின் தொடர்ச்சியாகும். இதனை தொடர்வதற்கு முன்னர் நவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (AI) எப்படி Deep fake போலி காணொளிகளை உருவாக்கும் என்பதற்கான சில உதாரணங்களை நான் காண்பிக்க விரும்புகிறேன்.

உதாரணகளுக்கான இணைப்புகள்:

1) Reality Check: Deepfake Videos In Delhi Elections?
2) It's Getting Harder to Spot a Deep Fake Video 3) SASSY JUSTICE - Official White House Address | Deep Fake a...
இத்தகைய உண்மை போன்று

தோற்றமளிக்கும் வீடியோக்களை கணினி மூலம் உருவாக்க முடியும் என்றால், ஆடியோ கோப்புகளை என்னவெல்லாம் செய்ய முடியும் என்று கற்பனை செய்து பாருங்கள்.

நேற்று முதல் சமூக வலைதளங்களில் பரவி வரும் ஆடியோ கிளிப்பில் உள்ள எந்த செய்தியையும், எந்த ஒரு தனி நபரிடமோ, தொலைபேசி உரையாடலிலோ அல்லது தனிப்பட்ட உரையாடலிலோ நான் கூறவில்லை என்று உறுதியாக கூற விரும்புகிறேன். இந்த உரையாடல் தங்களுடன் நடந்தது என்று சொல்ல இதுவரை யாரும் முன்வராதது குறிப்பிடத்தக்கது.

பாஜக மாநில தலைவர் யாரோ ஒருவர் குறிப்பிட்ட எந்த நபருடனும் சொல்லாத ஒன்றை, ஆடியோவாக வெளியிடும் அளவிற்கு கீழ்த்தரமாக இறங்கியுள்ளார். அவரது அரசியலின் தரம் இவ்வளவுதான்.

மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாங்கள் ஆட்சிக்கு வந்த இந்த இரண்டு ஆண்டுகளில் பல வரலாறு காணாத சாதனைகளையும், புதிய திட்டங்களையும் ஒரு மனிதாபிமான நிர்வாகத்தையும் அளித்துள்ளோம் - இதையே நாங்கள் திராவிட மாடல் ஆட்சி முறை என்று அழைக்கிறோம். இத்தகைய உயரிய இலக்குகளை அடைய நாங்கள் மிகப்பெரிய நிதி சீர்திருத்தங்களை மேற்கொண்டு கடந்த பத்தாண்டுகளில் செய்ய முடியாத சாதனைகளை இரண்டே ஆண்டுகளில் சாதித்துள்ளோம். இவை கடந்த பத்தாண்டுகளில் ஒன்றிய பா.ஜ.க அரசு செய்தவற்றை விட மகத்தான சாதனைகளாகும். இதனை நேரடியாக ஒப்புநோக்கி பார்த்தாலே திராவிட மாடல் ஆட்சியின் செயல் வேகம் தெரியும்.

 Thangam Thennarasu is the new Finance minister of Tamil Nadu : IT department to PTR Palanivel Thiagarajan

இத்தகைய சாதனைகளை சில சக்திகளால் சகித்துக் கொள்ள முடியவில்லை. எனவே அவர்கள் எங்களது சிறப்பான பணிகளை சீர்குலைக்கும் நோக்கத்துடன் நவீன தொழில்நுட்பத்தை மலிவான யுத்திக்காக பயன்படுத்தி இத்தகைய ஜோடிக்கப்பட்ட ஆடியோவை வெளியிட்டுள்ளனர்.

முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டின் ஒற்றை நம்பிக்கையாக மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டிற்கே வழிகாட்டும் ஒளியாக இருக்கிறார். எங்களது நம்பிக்கை நட்சத்திரமான மாண்புமிகு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பொதுமக்கள் மத்தியில், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் மகத்தான வரவேற்பை பெற்றுள்ளார். இதைப் பார்த்து அவரை அமைச்சராக்க வேண்டும் என்று தலைவரிடம் வலியுறுத்தியவர்களில் நானும் ஒருவன்.

அனைவரது எதிர்பார்ப்பையும் விஞ்சி அமைச்சர் உதயநிதி அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். முதலமைச்சரைப் போலவே கள ஆய்வும் சிறப்பாக நடத்தி வருகிறார். தமிழக விளையாட்டு துறையை நோக்கி உலகின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

இப்படிப்பட்ட ஆற்றல்மிகு செயல்வீரரைக் குறித்து நான் எப்படி தவறாகப் பேசுவேன்?

அதேபோன்று, நமது திராவிட மாடல் ஆட்சியில் அனைத்து அமைச்சர்களும் ஓரணியாக ஒன்றுபட்டு மகத்தான சாதனைகளை எய்தும் வண்ணம் செயல்பட்டு வருகின்றனர். அவ்வாறு இருக்கையில் நான் ஏன் அவர்களைப் பற்றி தவறாக பேசவேண்டும்?

நான் அரசியலுக்கு வந்தது முதல் எனக்கு நல்ல வழிகாட்டியாகவும், ஆலோசகராகவும், உறுதுணையாகவும் இருப்பவர் திரு. சபரீசன் அவர்கள்.

எதிர்க்கட்சிகள் கூட உதயநிதி மற்றும் சபரீசன் மீது எந்த குற்றச்சாட்டும் வைக்கவில்லை. எனவே, அவர்கள் மீது களங்கம் சுமத்தும் வீண் முயற்சியில் இதுபோன்ற ஜோடிக்கப்பட்ட ஆடியோக்கள் உருவாக்கப்படுகின்றன.

இவர்களிடம் இருந்து என்னைப் பிரிப்பதன் மூலமாக தங்களது அரசியல் எண்ணங்களை நிறைவேற்றத் துடிக்கிறது ஒரு பிளாக் மெயில் கும்பல். ஆனால் இது போன்ற கோழைத்தனமான முயற்சிகள் ஒருபோதும் வெற்றி பெறாது. தி.மு.கழகம் தொடங்கிய காலத்திலிருந்தே, ஒரே இயக்கம், ஒரே கட்சி, ஒரே குடும்பம் என அனைவரும் ஒற்றுமையுடன் இயங்கி வருகிறோம். இனி வரும் காலங்களிலும் அவ்வாறே தொடர்வோம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+