Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“நோ மீன்ஸ் நோ”..நிர்மலா சீதாராமனிடம் நேருக்கு நேர் சொன்ன தங்கம் தென்னரசு! ஆன்லைன் ரம்மி பற்றி பேச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்று நடைபெற்ற 50-வது சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சில் கூட்டத்தில் தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டு பல்வேறு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தார்.

டெல்லி விஞ்ஞான் பவனில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று 50-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அரசின் சார்பில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டார்.

Thangam Thennarasu oppose Union govt scheme infront Nirmala Sitharaman in Gst council meeting

இக்கூட்டத்தில், பேசிய தங்கம் தென்னரசு, "தமிழ்நாடு அரசு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்தும் சட்டம் இயற்றியுள்ளது. எனவே, சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச்சட்டத்தின் கீழ் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு வரி விதிப்பதற்கான பரிந்துரைகள், தமிழ்நாடு அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு முரணாக இந்த பரிந்துரைகள் இருக்கக் கூடாது என்று அமைச்சர் வலியுறுத்தினார்.

மேலும், சரக்குகள் மற்றும் சேவைகள் இணையத்தை, பண மோசடி தடுப்புச் சட்டம், 2002 இன் கீழ் சேர்த்து மத்திய அரசால் வெளியிடப்பட்டு உள்ள அறிவிக்கை வணிகர்களின் நலனுக்கு எதிராகவும், சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச்சட்டத்தின் கீழ் சட்டமீறல்களை கிரிமினல் குற்றமற்றதாக மாற்றும் அடிப்படை நோக்கத்திற்கு எதிரானதாகவும் உள்ளதால், நாடெங்கும் உள்ள வணிகர்களுக்கு, குறிப்பாக சிறு வணிகர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு இதை எதிர்க்கிறது என்று குறிப்பிட்டார்.

அரசியலமைப்புச் சட்டத்தின் 11 வது மற்றும் 12 வது அட்டவணையில் உள்ள, பஞ்சாயத்து மற்றும் நகராட்சி அமைப்புகளின் செய் கடமைகள் தொடர்பான சேவைகள் மற்றும் 25 விழுக்காடுக்கு பொருட்கள் மிகாத கூட்டு வழங்குகை சேவைகளை, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மத்திய மாநில அரசுகள் பெறும்போது தற்போது சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச்சட்டத்தின் கீழ் வரிவிலக்கு உள்ளது.

இதனை குறிப்பிட்ட சில வரிவிலக்கு இனங்கள் என வரையறுத்து மாற்றியமைக்க உத்தேசித்துள்ள திருத்தத்தால் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மாநில அரசுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் என்பதால் தமிழ்நாடு அரசு தொடர்ந்து இதை எதிர்த்து வருகிறது. எனவே அதனை முற்றிலுமாக கைவிடுமாறு வலியுறுத்தினார்.

சரக்கு மற்றும் சேவை வரிச்சட்டத்தின் கீழ் அமைக்கப்பட வேண்டிய மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் மாநில அமர்வுகளுக்கு நியமிக்க வேண்டிய நீதித்துறை மற்றும் தொழில்நுட்ப உறுப்பினர்களை தேர்வு செய்ய மாநில அளவிலான தேர்வு செய்யும் குழுவுக்கு அதிகாரமளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என்றும் இக்கூட்டத்தில் குறிப்பிட்டார்.

இதனையடுத்து, கேன்சர் நோய்க்கான விலை உயர்ந்த மருந்தினை தனிநபர் பயன்பாட்டிற்கு இறக்குமதி செய்யும் போது செலுத்த வேண்டிய ஒருங்கிணைந்த சரக்குகள் மற்றும் சேவைகள் வரியினால் ஏற்படும் கூடுதல் செலவினத்தை குறைப்பதற்கு வரிவிலக்களிக்கும் பரிந்துரைக்கு தமிழ்நாடு அரசு தனது ஆதரவு தெரிவிக்கிறது என்றும் அவர் கூறினார்.

குறிப்பிட்ட அரிய வகை நோய்களை குணப்படுத்த பயன்படுத்தப்படும் மருந்துகள் மற்றும் உணவுகளை தனிநபர் பயன்பாட்டிற்கு இறக்குமதி செய்யும் போது செலுத்த வேண்டிய ஒருங்கிணைந்த சரக்குகள் மற்றும் சேவைகள் வரிக்கு விலக்கு அளிக்கும் பரிந்துரைக்கும் தமிழ்நாடு அரசு தனது ஆதரவை தெரிவிப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+