காசு வாங்கிக் கொண்டு செய்தி வெளியிடும் ஊடகங்கள்! வார்த்தயை விட்ட அமைச்சர்! தங்கம் கொடுத்த பதிலடி!
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்துபோது, சில பத்திரிகைகள் காசு வாங்கிக்கொண்டு அரசுக்கு எதிராக செய்தி வெளியிடுவதாகப் பேசினார். இதற்கு மறுப்பு தெரிவித்த முன்னாள் அமைச்சரும் திருச்சுழி எம்எல்ஏவுமான தங்கம் தென்னரசு பொத்தாம் பொதுவாக பத்திரிகைகள் காசு வாங்கிக்கொண்டு எழுதுகின்றன என்று அமைச்சரே அவையில் சொல்வது அழகல்ல என கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் துரை ரீதியான மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று சட்டப்பேரவையில் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது குறுக்கிட்டுப் பேசிய அமைச்சர் கீர்த்தனா, சில ஊடகங்களும் பத்திரிகைகளும் காசு வாங்கிக்கொண்டு அரசுக்கு எதிராகச் செய்தி வெளியிடுவதாகக் குறிப்பிட்டார். இதற்கு மறுப்பு தெரிவித்துப் பேசினார் திருச்சுழி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான தங்கம் தென்னரசு.
அவையில் பேசிய அவர்," ஒரு அரசாங்கத்தின் செயல்பாடுகளை மூன்றாவது கண்ணாக இருந்து விமர்சனங்களாக எடுத்துச் சொல்வதுதான் பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களின் பணி. இதுபோன்று பத்திரிகைகளில் வெளியாகும் செய்திகளைப் பற்றி சட்டப்பேரவையில் பண்பின்றிப் பேசக் கூடாது. என்ன நடக்கிறது என்பதைதான் ஊடகங்கள் செய்தியாக வெளியிடுகிறார்கள்.
அப்படி செய்திகள் வெளியானால்தான் ஆட்சியின் செயல்பாடுகளை ஒப்பிட்டுப் பார்க்கவும் முடியும். இவ்வாறான சூழலில் செய்தி வெளியிடும் பத்திரிகைகளைப் பார்த்து, ஆளுங்கட்சிக்கு எதிராகக் காசு வாங்கிக்கொண்டு எழுதுகிறார்கள், எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாக எழுதுகிறார்கள் என்று பொத்தாம் பொதுவாகப் பத்திரிகைகளைப் பற்றி அமைச்சர் சொல்லக் கூடாது.
ஊடகங்கள் எப்போதுமே ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என இருபுறம் குறித்தும் எழுதுவார்கள். ஒரு குறிப்பிட்ட பத்திரிகை ஒப்பீடு ஒன்றை முன்வைத்து, அதற்கான புள்ளிவிவரங்களை வெளியிட்டிருக்கிறது என்பதற்காக அந்தப் பத்திரிகை காசு வாங்கிக்கொண்டு எழுதுகிறது என்று கூறுவது, ஒட்டுமொத்தமாக அனைத்துப் பத்திரிகைகளையும் அவ்வாறு குறிப்பிடுவதாகவே அமைந்துவிடும். அதுமட்டுமின்றி இது அனைத்து பத்திரிகைகளையும் அவமதிப்பதாக அமைந்துவிடும். எனவே, பத்திரிகைகள் குறித்து அமைச்சர் இதுபோன்று சட்டப்பேரவையில் பேசுவது அழகல்ல" என்று தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications
