புழல் சிறைக்கே போன தங்கமணி.. ஜெயக்குமாருடன் சந்திப்பு.. உடல்நிலையை விசாரித்து ஆறுதல்
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ள நிலையில் முன்னாள் அமைச்சர் தங்கமணி அவரைச் சந்தித்து பேசியுள்ளார்.
சென்னை: புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை முன்னாள் அமைச்சர் தங்கமணி சந்தித்து பேசியுள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் ஜெயக்குமாரை புழல் சிறைக்கு சென்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர் என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக பிரமுகரைத் தாக்கி, அரைநிர்வாணமாக அழைத்துச் சென்றது தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்ட நிலையில் அதற்கு ஜாமீன் பெற்ற அதே நேரத்தில் ஜெயக்குமார் மீது மேலும் ஒரு மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
5 கோடி ரூபாய் மதிப்புள்ள தொழிற்சாலையை அபகரித்தது தொடர்பான புகாரின் பேரில் சென்னை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனால் சிறையிலேயே இருக்கும் நிலை ஜெயக்குமாருக்கு ஏற்பட்டது. கடந்த 20 நாட்களுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

புழல் சிறையில் உள்ள ஜெயக்குமாரை கடந்த மாதம் 24ஆம் தேதியன்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்தித்து பேசினார். அதே போல அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜெயக்குமாரை ஜெயிலில் சந்தித்து பேசி ஆறுதல் கூறினார். இந்த நிலையில் நில அபகரிப்பு வழக்கில் ஜெயக்குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமின் கொடுத்துள்ளது.
8 கிரவுண்டில் உள்ள தொழிற்சாலையை மிரட்டி அபகரித்ததாக மகேஷ் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மட்டுமில்லாது அவரது மகள் ஜெயப்பிரியா, அவரது கணவர் நவீன் மீதும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று பண மோசடி வழக்கில் திருச்சியில் 2 வாரம் தங்கியிருந்து காவல்நிலையத்தில் கையெழுத்திட நிபந்தனை விதிக்கப்பட்டு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. ஜெயக்குமார் மீது இருந்த 3 வழக்கிலும் அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ள நிலையில் விரைவில் ஜெயக்குமார் சிறையிலிருந்து வெளிவருவார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை முன்னாள் அமைச்சர் தங்கமணி சந்தித்து பேசியுள்ளார்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications