சங்கீதாவுக்கு துரோகம்.. தாய், தந்தையை மதிக்காத விஜய் எப்படி முதல்வர் ஆக முடியும்? தனியரசு அட்டாக்
சென்னை: அன்பு மனைவிக்கு, நம்பிக்கைக்கு மோசடி செய்த நபராக இருக்கும் விஜய்யால்.. தான் ஈன்ற மகன், மகளின் கண்ணியத்துக்கு குறைவாக செயல்பட்ட விஜய்யால் நாட்டுக்கு முதல்வராக எப்படி வர முடியும், வர முடியாது.. கட்டாயமாக தோற்கடிப்பார்கள்.. என்று தனியரசு கூறியுள்ளார். மேலும் அந்த நடிகையுடன் திருமண நிகழ்ச்சிக்கு வந்தது குறித்தும் தனியரசு விமர்சித்து பேசியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் தலைவரும், நடிகருமான விஜய்யின் மனைவி சங்கீதா அவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் விஜய்க்கு வேறு ஒரு நடிகையுடன் தொடர்பு இருக்கிறது, இதை அறிந்து அவரிடம் கேட்டபோது சரி என்று சொல்லிவிட்டு என்னை நிராகரிக்க தொடங்கினார் என்று கூறியுள்ளார்.

தனியரசு விமர்சனம்
மேலும் அதன் பிறகு அந்த நடிகையோடு உறவை தொடர்ந்ததாவும், இது கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் அவர் மனுவில் கூறியிருந்தார். விஜய் மீது மனைவி விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் விஜய் சென்னையில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு விஜய் திரிஷாவுடன் வந்து பங்கேற்றது மேலும் விமர்சனத்திற்குள்ளானது. இது தொடர்பாக தற்போது தனியரசு விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறியதாவது:-
முதல்வராக எப்படி வர முடியும்?
தன் அன்பு மனைவி சங்கீதாவுக்கே துரோகம் இழைத்த, துரோகம் செய்தவர் விஜய். ஒரு நடிகன் நாடாளக் கூடாது என்ற நிலை ஏன் நீடிக்கிறது. அந்த கருத்தை நானும் தொடர்ந்து சொல்லி வந்து இருக்கிறேன்.. இப்போது அந்த நடிகர் ஒரு தகுதியற்றவர். அன்பு மனைவிக்கு, நம்பிக்கைக்கு மோசடி செய்த நபராக இருக்கும் விஜய்.. தான் ஈன்ற மகன், மகளின் கண்ணியத்துக்கு குறைவாக செயல்பட்ட விஜய்யால் ஒரு கட்சியை தலைமையேற்று நடத்துவதற்கே தலைமை இல்லாத நிலையில், ஒரு நாட்டுக்கு முதல்வராக எப்படி வர முடியும், வர முடியாது.. கட்டாயமாக தோற்கடிப்பார்கள்..
ஆணவத்தோடு அந்த நடிகையுடன்
மக்கள் கட்டாயமாக விஜய்யை தூக்கி அடிப்பார்கள்.. மக்கள் ஒட்டு மொத்தமாகவே விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை நிராகரித்துவிட்டார்கள். ஏற்கனவே கரூர் சம்பவத்தில் 41 உயிர்களை பலிவாங்கிய தமிழக வெற்றிக் கழகம் அதில் இருந்து மீள முடியாமல் இருக்கும் விஜய் இப்போது மனைவிக்கும் துரோகம் இழைத்து, திருமணத்தை மீறிய உறவு வைத்து, சங்கீதா கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி வழக்கு நீதிமன்றம் வரை சென்று இருக்கும் நிலையில் தேர்தலை சந்திக்க வருகிறார்.
இன்னும் சொல்லப்போனால் அந்த செய்தி வந்த பிறகு அதனை உறுதிப்படுத்தும் வகையில், பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சொன்ன போது கூட சில பேர் கண்டித்தனர். ஆனால் அதையெல்லாம் இல்லை.. நான் அப்படித்தான்.. ஆம், என்று சொல்லி ஆணவத்தோடு ஒரு திருமண நிகழ்ச்சிக்கு நடிகர் விஜய் அந்த சம்பந்தப்பட்ட நடிகையோடு வந்து பொது வெளியில் காட்சியளிக்கிறார் என்றால், அவரிடம் இருந்து எந்த கண்ணியத்தை, மான்பை எதிர்பார்க்க முடியும்.
தாய், தந்தையையே மதிக்கல
ஆகவே அப்படிப்பட்ட ஒரு நபர் பெண்களுக்கான சிறப்பு திட்டங்களை அறிவித்து இருப்பதாக சொல்வது பிழையானது. தவறானது. வார்டு உறுப்பினராக கூட நின்று வெற்றி பெற முடியாத விஜய், அரசியலில் கொள்கை, தத்துவம், கோட்பாடு என எதுவும் இல்லாத விஜய் பெண் இனத்தின் மீதும் பற்று இல்லாமல், மானுட சமூகத்தின் மீதும் பற்று இல்லாமல்..
தந்தையையும், தாயையும் மதிக்க தெரியாத விஜய் தமிழ்நாட்டின் முதல்வராக அரியணை ஏறப்போவதாக நினைப்பது பகல் கனவு.. நாட்டு மக்கள் நிராகரிப்பார்கள்.. அவர் அப்படி வந்தாலும் பெண் சமூகத்திற்காக செய்யப்போவதாக சொல்லியிருக்கிற திட்டங்கள் மாயமாகும்.. பிழையாகும்.. என்று கூறினார்.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications