ஆஹா.. சசிகலாவை பாருங்க.. முதல்முறையாக இப்படி பேசி இருக்காங்க.. விழித்து பார்க்கும் அதிமுக!
சென்னை: தஞ்சாவூர் தேர் விபத்து விவகாரத்தில் அதிமுகவின் செயல்பாடுகளை சசிகலா மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார்.
நேற்று சட்டசபையில் தஞ்சாவூர் தேர் விபத்து தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை, மகாமகம் குளத்தில் ஏற்பட்ட விபத்து பற்றி பேசினார். ஆனால் இவரின் பேச்சை அதிமுகவினர் கடுமையாக எதிர்த்தனர்.
கும்பகோணம் மகாமக விழாவிலும் 48 பேர் இறந்தார்கள் என்று என காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை தெரிவித்தார். அதிமுக உறுப்பினர்கள் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் அமளியில் ஈடுபட்டனர்.

அவை வெளிநடப்பு
அவையில் இருந்து வெளிநடப்பு செய்த அதிமுகவினர் மீண்டும் அவைக்குள் வந்து, தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர். செல்வப்பெருந்தகை கூறிய கருத்தை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று அதிமுகவினர் கூறி தர்ணா செய்தனர். ஆனால் சபாநாயகர் அப்பாவு, செல்வப்பெருந்தகை கருத்தை அவை குறிப்பில் இருந்து நீக்க மறுத்துவிட்டார். இதனால் அதிமுகவினர் அவைக்கு முன்பாக கூடி கடுமையாக கோஷம் எழுப்பினர். இது அவையில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

மகாமக விபத்து
கும்பகோணம் மகாமக விபத்து பற்றி சட்டசபையில் பேசியது தவறு, ஜெயலலிதா பெயரை குறிப்பிட்டு சட்டசபையில் செல்வ பெருந்தகை பேசியது தவறு. திமுகவினரின் தூண்டுதல் காரணமாகவே செல்வப்பெருந்தகை பேசியுள்ளார் என்று எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் பேசினார். எடப்பாடி பழனிசாமி இந்த தஞ்சாவூர் விவகாரத்தில் கூட தேவையின்றி அரசியல் செய்வதாக திமுக எம்எல்ஏக்கள் குற்றச்சாட்டு வைத்தனர்.

தஞ்சையில் என்ன நடந்தது?
இந்த நிலையில் நேற்று தஞ்சையில் பேசிய சசிகலா அதிமுகவின் இந்த செயலை மறைமுகமாக விமர்சனம் செய்தார். தஞ்சாவூரில் தேர் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு சென்று சசிகலா இரங்கல் தெரிவித்தார். அவர்களிடம் ஆறுதல் கூறிய சசிகலா அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, திருவிழாவில் தேர்களின் உயரங்களை நிர்ணயிப்பது பற்றி ஆலோசிக்க வேண்டும். இதை பற்றி மக்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

தேவையின்றி குறை கூற வேண்டாம்
இந்த விவகாரத்தில் தேவையின்றி குறைகூறுவதை விட்டுவிட்டு ஆக்கபூர்வமாக எதிர்கட்சிகள் செயல்பட வேண்டும். ஆக்கப்பூர்வமான விவாதங்களை முன்னெடுப்பதுதான் எதிர்க்கட்சிக்கு அழகு என்று சசிகலா குறிப்பிட்டார். நேற்று அவையில் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டதை சபாநாயகர் அப்பாவு விமர்சனம் செய்து இருந்தார். ஆளும் கட்சி எம்எல்ஏக்களும் விமர்சனம் செய்து இருந்தனர்.

எதிர்க்கட்சி சசிகலா
இந்த நிலையில்தான் இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டும். தேவையின்றி குறைகூற கூடாது என்று சசிகலா அதிமுகவை மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார். அதிமுகவில் மீண்டும் சசிகலா இணைவது சந்தேகம் ஆகியுள்ளது. இந்த நிலையில்தான் முதல்முறையாக எதிர்க்கட்சிகள் ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டும் சசிகலா அதிமுக மற்றும் எடப்பாடியை சீண்டி பேசி இருக்கிறார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications