தற்கொலையை தடுக்க முயன்ற புதுமாப்பிள்ளை ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு! சோகத்தில் ஆழ்ந்த தஞ்சை

Subscribe to Oneindia Tamil

தஞ்சை: கண் முன்னே ரயிலில் தற்கொலைக்கு முயன்ற முதியவரை காப்பாற்ற நினைத்து ரயிலில் அடிப்பட்டு கேட் கீப்பர் ராகுல் என்பவர் உயிரிழந்தார். கேட் கீப்பரான ராகுலுக்கு கடந்த 6 மாதத்திற்கு முன்பு தான் திருமணம் ஆகியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டம் கோபுராஜபுரம் ரயில்வே கேட்டில் ராகுல் (வயது 30) என்ற இளைஞர் கேட் கீப்பராக பணியாற்றி வந்தார். உத்தர பிரதேசத்தை சேர்ந்த இவருக்கு தெற்கு ரயில்வேயில் வேலை கிடைத்தால், சொந்த ஊரை விட்டுவிட்டு, தஞ்சை அருகே தங்கியிருந்து பணி செய்து வந்தார்.

Thanjavur Railway gate worker meets with tragic fate just six months after marriage

6 மாதங்களுக்கு முன்பு திருமணம்

ராகுலுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. புதுமாப்பிள்ளையான இவர் பாபநாசம் அருகே உள்ள ரயில்வே கேட்டில் நேற்று வழக்கம் போல பணியாற்றி கொண்டு இருந்தார். அப்போது இரவு 11.30 மணியளவில் நாகர்கோவில் - தாம்பரம் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டு இருந்தது. இரவு நேரத்தில் தண்டவாளம் அருகே 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சென்று கொண்டிருந்தார்.

காப்பாற்ற முயன்று ரயிலில் அடிபட்டு பலி

இதை ராகுல் கவனித்து இருக்கிறார். ரயில் வரும் போது தண்டவாளத்தின் குறுக்கே முதியவர் சென்றுள்ளார். முதியவர் தற்கொலைக்கு முயன்று இருக்கலாம் என கூறப்படும் நிலையில், இதனை கவனித்த ரயில்வே கேட் கீப்பர் ராகுல், பதறிப்போனார். தன் கண்முன்னே ஒரு உயிர் போவதை தாங்கி கொள்ள முடியாது என கருதிய ராகுல், முதியவரை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்று ஒடிச்சென்று, காப்பாற்ற முயற்சித்தார்.

ஆனால், கண்ணிமைக்கும் நேரத்தில் ரயில் இருவர் மீது பயங்கரமாக மோதியது. ரயில் மோதியதில் ராகுலும் அந்த முதியவரும் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர். சில நிமிடங்களில் இருவரும் அங்கேயே துடிதுடித்து பலியாகினர். ரயில் தண்டவாளத்தில் இரண்டு உடல்கள் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு விரைந்து வந்த ரயில்வே போலீசார், 2 பேரின் உடல்களையும் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பிரதேப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ரயிலில் அடிபட்டு இறந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? தற்கொலை செய்யும் நோக்கத்தில் வந்தாரா? அல்லது தண்டவாளத்தை கடக்க முயன்று ரயிலில் அடிபட்டு இறந்தாரா? என்று பல்வேறு கோணங்களிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருமணம் ஆன 6 மாதங்களில், தற்கொலையை தடுக்க முயன்று ரயில்வே கேட் ஊழியர் அதே ரயிலில் அடிபட்டு பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பிரேதப் பரிசோதனைக்கு பிறகு ராகுலின் உடலை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. ரயில்வே கேட் ஊழியர் ராகுலுக்கு நேர்ந்த துயர சம்பவம், சக ஊழியர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+