மரக்கிளை இலையில் பளிச்னு ஆசிரியரின் பெயர்.. மண்டைக்கேறிய காமத்தால் தஞ்சாவூர் மாணவன் செய்த காரியம்
சென்னை: சிறுவர், சிறுமிகளின் நலனை பேணிக் காப்பதற்காகவே போக்சோ உள்ளிட்ட எண்ணற்ற சட்டங்கள் நம்முடைய நாட்டில் அமலில் உள்ளன. அதேபோல பாலியல் வக்கிரங்களை அரங்கேற்றுவர்களை தண்டிக்கவே நீதிமன்றங்களும் துணையாய் நிற்கின்றன.. எனினும், பிள்ளைகளுக்கு ஒழுக்கத்தையும், கல்வியையும் போதிக்கக்கூடிய சில ஆசிரியர், ஆசிரியைகளே வக்கிரமான காரியங்களில் இறங்கிவிடுவது அதிர்ச்சியை தந்துவிடுகிறது. இதோ தஞ்சாவூரில் ஒரு வித்தியாசமான சம்பவம் நடந்துள்ளது.
சமீபத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு கொடுமை நடந்தது.. தானே நகரில் ஷில் - பாடா என்ற பகுதியில் வசித்து வரும் தம்பதி, தங்களது 10 வயது மகனை, பெங்களூருவில் உள்ள பிரபலமான பள்ளியில் சேர்த்து படிக்க வைத்து வருகிறார்கள். இந்த பள்ளியின் 22 வயது ஆசிரியைக்கு, இந்த 10 வயது மாணவன் மீது தவறான பார்வை விழுந்துள்ளது..

கெஸ்ட் ஹவுஸ்
மாணவனை கெஸ்ட் ஹவுஸுக்கு பலமுறை அழைத்து, பாலியல் தொல்லை தந்து, பலாத்காரமும் செய்ததாக கூறப்படுகிறது. இதைபற்றி வெளியில் சொன்னால், உன்னுடைய அம்மாவையும், அப்பாவையும் கொன்றுவிடுவதாகவும், அந்த டீச்சர் மிரட்டியிருக்கிறார்
நாளுக்கு நாள் டீச்சரின் தொல்லை அதிகமாகிவிட்டதால், தனக்கு நடந்த அக்கிரமங்களை பெற்றோரிடம் சொல்லி அழுதிருக்கிறான் சிறுவன்.. இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக இது குறித்து போலீசில் புகார் தந்ததன் அடிப்படையில், 22 வயதான ஆசிரியை மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் மற்றும் போக்சோ சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணையும் நடந்து வருகிறார்கள்.
16 வயது மாணவன்
நம்முடைய தமிழகத்திலும் சிறுவர்களுக்கான பாதுகாப்பு குறைந்து வருகிறது. சென்னை: அசோக் நகரில் பிரபல தனியார் பள்ளியின் 40 வயது தமிழ் ஆசிரியர் ஒருவர், தன்னுடைய வகுப்பில் படிக்கும் 16 வயது மாணவனை பலாத்காரம் செய்துள்ளார்... இதனால் மாணவனுக்கு ஆசனவாயில் ஆபரேஷன் செய்யும் அளவுக்கு நிலைமை சென்றதும், இதனால் பெற்றோர்கள் போராட்டம் நடத்தியதும் நினைவிருக்கலாம்.
இதோ தஞ்சாவூர் மாவட்டசேதுபாவாசத்திரம் அருகே உள்ளது சின்னமனை என்ற பகுதி.. இங்கு வசித்து வருபவர் விஷ்ணு.. இவருக்கு 20 வயதாகிறது.. மதுரை அண்ணா பல்கலைகழக பொறியியல் கல்லூரில் கம்ப்யூட்டர் சயின்ஸ் 2ம் ஆண்டு படித்து வருகிறார்..
இவர் தீபாவளிக்கு விடுமுறை என்பதால் சொந்த ஊருக்கு வந்துள்ளார். ஆனால் நேற்று காலை மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.. பள்ளி சுவரிலிருந்த கொக்கியில், வேட்டியால் தூக்கு போட்டுக் கொண்டார்.. இதுகுறித்து தகவலறிந்து சேதுபாவாசத்திரம் போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
மரக்கிளை இலை
அப்போது, விஷ்ணுவின் சடலம் அருகில், ஒரு மரக்கிளையின் இலையில், என் சாவுக்கு பாபு தான் காரணம் என்று பேனாவில் எழுதப்பட்டிருந்தது தெரிய வந்தது.
உடனே போலீசார் யார் அந்த பாபு? என விசாரணையில் இறங்கினார்.. அப்போதுதான், விஷ்ணு தற்கொலை செய்து கொண்ட பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருபவர் பாபு (40) என்பதும், மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
உடனே போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, பல்வேறு திடுக் தகவல்கள் வெளியாகின..அதாவது, பள்ளியின் முன்னாள் மாணவர் என்ற முறையில் விஷ்ணுவுடன் ஆசிரியர் பாபுவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் பாபுவிடம் தவறான முறையில் நடந்து கொள்ள துவங்கியிருக்கிறார் விஷ்ணு..
3 மாதங்களாக டார்ச்சர்
கடந்த 3 மாதங்களாக விஷ்ணு விடுமுறைக்கு ஊருக்கு வரும்போதெல்லாம், பாபுவுக்கு போனை போட்டு, ஓரின சேர்க்கை டார்ச்சர் கொடுத்து வந்தாராம் விஷ்ணு..
விஷ்ணுவின் நடவடிக்கைகளை கண்டு அதிர்ச்சியும் கவலையும் அடைந்த ஆசிரியர் பாபு, மாணவனின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு கண்டுக்கொள்ளாமல் இருந்துள்ளார். எனினும், விஷ்ணுவின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது..
இதனால் விஷ்ணுவின் செயல்பாடுகள் குறித்து அவரது குடும்பத்தினரிடம் ஆசிரியர் பாபு கூறியிருக்கிறார்.. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், தங்கள் மகன் விஷ்ணுவை கண்டித்ததுடன், இனிமேல் விஷ்ணுவால் எந்த தொந்தரவும் உங்களுக்கு வராது என்று ஆசிரியர் பாபுவிடம் உறுதி தந்திருக்கிறார்கள்.
அண்ணன் அட்வைஸ்
இந்நிலையில், தீபாவளி முடிந்து மீண்டும் கல்லூரிக்கு செல்ல, சொந்த ஊரிலிருந்து நேற்று முன்தினம் விஷ்ணு கிளம்பினார். அப்போது பாபுவை அவரது அண்ணன் பஸ் ஏற்றிவிட வந்தபோது, பாபுவுக்கு அறிவுரைகளையும் சொல்லிவிட்டு போயுள்ளார்.
இது விஷ்ணுவுக்கு எரிச்சலை தந்துள்ளது.. இதற்கெல்லாம் காரணம், தன்னை பற்றி வீட்டில் போட்டுத்தந்த ஆசிரியர் பாபுதான் என்றும் விஷ்ணுக்கு கோபம் அதிகரித்துள்ளது.. எனவே எப்படியாவது ஆசிரியர் பாபுவுக்கு கெட்ட பெயரை தந்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில், ஆசிரியர் பாபுவின் பெயரை எழுதி வைத்ததுடன், அவர் வேலை பார்க்கும் பள்ளி வளாகத்திலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.
ஆசிரியர், ஆசிரியைகளால் தொல்லைகள் வருவதாக சொல்லப்படும் நிலையில், ஆசிரியரை மாணவன் டார்ச்சர் செய்த சம்பவம் தஞ்சாவூரிலும் அதிர்ச்சியை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications