தட்டி தூக்கும் "நடமாடும் நகைக்கடை".. அதிமுக திமுகவின் தலைவிதியை தீர்மானிக்கும் ஹரி நாடார்.. சர்வே!
சென்னை: தென்காசியில் உள்ள ஆலங்குளம் தொகுதியில் திமுக, அதிமுகவின் தலைவிதியை ஹரிநாடார்தான் தீர்மானிக்க போகிறாராம்.. சொல்வது தந்தி டிவி சர்வே!
தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பாக நிறைய கருத்து கணிப்புகள் நாளுக்கு நாள் வெளியாகிக்கொண்டு இருக்கிறது. இதுவரை வெளியான பல்வேறு கருத்து கணிப்புகளில் திமுகதான் முன்னிலை வகிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் அதிமுக பல்வேறு முக்கியமான தொகுதிகளில் கடுமையான பைட் கொடுக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று வெளியான தந்தி டிவி கருத்து கணிப்பில் சில சுவாரசியமான தகவல்கள் அடங்கி உள்ளன.

சுவாரசியம்
தமிழக சட்டசபை தேர்தலில் பனங்காட்டுப் படை கட்சி சார்பில் பல்வேறு இடங்களில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் தென்காசியில் இருக்கும் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிடுகிறார். தொகுதிக்கு ஹெலிகாப்டரில் செல்வது, எப்போதும் பெரிய படையோடு பிரச்சாரம் செய்வது, கிலோ கணக்கில் கழுத்தில் மட்டும் நகை போட்டு இருப்பது என்று ஹரி நாடார் தேர்தல் நேரத்தில் கலக்கி வருகிறார்.

கலக்கல்
நடமாடும் தங்க மாளிகையான இவர் ஒரு பக்கம் கோலிவுட்டில் படம் நடிக்கும் பணிகளை செய்து வந்தாலும் இன்னொரு பக்கம் தேர்தல் பிரச்சாரத்திலும் பிசியாக இருக்கிறார். இந்த நிலையில் ஆலங்குளம் தொகுதியில் அதிமுக - திமுகவின் தலைவிதியை ஹரிநாடார்தான் தீர்மானிக்க போகிறார் என்று தந்தி டிவி கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது. ஆலங்குளத்தில் அதிமுக ஜெயிக்குமா அல்லது திமுக வெற்றிபெறுமா என்பதை ஹரி நாடார்தான் தீர்மானிக்க போகிறாராம்.

எப்படி
தென்காசி ஆலங்குளம் தொகுதியில் தந்தி டிவியின் கருத்து கணிப்பின்படி அதிமுக 41-47% வாக்குகளை பெறும். திமுக இங்கு அதிகமுகவிற்கு கடுமையான போட்டியை கொடுக்கும். திமுக 39-45% வாக்குகளை பெற உள்ளது. இதனால் இரண்டு கட்சியில் யாருக்கும் வெற்றி வாய்ப்பு என்பது இன்னும் உறுதியாகவில்லை. இங்கு கடும் இழுபறியே நீடிக்கிறது .

ஹரி நாடார் வாக்கு
இந்த தொகுதியில் ஹரி நாடார் 4-10% வாக்குகளை பெற உள்ளார் . இவர்தான் இங்கு மூன்றாவது இடம் பிடிக்கிறார். திமுக, அதிமுகவின் வாக்குகளை ஹரி நாடார்தான் பிரிக்கிறார். இரண்டு கட்சிகளில் யாருக்கு வெற்றி என்பதை தீர்மானிக்க போவது ஹரி நாடார் பெற போகும் இந்த 10% வாக்குகள்தான். இவருக்கு வெற்றி வாய்ப்பு இல்லையென்றாலும் திமுக, அதிமுகவில் யாருடைய வாக்குகளை இவர் பிரிப்பார் என்பதை பொறுத்தே முடிவுகள் மாறும்.

தேர்தல் தலைவிதி
ஆலங்குளம் தொகுதியில் இருக்கும் பெருவாரியான சாதி வாக்குகள், இவரின் தனிப்பட்ட பிரபலம் எல்லாம் ஹரி நாடாருக்கு தேர்தலில் உதவுகிறது. முக்கியமாக இவரின் பிரச்சார யுக்தி, லோக்கல் நட்பு பெரிய அளவில் கை கொடுக்கிறியாது . ஹரி நாடாரின் இந்த எழுச்சி மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இவர் 10% + வாக்குகளை பெற்றார் என்றால் அது தேர்தல் நேரத்தில் ஆலங்குளம் தொகுதியை மிகவும் சுவாரசியமானதாக்க வாய்ப்புகள் உள்ளன!
-
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications