வட மாவட்டங்களில் கடும் போட்டி.. களத்தில் எதிரொலிக்கும் கூட்டணி பலம்... தந்தி டிவி கருத்துக்கணிப்பு
சென்னை: இன்று வட மாவட்டங்களில் உள்ள தொகுதிகளின் கருத்துக்கணிப்பு முடிவுகளைத் தந்தி டிவி வெளியிட்டுள்ளது. இதில் திமுக மற்றும் அதிமுக கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் பாமக, பாஜக, தமாகா ஆகிய கட்சிகளுடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளது. மறுபுறம் திமுகவும் காங்கிரஸ், இடதுசாரிகள். விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து ஒரு வலுவான கூட்டணியை அமைத்துள்ளது.
இதுதவிர மக்கள் நீதி மய்யம், அமமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும் தேர்தலில் களம் காண்கிறது. பல்வேறு செய்தி நிறுவனங்களும் தேர்தல் முடிவுகள் தொடர்பான கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டு வருகின்றன.

வட மாவட்டங்கள்
தந்தி டிவி தினசரி 50 தொகுதிகள் என்ற அடிப்படையில் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று வட மாவட்டங்களில் உள்ள தொகுதிகளின் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் அதிமுக+ 42-48% வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளது. அதைத்தொடர்ந்து திமுக+ 41-47%, அமமுக +3-6%, நாம் தமிழர் 3-6%, மநீம+4-7% வாக்குகளைப் பெறுகிறது.

கடும் போட்டி
உத்தரமேரூர் தொகுதியில் திமுக+ 44-50% வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளது. அதைத்தொடர்ந்து அதிமுக+ 42-48%, அமமுக +3-6%, நாம் தமிழர் 3-6%, மநீம+1-4% வாக்குகளை பெறுகிறது. வந்தவாசி தொகுதியில் திமுக+ 45-51% வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளது. அதைத்தொடர்ந்து அதிமுக+ 43-49%, அமமுக +1-4%, நாம் தமிழர் 3-6%, மநீம+1-4% வாக்குகளை பெறுகிறது. செங்கம் தொகுதியில் அதிமுக+ 45-51% வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளது. அதைத்தொடர்ந்து, திமுக+ 44-50%, அமமுக +1-4%, நாம் தமிழர் 2-5%, மநீம+1-4% வாக்குகளை பெறுகிறது.

Array
ஆரணியில் அதிமுக+ 45-51% வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளது. அதைத்தொடர்ந்து திமுக+ 42-48%, அமமுக +2-5%, நாம் தமிழர் 3-6%, மநீம+1-4% வாக்குகளை பெறுகிறது. செய்யாறு தொகுதியில் திமுக+ 45-51% வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளது. அதைத்தொடர்ந்து அதிமுக+ 42-48%, அமமுக +1-4%, நாம் தமிழர் 4-7%, மநீம+1-4% வாக்குகளை பெறுகிறது.

திமுக vs அதிமுக
கலசப்பாக்கம் தொகுதியில் அதிமுக+ 44-50% வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளது. அதைத்தொடர்ந்து திமுக+ 42-48%, அமமுக +2-5%, நாம் தமிழர் 3-6%, மநீம+1-4% வாக்குகளை பெறுகிறது. போளூர் தொகுதியில் திமுக+ 45-51% வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளது. அதைத்தொடர்ந்து அதிமுக+ 42-48%, அமமுக +2-5%, நாம் தமிழர் 3-6%, மநீம+1-4% வாக்குகளை பெறுகிறது.

அள்ளும் திமுக
குடியாத்தம் தொகுதியில் திமுக+ 43-49% வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளது. அதைத்தொடர்ந்து அதிமுக+ 41-47%, அமமுக +5-8%, நாம் தமிழர் 3-6%, மநீம+1-4% தொகுதிகளை பெறுகிறது. கே.வி குப்பம் தொகுதியில் திமுக+ 44-50% வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளது. அதைத்தொடர்ந்து அதிமுக+ 43-49%, அமமுக +2-5%, நாம் தமிழர் 3-6%, மநீம+1-4% வாக்குகளை பெறும் என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

காரணம் என்ன
வட மாவட்டங்களில் உள்ள 10 தொகுதிகளில் அதிமுக கூட்டணி 4 தொகுதிகளிலும் திமுக கூட்டணி 6 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளதாகத் தந்தி டிவி தனது கருத்துக்கணிப்புகளில் கூறியுள்ளது. பாமகவுக்கு வட மாவட்டங்களில் பொதுவாகவே செல்வாக்கு அதிகம். இந்த செல்வாக்கு அரசின் மீது இருக்கும் அதிருப்தியை குறைப்பதாகும் அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக அமைவதாகவும் தந்தி டிவி தெரிவித்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications