வடக்கு மண்டலத்தில் அதிமுக ஆதிக்கம்.. திமுகவின் கையும் ஓங்குகிறது..5-ல் செம போட்டி.. தந்தி டிவி சர்வே
சென்னை: வடக்கு மண்டலத்தில் ராணிப்பேட்டை, வாணியம்பாடி உள்ளிட்ட 10 தொகுதிகளில் 5 தொகுதிகளில் திமுக-அதிமுக இடையே இழுபறி நிலவும் என்று தந்தி டிவி கருத்து கணிப்பு கூறியுள்ளது.
தமிழகத்தில் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் அரசியல் தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகளும் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

அணைக்கட்டில் அதிமுக கை ஓங்கும்
இந்த வகையில் தந்தி டி.வி நடத்திய கருத்து கணிப்புகள் தினமும் வெளியிடப்பட்டு வருகின்றன. இதில் வட மண்டலத்தில் உள்ள 10 தொகுதிகளுக்கான கருத்து கணிப்பை பார்ப்போம். வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதியில் அதிமுக 43-49%, திமுக+ 41-47%, அமமுக +4-7%, நாம் தமிழர் 4-7%, மநீம+1-4% வாக்குகள் பெறும் என்று கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டையில் திமுக ஆதிக்கம்
ராணிப்பேட்டை தொகுதியில் திமுக+ 43-49%, அதிமுக+ 41-47%, அமமுக +3-6%, நாம் தமிழர் 3-6%, மநீம+3-6% வாக்குகள் பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தொகுதியில் அதிமுக+ 41-47%, திமுக+ 39-45%, அமமுக +4-10%, நாம் தமிழர் 3-6%, மநீம+3-6% வாக்குகள் பெற வாய்ப்புள்ளதாக கணிப்பு கூறுகிறது.

வாணியம்பாடியில் யார்?
வாணியம்பாடி தொகுதியில் அதிமுக+ 41-47%, திமுக+ 40-46%, அமமுக +4-10%, நாம் தமிழர் 3-6%, மநீம+2-5% வாக்குகள் பெறும் என்று சர்வே கூறியுள்ளது. இங்கு அதிமுக, திமுக இடையே போட்டி கடுமையாக இருக்கும் நிலையில் அமமுக வெற்றியை தீர்மானிக்கும் கட்சியாக இருக்கும் என்று சர்வே கூறியுள்ளது. திருப்பத்தூர் தொகுதியில் அதிமுக+ 42-48%, திமுக+ 41-47%, அமமுக +6-9%, நாம் தமிழர் 3-6%, வாக்குகள் பெறும்.

ஜி.கே.மணி நிலை என்ன?
தருமபுரி தொகுதியில் திமுக+ 44-50%, அதிமுக+ 43-49%, அமமுக +2-5%, நாம் தமிழர் 3-6%, மநீம+1-4% வாக்குகள் பெறும். அரூர் தொகுதியில் திமுக-அதிமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது. இங்கு அதிமுக+ 42-48%, திமுக+ 41-47%, அமமுக +4-7%, நாம் தமிழர் 3-6%,மநீம+ 2-5% வாக்குகள் பெறும் என்று கணிப்பு கூறுகிறது. பென்னாகரம் தொகுதியில் திமுக+ 42-48%, பா.ம.க. + 41-47%, அமமுக +6-9%, நாம் தமிழர் 3-6%, மநீம+1-4% வாக்குகள் பெறும். இங்கு அதிமுக கூட்டணி சார்பில் பாமகவின் தலைவர் ஜி.கே.மணி போட்டியிடும் நிலை தொகுதியில் இழுபறி நிலவுவதாக தந்தி டிவி கணிப்பு கூறியுள்ளது.

நீயா? நானா? போட்டி
பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் அதிமுக+ 32-38%, திமுக+29-35%, அமமுக +25-31%, நாம் தமிழர் 3-6%,மநீம+ 1-4% வாக்குகள் பெறும். ஊத்தாங்கரை தொகுதியில் திமுக+ 44-50%, அதிமுக+ 43-49%, அமமுக + 1-4%, நாம் தமிழர் 4-7%, மநீம+1-4% வாக்குகள் பெறும் என்று தந்தி டிவி சர்வே கூறியுள்ளது. அதாவது இந்த 10 தொகுதிகளில் அதிமுக 3 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாகவும், திமுக 2 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாகவும், 5 தொகுதிகளில் திமுக-திமுக இடையே நீயா? நானா? போட்டி நிலவுகிறது என்று தந்தி டிவி கருத்து கணிப்பு கூறியுள்ளது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications