விஜய்யால் எட்ட முடியாமல் போன மேஜிக் நம்பர் 118.. கை கொடுக்காமல் நழுவிய 17 தொகுதிகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜய் அலை பரவலாக வீசியிருக்கிறது. இருப்பினும் ஆட்சி அமைக்க தேவையான 118 என்கிற மேஜிக் நம்பரை விஜய்யால் எட்ட முடியவில்லை. இந்த நம்பரை எட்டி பிடிக்க முடியாமல் போனதற்கு 17 தொகுதிகள் காரணமாக சொல்லப்படுகிறது.

இந்த 17 தொகுதிகளிலும் தவெக மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் தோல்வி அடைந்திருக்கிறது. இதில் வெற்றி பெற்றிருந்தால், தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்திருக்கும்.

Vijay

திருக்கோவிலூர், விக்கிரவாண்டி, பழனி, குளித்தலை, ஊட்டி மற்றும் கோவில்பட்டி என 6 தொகுதிகளில் 1000 வாக்குகளை விட குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர்கள் தோல்வியடைந்திருக்கின்றனர்.

  • திருக்கோவிலூர் - தவெக பெற்ற வாக்கு 72,748. வெறும் 285 வாக்குகளில் தோல்வி
  • விக்கிரவாண்டி - தவெக பெற்ற வாக்கு 68,817. வெறும் 910 வாக்குகளில் தோல்வி
  • பழனி - தவெக பெற்ற வாக்கு 66,293. வெறும் 693 வாக்குகளில் தோல்வி
  • குளித்தலை - தவெக பெற்ற வாக்கு 67,559. வெறும் 579 வாக்குகளில் தோல்வி
  • ஊட்டி - தவெக பெற்ற வாக்கு 47,512. வெறும் 976 வாக்குகளில் தோல்வி
  • கோவில்பட்டி - தவெக பெற்ற வாக்கு 60,800. வெறும் 843 வாக்குகளில் தோல்வி

அதேபோல புதுக்கோட்டை, திருமயம், திண்டுக்கல், கரூர், பாபநாசம், கிள்ளியூர் போன்ற தொகுதிகளில் 2000க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர்கள் தொல்வியடைந்திருக்கின்றனர்.

  • புதுக்கோட்டை - தவெக பெற்ற வாக்கு 64,958. வெறும் 1,867 வாக்குகளில் தோல்வி
  • திருமயம் - தவெக பெற்ற வாக்கு 56,709. வெறும் 1,492 வாக்குகளில் தோல்வி
  • திண்டுக்கல் - தவெக பெற்ற வாக்கு 73,358 வெறும் 1,131 வாக்குகளில் தோல்வி
  • கரூர் - தவெக பெற்ற வாக்கு 69,721 வெறும் 1,821 வாக்குகளில் தோல்வி
  • பாபநாசம் - தவெக பெற்ற வாக்கு 68,219 வெறும் 1,065 வாக்குகளில் தோல்வி
  • கிள்ளியூர் - தவெக பெற்ற வாக்கு 65,123 வெறும் 1,311 வாக்குகளில் தோல்வி

இந்த 12 தொகுதிகளில் ஜெயித்திருந்தாலே தவெக தற்போது ஆட்சி அதிகாரத்தை பிடித்திருக்கும். ஆனால், இந்த தொகுதிகளில் மிக குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருக்கிறது. இது தவிர, மேலும் 5 தொகுதிகளில் தவெக 2,500க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருக்கிறது.

  • திருவண்ணாமலை - தவெக பெற்ற வாக்கு 85,818 வெறும் 2,455 வாக்குகளில் தோல்வி
  • ஏற்காடு - தவெக பெற்ற வாக்கு 85,583 வெறும் 2,189 வாக்குகளில் தோல்வி
  • விருத்தாச்சலம் - தவெக பெற்ற வாக்கு 66,964 வெறும் 2,387 வாக்குகளில் தோல்வி
  • கோவை தெற்கு - தவெக பெற்ற வாக்கு 57,453 வெறும் 2,271 வாக்குகளில் தோல்வி
  • கீழ்வேளூர் - தவெக பெற்ற வாக்கு 53,830 வெறும் 2,278 வாக்குகளில் தோல்வி

மொத்தம் சேர்த்தால் 17 தொகுதிகள் வருகிறது. இந்த அனைத்து தொகுதிகளிலும் தவெகெ வெற்றிப் பெற்றிருந்தால் இந்நேரம் விஜய் முதலமைச்சராக பதவியேற்றிருப்பார். கூட்டணிக்காக காத்திருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+