திமுகவை எதிர்க்கும் அஸ்திரம்.. கமலாலயத்தில் சீறிய அமித் ஷா.. 4 மேஜர் உத்தரவு .. வெளியாகும் ரகசியம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் கமலாலயத்தில் அமித் ஷா நடத்திய ஆலோசனையில், திமுகவிற்கு எதிராக முக்கியமான 4 உத்தரவுகளை பிறப்பித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் எப்படியாவது தாமரையை மலர வைக்க வேண்டும்.. தனியாக கால் பாதிக்க வேண்டும்.. குறைந்தபட்சம் பிரதான எதிர்கட்சியாகவாது ஆக வேண்டும் என்பதற்காக பாஜக தீவிரமாக பணிகளை செய்து வருகிறது.

ஆளும் திமுக அரசுக்கு எதிராக தினம் ஒரு குற்றச்சாட்டு, தினம் ஒரு பேட்டி, புகார்கள் என்று பாஜக தலைவர் அண்ணாமலையும் பிஸியாக இருக்கிறார். ஆனால் சமூக வலைத்தளத்தில் ஏற்படும் அதிர்வலைகள், விவாதங்கள் எல்லாம் அப்படியே ஓட்டாக மாறுமா என்பது எல்லாம் சந்தேகம்தான்.

அதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன.

அமித் ஷா

அமித் ஷா

இந்த நிலையில் தமிழ்நாட்டில் பாஜகவை பலப்படுத்துவதற்காக மேலிடம் தீவிரமான முயற்சிகளை செய்து வருகிறது. தமிழ்நாட்டில் ஒரு சில பாஜக தலைவர்களின் செயலை தவிர மற்றவர்களின் செயல்பாடுகள் சரியாக இல்லை என்பது தலைமைக்கு ரிப்போர்ட்டாக சென்றுள்ளது. இதனால்தான் இனிமேல் இவர்களை நம்பி பயன் இல்லை என்று முடிவு செய்து மத்திய அமைச்சர்கள் 70 பேரை தமிழ்நாட்டிற்கு செல்லும்படி தேசிய தலைமையும் உத்தரவிட்டு இருக்கிறது.

மீட்டிங்

மீட்டிங்

தமிழ்நாட்டில் பாஜகவை எப்படி வளர்ப்பது, தமிழ்நாட்டில் கூட்டணி வைக்கலாமா வேண்டாமா? வலிமையாக இருக்கும் திமுகவை எப்படி சமாளிப்பது? என்பது உள்ளிட்ட பல கேள்விகள் பாஜகவினர் இடையே எழுந்துள்ளது. இந்த விவகாரங்களுக்கு இடையில் அமித் ஷா கடந்த சனிக்கிழமை சென்னைக்கு வந்தார். அவரின் சென்னை பயணத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. முக்கியமாக திமுகவிற்கு எதிராக 4 உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

திமுக

திமுக

திமுகவை சமாளிக்க வேண்டும் என்பதால் இந்த 4 உத்தரவுகளை அமித் ஷா பிறப்பித்து இருக்கிறாராம். உத்தரவு 1 - திமுகவை தொடர்ந்து எதிர்த்து பேட்டிகளை கொடுங்கள். அவர்களுக்கு எதிராக சின்ன புகார், பிரச்சனை வந்தாலும் உடனே அதை பற்றி பேட்டி கொடுங்கள். எப்போதும் லைம் லைட்டில் இருங்கள். திமுகவை நாம்தான் எதிர்க்கிறோம் என்பது தெரிய வேண்டும். அப்போதுதான் எதிர்கட்சி வாக்குகள் நம் பக்கம் திரும்பும் என்று அமித் ஷா கூறி இருக்கிறார்.

உத்தரவுகள்

உத்தரவுகள்

உத்தரவு 2 - திமுக அமைச்சர்களை தீவிரமாக கவனியுங்கள். அவர்கள் தவறாக பேசினாலோ அல்லது அவர்களின் ஒப்பந்தங்களில் சந்தேகம் எழுந்தாலோ உடனே அதை மீடியாவிடம் கொண்டு செல்லுங்கள். அமைச்சர்கள் பற்றி புகார்களை அடுக்குங்கள். தேவைப்பட்டால் ஆளுநரிடம் அமைச்சர்களை பற்றி அறிக்கை கொடுங்கள். டாப் அமைச்சர்களை நெருக்கமாக கண்காணியுங்கள் என்றும் கூறி இருக்கிறாராம்.

கூட்டணி

கூட்டணி

உத்தரவு 3 - திமுகவிற்கு எதிராக கூட்டணி அமைக்க வேண்டும். வலுவான கூட்டணியாக இது இருக்க வேண்டும்.எனவே மாநிலத்தில் இருக்கும் நிலவரம் பற்றி எனக்கு ரிப்போர்ட் அனுப்புங்கள். ஆனால் எங்கும் கூட்டணி அமைப்பது பற்றி நீங்கள் பேச கூடாது. அதில் டெல்லி முடிவெடுத்துக்கொள்ளும். திமுகவிற்கு எதிராக இருக்கும் கட்சிகளை அனுசரித்து செல்லுங்கள் என்றும் சொல்லி இருக்கிறாராம்.

உத்தரவு 4

உத்தரவு 4

இதில் அமித் ஷா போட்ட 4வது உத்தரவுதான் முக்கியமானது என்கிறார்கள் கமலாலய நிர்வாகிகள். அதன்படி திமுகவில் அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகள், கவுன்சிலர்களை நம் பக்கம் இழுக்க பாருங்கள். அவர்களை பாஜக பக்கம் கொண்டு வர வேண்டும். அதேபோல் உள்ளூர் அளவில் திமுகவிற்கு பூத் வேலைகளை பார்த்தவர்களை பாஜகவில் சேர வையுங்கள். ஒரு வாக்காளர் லிஸ்ட் இருந்தால் ஒவ்வொரு பக்கத்திலும் குறைந்தது 5-6 பேராவது நம்மளுடைய ஆட்களாக இருக்க வேண்டும் என்றும் அமித் ஷா உத்தரவிட்டு இருக்கிறாராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+