Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"திராவிடம்".. ஒரே கல்லில் பல மாங்காய் அடிக்க போட்ட "கணக்கு".. அதிமுகவும் அழியலை.. பாஜகவும் வளரலை!

பாஜகவின் திட்டத்தை அதிமுக முறியடித்துள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவையே பாஜக அழித்துவிடும் என்றார்கள்.. ஒருபடிமேலே போய், அதிமுகவை அழித்துவிட்டு பாஜக தாறுமாறாக வளரும் என்றார்கள்.. இந்த இரு கணிப்புகளுமே இன்று தவிடுபொடியாகி உள்ளது.

இந்த தேர்தலை பொறுத்தவரை 2விதமான கணிப்புகள் நிலவின.. ஒன்று அதிமுக இந்த தேர்தலுடன் அழிந்துபோகும்.. மற்றொன்று பாஜக எந்த காலத்திலும் வளராது.. அந்த தாமரையும் மலராது என்பதுதான் ஒட்டுமொத்த கருத்தாக இருந்தது..

இதுவரை வெளிவந்த கருத்து கணிப்புகளிலும் இதே தான் சொல்லின.. சில அரசியல் வல்லுநர்களும்கூட இதையேதான் அச்சுபிசகாமல் சொன்னார்கள்.

 பாஜக

பாஜக

இதற்கு காரணம், அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்ததே பிரதானமாக பார்க்கப்பட்டது.. கடந்த முறை எம்பி தேர்தலில் அதிமுக தோல்வியை சந்திக்க காரணமே பாஜகவுடன் கூட்டணி வைத்ததுதான்.. இதை தேர்தல் ரிசல்ட் வந்த பிறகு அதிமுகவும் உணர்ந்து கொண்டது.. அதனால்தான், வேலூர் தொகுதி உட்பட நடந்து முடிந்த இடைத்தேர்தல்களில் பாஜக வாசனையே இல்லாமல் பிரச்சாரங்களை பார்த்து கொண்டது.

 முத்தலாக்

முத்தலாக்


சிஏஏ, முத்தலாக் போன்ற விவகாரங்களினால் மக்கள் கொந்தளிப்பில் இருந்ததால், அதிமுக மிக சாதுர்யாகமாகவே அந்த இடைத்தேர்தல்களை கையாண்டு ஜஸ்ட் பாஸ் ஆனது.. எனவே, இந்த முறை தேர்தலில் அப்படி ஒரு ரிஸ்க்கை அதிமுக எடுக்காது என்றுதான் யூகிக்கப்பட்டது.. 60 சீட்டுக்கள் தங்களுக்கு தந்தாக வேண்டும் என்று எல்.முருகன் இந்த 6 மாத காலமாக பிடிவாதம் காட்டி வந்தபோதும், அதிமுக தெளிவான முடிவை சொல்லவே இல்லை.

 காவி கொடி

காவி கொடி

ஒருகட்டத்தில், செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் காவி கொடி பறக்கும் என்றுகூட தமிழக பாஜக சூளுரைக்கவே செய்தது.. இதற்கு பிறகு டெல்லியில் இருந்து தலைவர்கள் வந்தபிறகே, கூட்டணி, சீட் விவகாரங்கள் முடிவாகின.. அதுகூட 20 சீட்கள்தான் தரப்பட்டன.. எவ்வளவு அடிபட்டும் கடைசியில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துவிட்டதே? என்ன காரணம்? நிர்ப்பந்தமா? நெருக்கடியா? கூட்டணிக்குள் உள்ளே கொண்டு வந்தால், அதிமுகவையே பாஜக காலி செய்துவிடுமே? என்ற சந்தேகங்கள் பரபரப்பாக எழுந்தன.

மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா

காரணம், பாஜகவை பொறுத்தவரை, யாருடன் கூட்டணி வைத்தாலும் ஒரு கட்சியை அழித்து விடுவார்கள், இப்படித்தான் அன்று பீகாரிலும் பாஜக செயல்பட்டது, மகாராஷ்டிராவிலும் பாஜக செயல்பட்டது.. சிவசேனா, தங்கள் எதிரியான காங்கிரசுடன் கூட்டணி வைக்கும் அளவுக்கு போய்விட்டது.. அதுபோலவே தமிழ்நாட்டிலும் நடக்கும்.. அதிமுகவின் முதுகில் சவாரி செய்து, பிறகு ஒருகட்டத்தில் அதிமுகவையே ஒதுக்கி தள்ளிவிட்டு, திமுகவுக்கு ஒரே எதிரி தாங்கள்தான் என்ற பிம்பத்தை பாஜக தோற்றுவிக்க முயலும் என்றும் பேச்சுக்கள் எழுந்தன.

தோல்வி

தோல்வி

அதாவது திமுக Vs பாஜக என்றே இனி தமிழக அரசியல் இருக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் விருப்பம். ஆனால், இந்த தேர்தல் ஒரு செய்தியை உணர்த்தி உள்ளது.. அதிமுக என்ற கட்சியை யாரும் தொட கூட முடியாது.. அதிமுக என்ற கட்சி எப்போது இருக்கும் என்பதுதான் அந்த செய்தி.. காரணம் மிக மோசமான அளவில் அதிமுக தோத்துபோய்விடவில்லை.. எதிர்பார்த்த அமைச்சர்கள் வெற்றியை பெற்றுள்ளனர்..

திமுக

திமுக

எதிர்க்கட்சிகளாக இன்று திமுகவுக்கு எதிரில் உட்காரப்போகிறது அதிமுக.. எனவே, பாஜக என்ன நினைத்து இந்த தேர்தலில் கணக்கு போட்டதோ அதுதான் உடைந்து நொறுங்கி உள்ளது. அதனால் திமுகவுக்கு மாற்று அதிமுகதான்,.. அதிமுகவுக்கு மாற்று திமுகதான் என்ற நிலைப்பாடே இப்போதும் தொடர்கிறது.. எப்போதும் இதுதான் தொடரும்..

 தேசிய கட்சி

தேசிய கட்சி

அதுமட்டுமல்ல, தேசிய கட்சிகளே இனி திமுக, அதிமுக என்று ஏதாவது ஒரு திராவிட கட்சியில்தான் கூட்டணி வைக்ககூடிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளன.. ஒருவேளை திராவிட கட்சிகளுக்கு மாற்று தாங்கள்தான் என்று யார் வந்தாலும் அவர்கள் இதுவரை வலுவிழந்து விட்டதைபோலவே இனியும் வலுவிழப்பார்கள்.. எனவே, இந்த தேர்தலை பொறுத்தவரை, அதிமுகவும் அழியவில்லை.. பாஜகவும் வளரவில்லை.. அந்த தாமரை "மொட்டாக"வேத்தான் இன்னமும் இருக்கிறது.. அது மலர இன்னும் காலம் பிடிக்கும்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+