அதிமுக 'லட்டு' மாதிரி தூக்கி கொடுத்த 14 தொகுதிகள்.. 'பாமக, பாஜக' செம்ம ஹேப்பி அண்ணாச்சி
சென்னை: 2016ல் வெற்றி பெற்ற தொகுதிகள்.. எத்தனை தொகுதிகளை அதிமுக, தனது கூட்டணி கட்சிகளான பாஜக, பாமகவிற்கு விட்டுக்கொடுத்துள்ளது என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ள 171 வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக நேற்று வெளியிட்டது. ஏற்கனவே 6 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இதுவரை 178 தொகுதிக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் அஇஅதிமுக கடந்த 2016 சட்டசபை தேர்தலில் வென்ற 14 தொகுதிகளை பாமக மற்றும் பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு கொடுத்துள்ளது. அதிகபட்சமாக பாமகவிற்கு 9 தொகுதிகளை கொடுத்துள்ளது. பாஜகவிற்கு ஐந்து கொடுத்துள்ளது. இந்த தொகுதிகளை வாங்கியதால் இரண்டும் கட்சிகுமே மகிழ்ச்சியில் உள்ளன.

பாமக அதிர்ச்சி
ஆனால் அப்படி கொடுத்த தொகுதிகளில், ஆளும் கட்சி எம்எல்ஏக்களின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். சீட்டை பெற்ற கூட்டணி கட்சியினர் தொகுதியில் இறங்கி தங்களுக்கு வேலை பார்ப்பார்களா என்று பாமகவும் பாஜக அதிர்ச்சி அடைந்துள்ளது.

சேலம் மேற்கு
இந்த முறை அதிமுக, 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற 9 தொதிகளை பாமகவிற்கு விட்டுக்கொடுத்துள்ளது. அதாவது பாமக பெற்ற 23 தொகுதிகள், அதிமுகவின் தொகுதிகள் ஆகும். சேலம் (மேற்கு) தொகுதியில் வெங்கடாச்சலம் என்பவர் அதிமுக சார்பில் வெற்றி பெற்றிருந்தார். இதேபோல்
விருத்தாசலம்(தனி) கலைச்செல்வன் வெற்றி பெற்றிருந்தார். பூந்தமல்லி மணிமாறன் வென்று இருந்தார். ஆனால் 2019 இடைத்தேர்தல் திமுகவின் கிருஷ்ணசாமி வெற்றி பெற்றார். மேலேசொன்ன தொகுதிகள் எல்லாம் பாமகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

பாமக தொகுதிகள்
இதேபோல் மயிலாடுதுறை தொகுதியில் அதிமுக சார்பில் ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றிருந்தார். ஜெயங்கொண்டம் தொகுதியில் அதிமுகவின் ராமஜெயலிங்கம் வென்றிருந்தார். திருப்போரூரில் கோதண்டபாணி, கும்முடிப்பூண்டியில் கேஎஸ் விஜயகுமார், மேட்டூரில் முன்னாள் அமைச்சர் செம்மலை, சோளிங்கரில் பார்த்திபன் ஆகியோர் அதிமுக சார்பில் வெற்றி பெற்றிருந்தனர்.

அதிமுகவின் கோட்டை
இந்லையில் மொத்தம் 9 தொகுதிகளையும் அதிமுக பாமகவிற்கு விட்டுக்கொடுத்துள்ளது. இந்த 9 இடங்களிலும் பாமகவிற்கும் அதிமுகவிற்கும் வலுவான வாக்கு வங்கி உள்ளது. இதற்கிடையே பாஜகவிற்கும் நிறைய தொகுதிகளை தூக்கி கொடுத்துள்ளது அதிமுக, பாஜகவிற்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் கோவை தெற்கு உள்பட 5 தொகுதிகள் அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் தொகுதிகளாகும்.

மதுரை வடக்கு
ராமநாதபுரத்தில் அதிமுக சார்பில் மணிகண்டன் வென்றிருந்தார், மொடக்குறிச்சி குறித்து அதிமுக சார்பில் சிவசுப்ரமணி வெற்றி பெற்றிருந்தார். இதேபோல் கோவை தெற்கு தொகுதியில் அர்ஜுனன் வெற்றி பெற்றிருந்தார். அரவக்குறிச்சியில் 2016ல் அதிமுக சார்பில் செந்தில் பாலாஜி வென்றிருந்தார். 2019ல் திமுக சார்பில் வெற்றி பெற்றார். மதுரை வடக்கு தொகுதியில் ராஜன் செல்லப்பா அதிமுக சார்பில் வெற்றி பெற்றார். இந்த ஐந்து தொகுதிகளையும் அதிமுக பாஜகவிடம் கொடுத்திருக்கிறது.இதற்கிடையே பாஜக போட்டியிடும் ஊட்டி, காரைக்குடி, விளவங்கோடு, குளச்சல் போன்றவை காங்கிரஸ் வென்ற தொகுதிகள் ஆகும். துறைமுகம், ஆயிரம் விளக்கு, நாகர் கோவில் உள்பட மற்ற தொகுதிகள் எல்லாமே திமுகவின் தொகுதிகள் ஆகும்.
-
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்? -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
இனிமே சிங்கப் பாதை தான்..ஆக்ஷனுக்கு ரெடியான அதிமுக! திமிறி எழுந்த எடப்பாடி பழனிசாமி! கையில் லிஸ்ட்! -
ஐசியூவில் அதிமுக.. ஆபரேசனுக்கு தயாராவாரா எடப்பாடி? குறுக்கே ஆம்புலன்ஸோடு விஜய்! பரபர பாலிடிக்ஸ் -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
தலைக்கு மேல் தொங்கும் கத்தி.. தவெகவுக்கு தாவிய அதிமுக மாஜி எம்.எல்.ஏ.க்கள்! சுப்ரீம் கோர்ட்டில் கேஸ் -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications