என் சீனியாரிட்டி என்ன.. ஏன் விஜய் நேரில் வந்து என்னை பார்க்க மாட்டாரா? விஜய் மீது ராமதாஸ் அப்செட்?
சென்னை: 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஈகோ மற்றும் தேர்தல் கணக்குகளுக்கு இடையே ஒரு பெரும் போராட்டத்தைக் கண்டு வருகிறது. இதில் தற்போது பேசுபொருளாகியிருப்பது பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய் இடையேயான கூட்டணிப் பேச்சுவார்த்தைதான்.
திராவிடக் கட்சிகள் கைவிட்ட நிலையில், மாற்று சக்தியாக உருவெடுத்துள்ள விஜய்யின் தவெக-வுடன் கைகோர்ப்பதே தற்போதைய சூழலில் ராமதாஸ் அணிக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு. ஆனால் இதில்தான் ராமதாசுக்கு ஒரு சிக்கல் ஏற்பட்டு உள்ளதாம்.

ஆளுங்கட்சியான திமுக-வில் ராமதாஸ் தரப்புக்கு கதவுகள் அடைக்கப்பட்ட நிலையில், தற்போது தவெக-வுடன் "பின்வாசல்" பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.
திமுக ஏன் கைவிட்டது?
திமுக கூட்டணியில் நீடிக்க ராமதாஸ் தரப்பு விரும்பினாலும், அக்கட்சியின் நீண்டகால கூட்டாளியான விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர் தொல். திருமாவளவன் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். "பாமக-வுடன் ஒருபோதும் கூட்டணி கிடையாது" என்ற தனது 14 ஆண்டுகால உறுதியில் அவர் பிடிவாதமாக இருப்பதால், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ராமதாஸ் அணியைச் சேர்த்துக் கொள்ள முன்வரவில்லை.
விஜய்யுடன் கூட்டணி: கௌரவம் முட்டுக்கட்டை?
திராவிடக் கட்சிகள் கைவிட்ட நிலையில், மாற்று சக்தியாக உருவெடுத்துள்ள விஜய்யின் தவெக-வுடன் கைகோர்ப்பதே தற்போதைய சூழலில் ராமதாஸ் அணிக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு. பாமக எம்.எல்.ஏ ஆர். அருள் போன்றோர் ஏற்கனவே விஜய்யின் இளைஞர் பட்டாளத்தைப் பாராட்டிப் பேசி வருகின்றனர்.
இருப்பினும், இங்கேதான் "மரியாதை" என்ற சிக்கல் எழுந்துள்ளது. அரசியலில் சுமார் 45 ஆண்டுகால அனுபவம் கொண்ட மூத்த தலைவரான டாக்டர் ராமதாஸ், ஒரு "அரசியல் கத்துக்குட்டியான" விஜய் தன்னைத் தேடி வந்து சந்திக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதாகத் தெரிகிறது.
"விஜய் நேரில் வரமாட்டாரா?" - ராமதாஸ் கேள்வி
தைலாபுரம் தோட்டத்தில் தனது ஆதரவாளர்களிடம் பேசியபோது ராமதாஸ் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
"வயதிலும் அரசியலிலும் நான் எத்தனையோ பார்த்தவன். அரசியலில் மூத்தவனான என்னை, விஜய் நேரில் வந்து சந்தித்து கூட்டணிக்கு அழைப்பதுதானே முறை? அவர் ஏன் இன்னும் என்னை வந்து பார்க்கவில்லை?" எனத் தனது தொண்டர்களிடம் அவர் கோபமாக கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2026-ன் சவால்
விஜய்யைப் பொறுத்தவரை, வட தமிழகத்தில் வலுவான வாக்கு வங்கியைக் கொண்டுள்ள ராமதாஸைச் சந்திப்பது அவருக்குப் பலமாக அமையலாம். ஆனால், தவெக தரப்போ 'தனித்துப் போட்டி' அல்லது 'கௌரவமான சமரசம்' என்பதில் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது. முக்கியமாக யார் வந்தாலும் நான் இறங்கி போக மாட்டேன்
ஜனவரி இறுதியில் கூட்டணிகள் இறுதியாகும் நிலையில், விஜய்யின் "தளபதி" வேகம் ராமதாஸின் "ஐயா" கௌரவத்திற்குப் பணியுமா? அல்லது கௌரவத்திற்காக ராமதாஸ் தனிப் பாதையைத் தேர்ந்தெடுப்பாரா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். பொதுவாக சினிமா நடிகர்களை ராமதாசுக்கு பிடிக்காததும்.. அவர்கள் மீது இருக்கும் கோபமும் கூட விஜய் - ராமதாஸ் இடையிலான இந்த மோதலுக்கு காரணம் என்கிறார்கள்.
-
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா? -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட்












Click it and Unblock the Notifications