"ஜஸ்ட் மிஸ்".. ஒரே குறி ஸ்டாலின்தான்.. ஆனாலும் திமுகவுக்கு "உதவிய" பாஜக.. அதிரடி சீக்ரெட்!
திமுக கூட்டணிக்கு மறைமுகமாக பாஜக உதவியதாகவே தெரிகிறது
சென்னை: அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பது போலவேதான், ஒவ்வொன்றையும் சாதாரணமாக எடுத்து கொண்டு கடந்து போக வேண்டி உள்ளது... இன்றைய நாளில் திமுக வேட்பாளர் லிஸ்ட் வெளியாக உள்ளதால், அது தொடர்பான பரபரப்புகளும் கூடிவருகின்றன.
திமுக இந்த முறை படுஜாக்கிரதையாகவே காய்களை நகர்த்த தொடங்கியது.. கிட்டத்தட்ட 3 மாதங்களாகவே கூட்டணியில் பேச்சுவார்த்தைகள் மறைமுகமாக நடக்க ஆரம்பித்தன.. அப்போதிருந்தே கூட்டணி கட்சிகள் அப்செட்தான்.
இவ்வளவு சீட் தான் ஒதுக்க முடியும் என்ற தகவல் கூட்டணிகளுக்கு தெரிவிக்கப்பட்டதாகவும், இது சம்பந்தமாக திமுக தலைவரை நேரில் சந்தித்து பேச முடியாமல் கூட்டணி தலைவர்கள் காத்திருப்பதாகவும்கூட ஒருசில செய்திகள் கசிந்தன.

பேச்சுவார்த்தைகள்
இந்த சமயத்தில்தான், ஒருவேளை அதிருப்தி காரணமாக கட்சிகள் கூட்டணியை விட்டு வெளியேறக்கூடும் என்றும் கணிப்புகள் வெளியாகின.. மற்றொரு பக்கம் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள் போன்றவை கமலுடன் மறைமுகமாக பேச்சுவார்த்தைகளை நடத்தி கொண்டிருப்பாகவும் கூறப்பட்டன.. மதிமுக, விசிக போன்ற கட்சிகள் அதிமுகவுடன் சேரக்கூடும் என்றும் முணுமுணுக்கப்பட்டன.

பாஜக
இதில் விசிக பற்றி அதிகமாகவே தகவல்கள் வந்தன.. ஒருவேளை பாமக மட்டும் அதிமுக கூட்டணியில் இல்லாமல் இருந்திருந்தால், விசிக கூட்டணியை கண்டிப்பாக வைத்திருக்கும் என்றும் யூகங்களாக சொல்லப்பட்டன.. என்னதான் பாமக நேர் எதிரியாக இருந்தாலும், அதிமுக கூட்டணியில் பாஜக கெத்தாக உட்கார்ந்து கொண்டுள்ளதை மறுக்கமுடியாது.. கூட்டணி, சீட், முதல்வர் வேட்பாளர் போன்ற விவகாரங்களில் அதிமுகவையே பாஜக அலற வைத்து கொண்டிருந்ததையும் மற்ற கட்சிகள் கவனிக்காமலும் இல்லை.

கம்யூனிஸ்ட்கள்
கம்யூனிஸ்ட்டுகள், மதிமுக, விசிக போன்ற கட்சிகளுக்கு பாஜகதான் முதல் குறி.. எந்த காரணத்தை கொண்டும் தமிழகத்தில் அந்த கட்சியை காலூன்ற விட்டுவிடக்கூடாது என்பதில் கறார் காட்டி வருகின்றனர்.. ஒருவேளை பாஜக தனித்து போட்டியிட்டாலோ, அல்லது அமமுகவுடன் இணைந்து தேர்தலை சந்திப்பதாக இருந்தாலோ, நிச்சயம் திமுகவில் அதிருப்தியில் இருந்த கட்சிகள் அதிமுகவில் கரம் கோர்த்திருக்கவே செய்யும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

அதிமுக
பாஜக - அதிமுக கூட்டணி முடிவாகவும்தான், இதற்கு ஒரு வழி கிடைத்தது.. திமுகவில் அதிருப்தி தலைவர்கள் யாரும் அதிமுக பக்கம் செல்ல முடியாத நிலைமை உருவானது.. மேலும் வேறு வழியில்லாமல் திமுக கூட்டணியிலேயே இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.. ஆக, இன்று திமுக கூட்டணி உறுதியாகி இருப்பதற்கு காரணமே பாஜகதான் என்றால் அது மிகையல்ல..!
-
Velmurugan's TVK: எதே! 10 சீட்டா? வேல்முருகனின் "பிளானால்" அதிர்ந்த திமுக! கடைசியில் சொன்னது என்ன? -
பெரம்பூர் தொகுதியில் விஜய் களமிறங்கினால்.. சேகர்பாபுவை களமிறக்க திமுக திட்டம்? ஆலோசனையில் அறிவாலயம்! -
Aadhav Arjuna: ”பிழைக்கவும் ரஜினி, பழிக்கவும் ரஜினி” ஆதவ் அர்ஜுனா பேச்சால் கொந்தளித்த ரஜினி ரசிகர்கள்! -
18-ஆ? 25-ஆ காங்கிரஸுக்கு? அப்ப அதிமுக 210, திமுக 200 சீட்? சென்னை டூ கன்னியாகுமரி வரை திடீர் சேஞ்ச்? -
DMK Alliance: 42/234! இதுவரை திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு? -
12 காங்.எம்எல்ஏக்களுக்கு மீண்டும் சீட் கிடையாதா? "டாப்பில்" செல்வப்பெருந்தகை? திமுக நெருக்கடி? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அண்ணா ஆட்சி ஏன் சிறப்பு? என்ன சாதித்தார் அவர்? 1967க்கு பிறகான தரமான சம்பவங்கள் இதோ..! -
Dindigul: திண்டுக்கல் தொகுதியில் யாருக்கு வாய்ப்பு? திமுகவில் ஆர்வம் காட்டும் புதுமுகங்கள்! -
பெரிய கேள்வியே இதுதான்.. ஓபிஎஸ்ஸுக்கு ஸ்டாலின் கொடுத்த பெரிய அசைன்மென்ட்.. களமே மாறப்போகுது! -
2026 சட்டமன்றத் தேர்தல்: 'தொண்டை கட்டியிருக்கு...' - கனிமொழியின் அந்தப் பதில்! என்னதான் நடக்கிறது? -
+2 மாணவி கொலை சம்பவம்.. 2 நாட்களாக போராடுகிறோம்.. உடனே ஏன் வரலை.. கனிமொழியை கேட்ட உறவினர்கள்!












Click it and Unblock the Notifications