போதும்ப்பா.. ரஜினியை விட்டுவிட்டு சசிகலா பக்கம் ரூட்டை மாற்றுகிறதா பாஜக.. இனிதான் ஆட்டம் ஆரம்பமே
சசிகலா விடுதலைக்கு பாஜக உதவுவதாக சொல்லப்படுகிறது
சென்னை: சசிகலா விடுதலைக்கு உண்டான ஆயத்த வேலைகளில் பாஜக முழு வீச்சாக இறங்கி உள்ளதாம்.. இதனால் பாஜகவின் அடுத்த ரவுண்டு ஆட்டம் சூடுபிடித்துள்ளது.
சிறை விதிப்படி, என்றைக்கோ விடுதலையாகி இருக்க வேண்டியவர் சசிகலா.. ஆனாலும் எதற்காகவோ விடுதலை இழுத்தடித்து கொண்டே வரப்பட்டது.

முதல்வர் வேட்பாளர் விவகாரத்துக்கு முன்பு, அதாவது 6 மாதத்துக்கு முன்பே சசிகலாவை பாஜகவின் தரப்பு சிறையில் சந்தித்து பேசியது.. விடுதலைக்கான வேலைகளையும் துவங்கியது.. சட்டமன்ற தேர்தலில் திமுகவை முறியடிக்க இப்போதைய அதிமுகவோடு அமமுகவையும் இணைத்தால்தான் சாத்தியம் என்று பாஜக கருதியதால்தான் இப்படி ஒரு முன்னெடுப்பை அன்று ஆரம்பித்தது.
அதற்கேற்றார்போல, சுப்பிரமணியசாமி இவரை வெளியில் கொண்டு வரும் முயற்சியில் இருப்பதாக சொல்லப்பட்டது.. எங்கு பேட்டி தந்தாலும், சசிகலாவின் பெருமையை சு.சாமி சொல்லி கொண்டே இருப்பதும் அதற்கு உதாரணங்களாக தென்பட்டது.
சமீப காலமாக சசிகலா விடுதலை விவகாரம் அடக்கி வைக்கப்பட்டதையடுத்து, இப்போது மீண்டும் அதே பரபரப்பு எழுந்துள்ளது.. இதற்கு காரணம் சாட்சாத் ரஜினியேதான்.. உடல்நிலை காரணம் காட்டி, அரசியலுக்கு வருவது டவுட் என்பதுபோல ரஜினி விளக்கம் தந்துள்ளார்.. அதனால் அரசியல் கட்சியை எப்போது தொடங்குவார் என்பதில் இந்த நிமிஷம் வரை பீடிகை இழுத்து கொண்டே இருக்கிறது.
இதைபார்த்துதான் பாஜக தரப்பு ரொம்பவே நொந்துபோய்விட்டதாம்.. அமித்ஷா முதல் அண்ணாமலை வரை ரஜினியை அழைத்து பார்த்துவிட்டார்கள்.. பொன்.ராதா முதல் வானதி வரை நேரடியாகவே அழைப்பும் விடுத்துவிட்டனர்.. இறுதிவரை ரஜினியிடம் அதற்கான அறிகுறியே இல்லாத பட்சத்தில், தன் ரூட்டை பாஜக சசிகலா பக்கம் திருப்பி உள்ளதாம்.
அதற்காக விடுதலை செய்வதற்கு பாஜக சம்மதம் தந்துவிட்டதாகவும், இதன் அடிப்படையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் கட்ட வேண்டிய அபராத தொகையான 10 கோடியை தயார் செய்யும் வேலையில் சசிகலா தரப்பு இறங்கி உள்ளதாகவும் ஒரு செய்தி கசிந்து வருகிறது.
ஆனால், சசிகலா விடுதலை வைத்து பாஜக எந்த மாதிரியான நிலைப்பாட்டை முன்னெடுக்க போகிறது என்று தெரியவில்லை.. எப்படி பார்த்தாலும் சசிகலாவை வைத்து அதிமுகவுக்கு பாஜக செக் வைக்க கூடும் அல்லது அமமுக - பாஜக கூட்டணியும் உருவாக கூடும் அல்லது சசிகலாவை விடுதலை செய்வதற்காக மட்டுமே இந்த முயற்சி எடுக்கக்கூடும்.. எப்படி பார்த்தாலும், சசிகலா விரைவில் ரிலீஸ் என்பதை மட்டும் இனி எதிர்பார்க்கலாம்!
-
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications