தமிழகத்தின் 3வது மிக பெரிய கூட்டணி? பாஜகவுக்கு போன பாமக வாக்குகள்! 2026ல் தொடர்ந்தால் என்ன நடக்கும்?
சென்னை: மக்களவை தேர்தலில் தோற்ற நிலையில் தமிழகத்தில் அதிமுக, திமுக அல்லாத மூன்றாவது அணிக்கு வலுவான அஸ்திவாரம் போட்டுள்ளது பாஜக - பாமக கூட்டணி என்றும், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் அளவுக்கு வாக்கு வங்கியையும் வைத்திருக்கிறது என்கின்றனர் பாமகவினர்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி தமிழகத்தில் ஒரு தொகுதியிலும் வெல்ல முடியவில்லை என்றாலும் , நல்ல வாக்கு வங்கியை வாங்கியிருக்கிறது. பல தொகுதிகளில் பாஜக, பாமக, அமமுக, ஓபிஎஸ் வேட்பாளர்கள் நல்ல வாக்குகளை பெற்று 2வது இடத்திற்கு வந்துள்ளனர்.

சுமார் 21 தொகுதிகள் கொண்ட வட தமிழ்நாட்டில் ஓரளவு நல்ல வாக்கு வங்கியைக் கொண்ட கட்சியான பாமக 9 தொகுதிகளில் மட்டும் தான் வட தமிழகத்தில் போட்டியிட்டது. வட தமிழகத்தின் மற்ற இடங்களில் எல்லாம் பாஜகவும் அதன் சிறு கூட்டணிக் கட்சிகளும் தாமரை சின்னத்தில் தான் போட்டியிட்டது.
ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஈரோட்டில் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிட்டது. அதில், வேலூர்-1,40,000
சிதம்பரம்- 1,30,000, கிருஷ்ணகிரி 1,20,000 திருவண்ணாமலை 1,25,000, திருவள்ளூர்-1,15,000, தென் சென்னை-1,00,000, நாமக்கல்-65,000, திருப்பூர்-70,000, நாகை-60,000, வட சென்னை-45,000, பெரம்பலூர்-40,000,
மத்திய சென்னை- 30,000, தஞ்சாவூர்-20,000, இதர தொகுதிகள்-50,000 என மொத்தம் 11,10,000 லட்சம் பாமக வாக்குகள் பாஜகவிற்கு சென்றுள்ளது என்கின்றனர் பாமகவினர்.
பாஜக வாங்கிய 4880000 வாக்குகளில் சுமார் 11.1 லட்சம் வாக்குகள் பாமகவின் வாக்குகள். மேலும் வேலூர் மற்றும் பெரம்பலூர் தொகுதிகளில் AC சண்முகம் மற்றும் பாரிவேந்தர் ஆகியோரின் தனிப்பட்ட செல்வாக்கில் 250000 வாக்குகள் பாஜகவிற்கு கிடைத்திருக்கிறது. அதேபோல தென் மாவட்டங்களில் தினகரன் மற்றும் ஓபிஎஸ், ஜான் பாண்டியன், தேவநாதன் யாதவ் போன்றோரின் செல்வாக்கு அவர்கள் போட்டியிட்ட தொகுதிகளின் முடிவுகளே வெளிக்காட்டியிருக்கிறது.
தொகுதிக்கு 1 லட்சம் வாக்குகள் வீதம் சிவகங்கை, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தஞ்சாவூர் போன்ற தொகுதிகளின் வாயிலாக சுமார் 8 லட்சம் வாக்குகள் அவர்கள் மூலமாக பாஜகவிற்கு கிடைத்துள்ளது. கொங்கு பகுதியிலும் ஓபிஎஸ் அணியில் உள்ள அதிமுகவினர் வகையில் 1 லட்சம் வாக்குகளையும் பாஜக பெற்றுள்ளது.
பாஜக வாங்கியிருக்கும் வாக்குகளில் சரிபாதி அளவுக்கு மேல் கூட்டணிக் கட்சிகளிடமிருந்து பாஜகவிற்கு சென்றுள்ளது என்பதை பாஜகவில் போட்டியிட்ட வேட்பாளர்களே வெளிப்படையாக சொல்கின்றனர். பாஜக தனித்து 6% வாங்கும் அளவுக்கு அதாவது 26 லட்சம் வாக்குகள் வாங்கும் அளவிற்கு வளர்ச்சி கண்டிருக்கிறது. அதே சமயம் பாமக 10 தொகுதிகளில் போட்டியிட்டு 19 லட்சம் வாக்குகளை வாங்கினாலும், அதில் கூட்டணிக் கட்சிகளின் வாக்குகள் என்பது சுமார் 3 லட்சம் அளவிற்கு தான் இருக்கும். ஏனெனில் பிற கூட்டணிக் கட்சிகள் வலுவாக உள்ள இடங்களில் பாமக போட்டியிடவே இல்லை.
11 லட்சம் வாக்குகள் வரையில் பாஜகவிற்கு கொடுத்த பாமக, ஸ்ரீபெரும்புதூர், ஈரோடு ஆகிய தொகுதிகளில் தமாகாவின் சைக்கிள் சின்னத்துக்கும் சுமார் 2 லட்சம் வாக்குகளை பாமக கொடுத்துள்ளது. பல்வேறு சர்ச்சைகளுக்கு பின்னர் அமைந்த கூட்டணி என்றாலும், ஒவ்வொருக் கட்சி வாக்குகளும் எவ்வித தயக்கமும் இல்லாமல் கூட்டணிக் கட்சிகளுக்கு செல்வதில் சுணக்கம் இல்லாத கூட்டணியாக இந்தக் கூட்டணி அமைந்திருக்கிறது எனவும் பாஜகவினர் சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர்.
-
ராமதாசுக்கு அதிர்ச்சி! பாமகவின் மாம்பழம் சின்னம் வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.. அன்புமணி குஷி! -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
கீழ்வேளூரில் வடிவேல் ராவணன், அம்பத்தூரில் சேகர்.. பாமகவின் 3 வேட்பாளர்களை அறிவித்த அன்புமணி! -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications