மசாஜ் பார்லர் பெயரில் விபச்சாரம்.. 60க்கும் மேற்பட்ட பெண்களை சீரழித்தவர்.. டெய்லர் ரவி கைது
பிரபல பாலியல் புரோக்கர் டெய்லர் ரவி அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை: 8 ஆண்டுகளில் 60-க்கும் மேற்பட்ட பெண்களை நாசம் செய்ததாக கூறப்பட்ட பாலியல் மன்னன் டெய்லர் ரவி அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்ணாநகர் டவர் பார்க் அருகே உள்ள ஒரு அபார்ட்மெண்ட்டில் 8 ஆண்டுகளாக பாலியல் தொழில் நடத்தி வந்தவர்தான் டெய்லர் ரவி!!
58 வயதாகும் டெய்லர் ரவியின் முழு பெயர் ரவிச்சந்திரன். இவர் மீது விபச்சார வழக்குகள் நிறைய உள்ளன. மசாஜ் சென்டர் மற்றும் ஸ்பா என்ற பெயரில்தான் எல்லா விபச்சாரமும் நடக்கும். கடந்த 8 ஆண்டுகளாக போலீசில் சிக்காமல் மண்ணை தூவிவிட்டு விபசார புரோக்கராக வலம் வந்தவர்.

விபச்சார தடுப்பு பிரிவு
கிட்டத்தட்ட பாலியல் தொழிலில் கன்னட பிரசாத்துக்கு இணையாக ஈடுபட்டவர். அதனால்தான் இதுவரை 60-க்கும் பெண்களை இந்த தொழிலில் ஈடுபடுத்தி நாசம் செய்து வந்தது தெரியவந்தது. அதிகாரிகளை சரிக்கட்டியே சென்னையில் இப்படி 60 பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்ததாக சொல்லப்பட்டது.

பெரும் சலசலப்பு
மேலும் பல்வேறு அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய பதவிகளில் உள்ளவர்களை குஷிப்படுத்த, பெண்களை ஏற்பாடு செய்து வந்துள்ளார் என்றும் இதைதவிர ஒவ்வொரு மாதமும் மாமூலும் கொடுத்து வந்திருக்கிறார் என்றும் சலசலக்கப்பட்டது.

தனிப்படை அமைப்பு
இந்த நிலையில் போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் டெய்லர் ரவியை கைது செய்தே ஆக வேண்டும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு உத்தரவு பிறப்பித்தார். அந்த வேட்டையில் ரவி சிக்கி விட்டார். தற்போது துரிதமாக விசாரணை நடந்து வருகிறது.

உரிய ஆதாரங்கள்
தீவிர விசாரணைக்கு பின்னரே டெய்லர் ரவி இதுவரை எத்தனை இளம் பெண்களை பாழாக்கி இருக்கிறார், இதில் யார் யாருக்கு தொடர்பு இருக்கிறது என தெரிய வரும். உரிய ஆதாரங்கள் கிடைத்த பிறகு சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications