எங்கோ நடந்த பலூன் விபத்திற்கும்.. அதானி பங்கு சரிவிற்கும் என்ன தொடர்பு? யார் இந்த "ஹிண்டர்ன்பர்க்"?

2017ல் ஆண்டர்சன் உருவாக்கிய ஹிண்டர்ன்பர்க் நிறுவனம் அதன்பின் கை வைத்த இடம் எல்லாம் கன்னிவெடிதான்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதானி குழுமம் மீது புகார்களை அடுக்கி, அவர்களின் பங்குகளை ஷார்ட் செய்து வரும் ஹிண்டர்ன்பர்க் நிறுவனத்திற்கு என்று ஒரு சுவாரசிய வரலாறு இருக்கிறது. பங்குசந்தையில் யுத்தம் நடத்திய ரத்தக்களறியான வரலாறு ஒன்று ஆண்டர்சனின் ஹிண்டர்ன்பர்க் நிறுவனத்திற்கு உள்ளது.

Recommended Video

    Adani VS Hindenburg | US-ல் நடந்த Balloon விபத்திற்கும்...Adani Shares சரிவிற்கும் என்ன தொடர்பு?

    எங்கோ ஒரு சிறிய பட்டாம்பூச்சி தனது சிறகுகளை அசைப்பதன் மூலம் உலகின் வேறு ஒரு மூலையில் எங்கோ ஒரு புயலே ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று கூறுவார்கள். இந்த தத்துவத்தை பட்டர்பிளை எபெக்ட் (butterfly effect) என்று கூறுவார்கள். தமிழில் வந்த தசாவதாரம், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்கள் எல்லாம் இந்த தத்துவத்தின் அடிப்படையில் வந்ததுதான்.

    அப்படி ஒரு "பட்டர்பிளை எபெக்ட்தான்" அதானி வாழ்க்கையில் விளையாடி இருக்கிறது. எங்கோ நடந்த ஒரு சம்பவம்.. வேறு ஒரு சம்பவத்திற்கு காரணமாகி.. அதன் விளைவாக அதானியின் பங்குகள் சரிந்து இருக்கின்றன. என்ன புரியலையா? தொடர்ந்து படியுங்கள்..

    என்ன நடந்தது?

    என்ன நடந்தது?

    1937ல் ஜெர்மனியில் ஏர்ஷிப் பிரபலமாக இருந்த காலம். ஏர்ஷிப் என்றால் என்னவென்று தெரியாத 2கே கிட்ஸ்களுக்கு ஒரு விளக்கம். ஏர்ஷிப் என்பது ஒரு ராட்சச பலூன். இதன் உள்ளே ஹைட்ரஜன் அல்லது ஹீலியம் அடைக்கப்பட்டு இருக்கும். இதன் கீழே இருக்கும் இருக்கை போன்ற பகுதிகளில் மக்கள் பயணம் செய்ய முடியும். முதல் மற்றும் இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி, அமெரிக்கா போன்ற நாடுகள் இந்த ஏர்ஷிப்பை ராணுவ பொருட்களை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டன. முக்கியமாக அமெரிக்காவில் மட்டும் 1300க்கும் அதிகமான ஏர்ஷிப் புழக்கத்தில் இருந்தன.

    ஏர்ஷிப் வெடிப்பு

    ஏர்ஷிப் வெடிப்பு

    இதை ஏர்ஷிப் என்று அழைத்தாலும்.. இது வெறும் ராட்சச பலூன்தான். ஒரு பலூனின் கீழே இருக்கைகளை ஏற்பாடு செய்து, அதை சிறிய அளவிலான இறக்கைகள் உதவியுடன் திசை மாற்றி பறந்தால் எப்படி இருக்கும். அதுதான் ஏர்ஷிப். சரி இந்த ராட்சச பலூன் பிரபலமாக இருந்த 1937 காலகட்டத்தில் ஜெர்மனியின் ஒரு பயணிகள் பலூன் வெடித்து சிதறியது. ஜெர்மனிக்கு சொந்தமான அந்த பலூன் அமெரிக்காவில் வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் பலூன் வெடித்து 35 பேர் பலியானார்கள். நடுவானில் துடி துடிக்க நெருப்பில் சிக்கி.. கருகி போய் தரையில் விழுந்து துடித்து இறந்தனர்.

     ஹீலியம்

    ஹீலியம்

    ஹீலியம், ஹைட்ரஜன் இரண்டுமே வேகமாக தீ பற்ற கூடியது. வெடிக்கும் தன்மை கொண்டது என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதை பலூனில் அடித்து பறக்கவிட்டு, பின்னர் அதன்மூலம் பயணம் மேற்கொள்ள முடியும் என்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம். இது கண்டிப்பாக விபத்து நடக்கும் என்று தெரிந்தே செய்யப்படும் Man made disaster வகை விபத்து என்பார்கள். அதாவது வெடிக்கும் என்றும் தெரிந்தே மனிதன் நிகழ்த்தும் அழிவு. இப்படி Man made disaster பலூன்களால் ஒருமுறை இருமுறை அல்ல பல முறைக்கும் மேல் விபத்துகள் நடந்துள்ளது. 80 வருடங்களுக்கு பின்பாக Man made disasterகள் பற்றி ஆராய்ந்து கொண்டு இருந்த பங்குசந்தையில் சகலமும் கற்ற நேதன் ஆண்டர்சன் என்ற அமெரிக்கர்.. திடீரென ஒரு முடிவை எடுத்தார்.

    பங்கு சந்தை

    பங்கு சந்தை

    பங்கு சந்தையில் நடக்கும் முறைகேடுகளை பற்றி.. பங்கு சந்தையில் மனிதர்கள் ஏமாற்றி பங்குகளை சரிய வைப்பதும், ஏற வைப்பதையும் பற்றி விசாரித்தால் என்ன என்று ஆண்டர்சன் முடிவு எடுத்தார். அதாவது பங்கு சந்தையில் நடக்கும் Man made disasterகளை பற்றி விசாரணை செய்தால் என்ன என்று முடிவு செய்தார். அப்படி தொடங்கியதுதான் Hindenburg. இதற்கும் அந்த பலூன் வெடிப்பு கதைக்கும் என்ன தொடர்பு என்று கேட்கிறீர்களா? அந்த 1937ல் வெடித்த பலூனின் பெயரே Hindenburgதான். அந்த பலூன் ஒரு Man made disaster என்பதால் அதன் பெயரிலேயே பங்கு சந்தையில் நடக்கும் அழிவுகளை பற்றி ஆராய முடிவு செய்தார் ஆண்டர்சன்.

     2017 ஆராய்ச்சி

    2017 ஆராய்ச்சி

    2017ல் இவர் உருவாக்கிய அந்த நிறுவனம் அதன்பின் கை வைத்த இடம் எல்லாம் கன்னிவெடிதான். அவன் பத்துபேரை அடிச்சிட்டு டான் ஆகல.. அவன் அடிச்ச எல்லாரும் டான்தான் என்று வரும் கேஜிஎப் வசனம் போலத்தான்.. அதன்பின் Hindenburg கை வைத்த ஆட்கள் எல்லாம் டாப்பில் இருந்த கோடீஸ்வரர்கள். தனது வருமானத்தை அதிகப்படுத்தி காட்டுகிறார். தனது இயல்பிற்கு மீறி கடனை வாங்கி உள்ளார். இவர் பங்குகள் சரிந்தால் நிறுவனம் திவாலாகிவிடும் என்று Nikola Corporation நிறுவனத்தின் முறைகேடுகளை பட்டியலிட்டது Hindenburg. 2020ல் இவர் பட்டியலிட்ட சில நிமிடங்களில் நிகோலா பங்குகள் சரிந்தன. அதற்கு முன்பே இந்த பங்குகள் சரியும் என்று பெட் கட்டி, அதை ஷார்ட் செய்தும் இருந்தது Hindenburg. அதன்படியே நிகோலா பங்குகள் சரிந்தன. இதனால் டாலர் 34 பில்லியனாக இருந்த நிகோலா மதிப்பு டாலர் 1.3 பில்லியனாக சரிந்தது.

    பங்குகள்

    பங்குகள்

    lordstown motors நிறுவனத்தின் மீதும் இதே புகார்களை ஆதாரங்களுடன் வைத்து அவர்களையும் ஷார்ட் செய்தார். இதனால் 5 பில்லியன் டாலர் இருந்த அவர்கள் மதிப்பு 260 மில்லியனாக சரிந்தது. ஆமை புகுந்த வீடும் ஆண்டர்சன் புகுந்த பங்கும் விளங்காது என்று சொல்லும் அளவிற்கு ஒரு குழுமம் மீது ஆண்டர்சன் புகார் வைத்தால்.. அவர்களின் "சோளி முடிந்தது" என்றுதான் அர்த்தம். இப்போது அந்த ஹிண்டன்பர்க் குழுமத்தின் கண் பட்டு இருப்பது அதானி குழுமத்தின் மீது. அதானி நிறுவனம் தனது வருமானத்தை பொய்யாக உயர்த்தி காட்டி உள்ளது, உறவினர்களை பயன்படுத்தி போலியான நிறுவனங்களை வெளிநாட்டில் தொடங்கி போலி பரிவர்த்தனை அறிக்கை வெளியிட்டு உள்ளது. இதன் மூலம் பங்குகளை பொய்யாக உயர்த்தி அதை வைத்து கடனும் வாங்கி உள்ளது, அதாவது பொய்யாக கொண்டு வரப்பட்ட முதலீடுகள் மூலம் பொய்யாக உயர்த்தப்பட்ட பங்குகளை வைத்து கடன் வாங்கி உள்ளது, கிட்டத்தட்ட அதோ பாரு மலைக்கு மேலே முருகன் தெரியுறாரு என்று காமெடியில் வருவதை போல ஏமாற்றி உள்ளது, தனது வரவு செலவு அறிக்கையில் மோசடி, வரி ஏய்ப்பு, மோசடியாக பண பரிமாற்றம் செய்துள்ளது என்று புகார்களை அதானி குழுமம் மீது இந்த ஹிண்டர்ன்பர்க் வைத்தது.

    ஹிண்டர்ன்பர்க்

    ஹிண்டர்ன்பர்க்

    ஹிண்டர்ன்பர்க் கடந்த ஜனவரி 25 புகார் வைத்த அன்றே அதானி குழும பங்குகள் கடும் வீழ்ச்சியினை கண்டன. அதானி குழுமமோ இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. இது தவறான தகவல். இது எங்களின் வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தும் விதமாக வந்த அறிக்கை என்று விளக்கம் கொடுத்தது. நீங்க வேண்டுமானால் அமெரிக்காவில் எங்கள் மீது கேஸ் போடுங்கள்.. ஆனால் டிஸ்கவரியில் உங்கள் ஆவணங்களை எல்லாம் கொடுக்க வேண்டி வரும் என்று ஹிண்டர்ன்பர்க் பதிலுக்கு சவால் விட்டுள்ளது. வியாழன் விடுமுறை போக புதன், வெள்ளி மட்டும் இரண்டு நாட்களில் இதனால் அதானி குழுமத்தின் சந்தை வர்த்தகத்தில் 2.3 லட்சம் கோடி ரூபாய் அளவில் சரிந்துள்ளது. வரும் நாட்களில் இவர்களின் பங்குகள் மேலும் சரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எங்கோ வெடித்த ஒரு பலூன் ஆண்டர்சனுக்கு ஹிண்டர்ன்பர்க் ஐடியாவை கொடுக்க.. அந்த ஹிண்டர்ன்பர்க் குஜராத்தில் வைர வியாபார குடும்பத்தில் கோலோச்சிய அதானியின் வாழ்க்கையில் விளையாடி இருக்கிறது.. இப்போது சொல்லுங்கள் இது பட்டாம்பூச்சி விளைவுதானே!

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+