'ஸ்டாலின் சார் இந்த விஜயைத் தொட்டதற்காக நீங்க வருத்தப்பட போறீங்க'.. வைரலாகும் விஜய் வீடியோ
சென்னை: "ஸ்டாலின் சார், இந்த தேர்தலுக்கு அப்புறம், நீங்க தோற்றதுக்கு அப்புறம், எப்படி எல்லாம் பீல் பண்ண போறீங்க என்று சொல்லவா.. ஏன்டா இந்த விஜய்யை பாடாய் படுத்துனோம்... ஏன்டா இந்த விஜய்யை வேதனைப்படுத்துனோம்.. ஏன்டா இந்த விஜய்க்கு எதிராக சதி செய்தோம்.. ஏன்டா இந்த விஜய்க்கு எதிராக சூழ்ச்சி செய்தோம்.. என நினைச்சு.. நினைச்சு பீல் பண்ண போறீங்க.. மக்களே உங்களை பீல் பண்ண வைக்க போறாங்க" என்று தவெக தலைவர் விஜய் தனது கடைசி நாள் பிரச்சாரத்தில் கூறியிருந்தார்.
இதுபற்றி மேலும் விஜய் கூறுகையில், நான் என்ன கெடுதல் செய்துவிட்டேன் உங்களுக்கு.. நீங்கள் சாப்பாடும் சாப்பாட்டில் மண்ணை அள்ளிப்போட்டேனா... உங்கள் ஆட்சியின் லட்சணத்தை..உங்களுடைய ஊழலையும், நீங்களும் மந்திரியும் அடிக்கிற கொள்ளையை மக்களுக்கு எடுத்து சொன்னேன்.. இதை சொல்லாமல் வேறு எதை சொல்வார்கள்..

கரூர் விஷயத்தில் என்ன நடந்தது என்று கரூர் மக்களை கேட்டாலே புட்டு புட்டு வைப்பார்கள்.. என் மேல் பழியை தூக்கி போடுறீங்க.. என்னமோ நாங்கள் எல்லாம் அரசியலே பண்ண மாட்டோம்.. இந்த விஷயத்தில் அரசியல் செய்ய மாட்டோம் என்று வீடியோ போட்டுவிட்டு, சட்டசபையில் உட்கார்ந்து கொண்டு என் மேல் பழியை போடுறீங்க லேட்டா வந்துட்டாருன்னு..
போலீஸ் கொடுத்த டைமில் தான் நான் அங்கு இருந்தேன்.. நாமக்கல்லில் இருந்து கரூர் வரும் வழியில் மக்களை அம்போ வென்று விட்டு வர சொல்றீங்களா... நாமக்கல்லில் இருந்து கரூருக்கு நான் எவ்வளவு நேரத்தில் வந்தேன்.. எப்படி வந்தேன் என்று உலகமே லைவில் பார்த்தது.. வாய் கூசாமல் என் மீது பழியை தூக்கிப்போடுறீங்க.. ஒரு மனசாட்சி வேண்டாம்.. சரி, நீங்கள் தான் எதுவும் பண்ணலையே சார்...20 வருஷமாக கரூரில் மட்டுமே போட்டியிட்ட அடிமையை ஏன் கோயம்புத்தூர் (செந்தில் பாலாஜி) வரைக்கும் ஓட வைத்தீங்க.." என்று விஜய் கூறியிருந்தார்,
விஜய்யின் இந்த கடைசி பிரச்சார வீடியோவை இப்போது தவெக நிர்வாகிகள் மற்றும் விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பரப்பி, ஸ்டாலினை விமர்சித்து வருகிறார்கள். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 107 தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது. சிங்கள் கட்சியாக அதிக இடங்களில் வென்றுள்ளதால், திமுக, அதிமுக கூட்டணியில் உள்ள பாமக, காங்கிரஸ் ஆகியவற்றின் எளிதாக ஆட்சியமைக்க முடியும். அல்லது அதிமுக உடன் சேர்ந்து விஜய் எளிதாக ஆட்சியமைக்க வாய்ப்பு உள்ளது. இப்படியான சூழல் இருப்பதால் ஓரிரு நாளில் விஜய் முதல்வராவது உறுதியாகி உள்ளது. அதேநேரம் முதல்வர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோற்றுப்போனதால், எம்எல்ஏ பதவியை இழந்ததுடன், முன்னாள் முதல்வராக மாறுகிறார். இதனை கூறி தான் விஜய் ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.
-
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது












Click it and Unblock the Notifications