கிங் மேக்கர்.. சென்னையில் தேர்தல் முடிவையே.. தீர்மானிக்கும் விஜய்.. தவெக ஆடும் ஸ்பாய்லர் கேம்
சென்னை: 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தலைநகர் சென்னையின் அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத மாற்றத்தைச் சந்தித்து வருகிறது. தவெக பல தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்குமா என்பது சந்தேகமே. ஆனால், அவர்கள் நிச்சயமாக ஒரு 'ஸ்பாய்லர்' (Spoilers) ஆக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.
சமீபத்திய அரசியல் ஆய்வுகள் மற்றும் கள நிலவரங்களின்படி, சென்னையின் 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளது.

20% வாக்கு வங்கி: சென்னையில் தடம் பதிக்கும் திமுக
சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் தவெக கணிசமான வாக்குகளைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் மட்டும் தற்போதைய கணிப்புகளின்படி, அக்கட்சி ஏறத்தாழ 20% முதல் 23% வரையிலான வாக்குகளை பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஒரு புதிய கட்சிக்கு இவ்வளவு பெரிய வாக்கு சதவீதம் கிடைப்பது ஆச்சரியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களின் ஆதரவு தவெக-விற்குப் பெரும் பலமாக அமைந்துள்ளது.
திமுக - அதிமுக வாக்குகளில் சரிவு
விஜய்யின் அரசியல் வருகை யாருக்குச் சாதகமாக அமையும் என்பதில் இன்னும் தெளிவு பிறக்கவில்லை. ஆனால், அவர் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளின் வாக்கு வங்கிகளையும் சரிசமமாகப் பிரிக்கிறார் என்பது மட்டும் இப்போதைக்கு உறுதியாகத் தெரிகிறது.
திராவிடக் கொள்கைகளில் ஆர்வம் கொண்ட, ஆனால் திமுக மீது அப்செட்டில் இருக்கும் இளைஞர்கள் திமுகவை விடுத்து தவெக-வை நோக்கியும்,
தற்போதைய தலைமைச் சிக்கல்களால் அதிருப்தியில் உள்ள அதிமுக தொண்டர்களில் ஒரு பகுதியினர் விஜய்யை நோக்கியும் நகர்வதாகக் கள ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முக்கியமாக ஆளும் கட்சிக்கு எதிரான அதிருப்தி வாக்குகள் பொதுவாக எதிர்கட்சிக்கு செல்லும் . அதாவது பிரதான எதிர்கட்சிக்கு செல்லும்.
ஆனால் இங்கே விஜய் வந்துள்ளார். இதனால் ஆளும் கட்சிக்கு எதிரான அதிருப்தி வாக்குகள் பிரியலாம். அதாவது ஒரு பக்கம் அதிமுகவிற்கு ஒரு சில வாக்குகள் செல்லலாம். இன்னொரு பக்கம் தவெகவிற்கு செல்லலாம். ஆளும் கட்சிக்கு எதிரான அதிருப்தி வாக்குகள் இப்படி பிரிவது திமுகவிற்கு சாதகமாக அமையும். அதிமுகவிற்கு சிக்கலாக அமைதவெக பல தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்குமா என்பது சந்தேகமே. ஆனால், அவர்கள் நிச்சயமாக ஒரு 'ஸ்பாய்லர்' (Spoilers) ஆக இருப்பார்கள்.
வெற்றியாளரா அல்லது 'ஸ்பாய்லரா'?
தற்போதைய சூழலில் ஒரு விஷயம் மிகவும் தெளிவாகத் தெரிகிறது: அதாவது, ஒரு தொகுதியில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் சக்தியாக விஜய் இருப்பார்.
சென்னையின் பல தொகுதிகளில் வெற்றி வித்தியாசம் என்பது வெறும் 2,000 முதல் 5,000 வாக்குகளாகவே இருக்கும். அத்தகைய சூழலில், 20% வாக்குகளைப் பிரிக்கும் ஒரு கட்சி, மிகப்பெரிய அதிர்வலைகளை உண்டாக்கும். அதாவது விஜய் பெரிய அளவில் கேம் சேஞ்சராக இருக்கும்.
இறுதியாக எழும் கேள்வி இதுதான்:
விஜய் பிரிக்கப்போகும் இந்த வாக்குகள் யாருடைய வெற்றியைப் பறிக்கப் போகின்றன? அவர் திமுகவின் கோட்டையைச் சிதைக்கப் போகிறாரா அல்லது அதிமுகவின் மீட்சியைத் தடுக்கப் போகிறாரா? இந்த மர்மம் 2026 தேர்தல் முடிவுகளில் மட்டுமே விலகும்
-
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
விஜய் எடுக்கும் ரிஸ்க்.. பரந்தூர் விமான நிலையத்தால் பல விஷயங்களை இழக்க வேண்டியிருக்கும்! -
மாட்டிக்கிட்ட பங்கு..பயிர்க் கடன் தள்ளுபடி! ரூல்ஸ் தெரியாமல் சிக்கிய விஜய்! நேக்காக எஸ்கேப்பான திமுக -
TASMAC: பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் ஏன்? யார் யாருக்கு லஞ்சம் போகிறது தெரியுமா? முழு லிஸ்டடால் ஷாக் -
டெல்லியில் முதல்வர் விஜய் - சோனியா, ராகுல் சந்திப்பு திடீர் ரத்து.. என்ன நடந்தது? -
'பவர்’ தந்த மக்களுக்கு ’பவர்கட்’ பரிசு.. என்ன துறை என்றே தெரியாத அமைச்சர்கள்! விட்டு விளாசிய தமிழிசை -
விஜய்யுடன் டெல்லி பயணித்த அந்த இளைஞர் யார்? போகுமிடமெல்லாம் கூடவே இருந்தாரே.. பின்னணி -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
சமூக வலைதளங்களை தவெகவினர் தந்திரமாக பயன்படுத்தினார்கள்.. கே.என்.நேரு பேச்சு -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
விவசாய கடன் தள்ளுபடி.. டெல்டாவில் விஜய்க்கு பெருகும் எதிர்ப்பு! போராட்டத்தில் குதித்த விவசாயிகள் -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications