• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

"டோட்டல் சேஞ்ச்".. இது "ஸ்டாலினே" இல்லை.. புல்லரிக்கும் திமுக.. ஆச்சரியத்தில் அதிகாரிகள்.. செம!!

|

சென்னை: வரும் 7ம் தேதி முதல்வராக முக ஸ்டாலின், பதவியேற்க போவதாக கூறப்பட்டு வரும் நிலையில், திமுக தலைமை குறித்த, 2 முக்கிய தகவல்களும் கசிந்து வருகின்றன.

  ஒப்பந்த செவிலியர்களின் பணி நிரந்தரம்.. பத்திரிகையாளர்கள் முன்களப்பணியர்கள்.. அடுத்தடுத்து அறிவிப்பு

  10 வருடத்துக்கு பிறகு திமுக தொண்டர்கள் முகமெல்லாம் பூரித்து போய் உள்ளது.. திமுக மேல்மட்டத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தயாராகி வருகின்றன.

  எனவே, வரும் 7-ம்தேதியே ஸ்டாலினின் பதவியேற்பு விழா நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. அதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகின்றன.

  முதல்வராக பதவியேற்றதுமே பல முக்கிய அறிவிப்புகளை ஸ்டாலின் வெளியிடுவதாக கூறப்படுகிறது.. அதாவது ஏற்கனவே திட்டமிட்டு வைத்திருந்த சில அறிவிப்புகளுக்கு அன்றைய தினம் கையெழுத்து போடுவதாகவும் கூறப்பட்டு வருகிறது. இதனிடையே, கொரோனா தொற்று அதிகமாகிவிடவும், கட்டுப்பாடுகள் குறித்த அறிப்புக்கு ஓகே சொல்ல வேண்டியதாக போய்விட்டது.

  சங்கரன்கோவில்: 30 ஆண்டுகால அ.தி.மு.க. கோட்டையை தகர்த்த தி.மு.க..அ.தி.மு.க தோல்விக்கு காரணம் இதுதான்சங்கரன்கோவில்: 30 ஆண்டுகால அ.தி.மு.க. கோட்டையை தகர்த்த தி.மு.க..அ.தி.மு.க தோல்விக்கு காரணம் இதுதான்

   வழிமுறைகள்

  வழிமுறைகள்

  கொரோனா தடுப்பு குறித்த வழிமுறைகள் குறித்து சுகாதாரத்துறை ராதாகிருஷ்ணனிடமும், உயர் அதிகாரிகளிடம் ஆலோசித்து வருகிறாராம்..தேர்தலில் வெற்றி பெற்றதற்கு, உயர் அதிகாரிகள் பலர் ஸ்டாலினுக்கு வாழ்த்து சொல்ல வருகின்றனர்.. அப்போது, பதவியேற்பு விழா பற்றி பேச்சை அவர்கள் எடுத்தால்கூட, "அதை விடுங்க.. மொதல்ல மக்களை தொற்றிலிருந்து காப்பாற்ற நடவடிக்கை எடுக்கணும்.. அதை பற்றி பேசலாம்.. பணியை சிறப்பாக தொடருங்கள்" என்று சொல்கிறாராம்.

   வாக்கு சதவீதம்

  வாக்கு சதவீதம்

  இதைதவிர, கட்சி நிர்வாகிகள் பலரும் வந்து சந்தித்து பேசிவிட்டு போகிறார்களாம்.. அவர்களிடம் தொகுதி குறித்த வாக்கு வித்தியாச நிலவரங்களையும் மறக்காமல் கேட்டு தெரிந்து கொள்கிறாராம்.. குறைவான வெற்றி சதவீதம் என்றால், ஆறுதல் வார்த்தை சொல்கிறாராம்.. அதிக வாக்கு சதவீதம் என்றால் அவர்களுக்கு வாழ்த்து சொல்கிறாராம்.

   நெருக்கம்

  நெருக்கம்

  ஆனால், முன்பெல்லாம் திமுக தலைவரை யாராலும் சந்திக்கவே முடியாமல் இருக்குமாம்.. குறிப்பாக கூட்டணி சமயத்தில், கூட்டணி கட்சி தலைவர்களே ஸ்டாலினை சந்திக்க முடியாமல் போனதாகவும், அதனால் ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்களிடமே சீட், தொகுதி உட்பட அனைத்தையும் சொல்ல வேண்டி இருந்ததாகவும் செய்திகளும் வந்திருந்தன.. ஆனால், இப்போது அப்படி இல்லையாம்.. தனக்கு வாழ்த்து சொல்ல, வரும் நிர்வாகிகளை தனித்தனியாகவே சந்தித்து பேசுகிறாராம் ஸ்டாலின்.

   முதல்வர் ரூம்

  முதல்வர் ரூம்

  இதனிடையே இன்னொரு தகவலும் வெளியாகி உள்ளது.. எப்படியும் வரும் 7ம் தேதி பதவியேற்பு இருக்கும் என்பதால், தலைமை செயலகத்தில் உள்ள முதல்வர் அறை ரெடியாகிறதாம்.. அதேபோல அமைச்சர்களுக்கான ரூம்களும் ரெடியாகி வருகிறதாம்.. இந்த அறைகளில் ஏற்கனவே இருந்த அதிமுக அமைச்சர்களின் பொருட்கள் எடுத்து செல்லப்பட்டுவிட்ட நிலையில், அந்த அறைகள் தயாராகி வருகின்றன.. அறைகளில் பொருத்தப்பட்டிருந்த பெயர் பலகைகள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளன.. அதேபோல, எல்லா ரூம்லும் ஜெயலலிதா படங்கள் இருந்தன.. அவைகளும் அகற்றப்பட்டுவிட்டன...!

  English summary
  The Chief Minister’s room in the Secretariat is said to be ready
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X