பிளானில் திடீர் சேஞ்ச்.. ஒருநாள் முன்னதாக சென்னை திரும்பிய முதலமைச்சர்! பாதி தான் நடந்தது.. மீதி?
சென்னை: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் குடும்பத்தினருடன் ஓய்வெடுக்க வந்திருந்த தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணத் திட்டத்தை விட ஒரு நாள் முன்னதாக இன்று (வெள்ளிக்கிழமை) சென்னை திரும்பினார்.
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் நேரடியாக சென்று பிரச்சாரம் மேற்கொண்ட தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டார்.

ஐந்து நாள் பயணமாக தனது குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலினுடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களும் சென்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: கடந்த 29ஆம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்குச் சென்ற முதலமைச்சர் அங்கிருந்து கார் மூலமாக கொடைக்கானல் சென்றார். இதையடுத்து அங்கு தனியார் தங்கும் விடுதியில் முதலமைச்சர் குடும்பத்துடன் தங்கி இருக்கிறார். வரும் சனிக்கிழமை வரை கொடைக்கானலில் தங்கி இருக்கும் முதலமைச்சர் விரைவில் சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொடைக்கானலில் ஓய்வு: முதலமைச்சர் ஸ்டாலின் வருகை ஒட்டி கொடைக்கானலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கொடைக்கானலில் நட்சத்திர ஏரி, பிரையண்ட் பூங்கா, குணா குகை, நட்சத்திர ஏரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை முதலமைச்சர் பார்வையிட திட்டமிட்டிருந்தார். முதலமைச்சர் ஸ்டாலின் ஓய்வுக்காக கொடைக்கானல் வந்திருக்கும் நிலையில் அவரை கட்சியினர் சந்திப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
பயண திட்டம் மாற்றம்: இந்நிலையில் கொடைக்கானலில் திட்டமிட்டபடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுலாத்தலங்களுக்கு சென்று பார்வையிடவில்லை. நட்சத்திர ஏரியில் படகு சவாரி மற்றும் கால்ஃப் மைதானத்தில் சிறிது நேரம் மட்டுமே முதலமைச்சர் விளையாண்டார். அதே நேரத்தில் பயணத்தின் போது பெரும்பாலும் பாம்பாறு பகுதியில் இருந்த நட்சத்திர விடுதியிலேயே குடும்பத்தினருடன் முதலமைச்சர் தங்கியிருந்தார். இந்த நிலையில் முதலமைச்சரின் பயணத்திட்டத்தில் மாற்றம் ஏற்பட்டு அவர் உடனடியாக சென்னை திரும்புவதாக நேற்று அறிவிக்கப்பட்டது.
சென்னை பயணம்: நேற்று மாலை 4 மணிக்கு மதுரையில் இருந்து சென்னை செல்வதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் அந்த திட்டமும் திடீரென நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் சென்னை திரும்புவதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்தனர். மாலையில் கொடைக்கானலில் இருந்து கார் மூலம் மதுரை விமான நிலையம் சென்ற முதலமைச்சர் அங்கிருந்து சென்னை திரும்பினார். சென்னையில் இருந்து அவர் வீடு செல்லும் வரையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் வழங்கப்பட்டது.
மாற்றம்: முன்னதாக முதலமைச்சரின் பயணத்தின் போது பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டு இருந்தது அதாவது குணா குகை ரோஜா பூங்கா உள்ளிட்ட பகுதிகளுக்கு முதலமைச்சர் சென்று நேரில் பார்வையிடுவார் என அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர். ஆனால் சில இடங்களை தவிர முதலமைச்சர் வேறு எங்கும் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
ஊரே ஒன்னு சேர்ந்து..செருப்பால் அடிச்சு! என்னங்க நடக்குது இங்க.. திருவிழானாலும் ஒரு நியாயம் வேண்டாமா? -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications