திமுகவை மறைமுகமாக சாடிய விஜய்.. மற்றவர்களின் நம்பிக்கையை மதிக்கணும்.. மகாபலிபுரத்தில் அதிரடி பேச்சு
சென்னை: தமிழக அரசியல் கட்சிகள் சார்பில் கிறிஸ்துமஸ் விழா ஒவ்வொரு கிறிஸ்துமஸ் பண்டிகையின் போதும் கொண்டாடப்படுவது வழக்கம் ஆகும். அந்த வகையில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள 'ப்போர் பாயிண்ட்ஸ்' கன்வென்ஷன் சென்டரில் இன்று கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இந்த விழாவில் த.வெ.க. தலைவர் விஜய் கலந்துகொண்டு பேசுகையில் திமுகவை மறைமுகமாக தாக்கி பேசினார். அதன் விவரங்களை பார்ப்போம்.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் ஆரம்பித்த பின்னர், தீவிர அரசியலில் தற்போது தான் ஈடுபட்டு வருகிறார்கள். தேர்தல் நெருங்கும் நிலையில், கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சும் விதமாக செங்கோட்டையன். ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், சிடி நிர்மல் குமார் என பலரையும் கடந்த சில மாதங்களில் இணைத்துள்ளார். பல்வேறு யூடியூபர்கள், நடிகர்கள், அரசியல் கட்சி நிர்வாகிகளையும் தங்கள் கட்சியில் சேர்த்து வருகிறார் விஜய். தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், கூட்டணி யாருடன் என்பதை விஜய் அறிவிக்கவில்லை. இந்த முறை அவரை தனித்து நிற்கவே அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

அவர் தனித்து நிற்பது யாருக்கு பாதகமாக போகிறது என்பது தெரியவில்லை.. அதேநேரம் அதிமுகவின்முக்கிய நிர்வாகிகளை தன் பக்கம் இழுப்பதில் விஜய் கவனம் செலுத்துவதை காண முடிகிறது. ஜெயலலிதா போலவே திமுகவை தீய சக்தி என்று விமர்சிப்பது தொடங்கி, தற்போது பாஜகவையும் மெல்ல மெல்ல விமர்சிக்க தொடங்கிவிட்டார்.
இதன் காரணமாக திமுக மட்டுமின்றி அதிமுகவும் பாஜகவும் தவெகவை தற்போது விமர்சிக்க தொடங்கிவிட்டார்கள். அரசியல் களம் தற்போது சூடுபிடித்துள்ளது. தேர்தல் நெருங்கும் வேளையில் ஒவ்வொரு நிகழ்வும் தேர்தல் கண்ணோட்டத்துடனும், ஆதாயத்துடனும் பார்க்கப்படும்.
இந்த சூழலில் தமிழக அரசியல் கட்சிகள் சார்பில் கிறிஸ்துமஸ் விழா ஒவ்வொரு கிறிஸ்துமஸ் பண்டிகையின் போதும் கொண்டாடப்படுவது வழக்கம் ஆகும். அந்த வகையில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள 'ப்போர் பாயிண்ட்ஸ்' கன்வென்ஷன் சென்டரில் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கியது. சமத்துவக் கிருஸ்துமஸ் விழா என்ற பெயரில் நடைபெற்ற விழாவில் ல் செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
தவெக தலைவர் நடிகர் விஜய் பேசுகையில், "இது ஒரு அன்பான தருணம்,அழகான தருணம். அன்பும் கருணையும் எல்லாவற்றுக்கும் அடிப்படை. இந்த இரண்டுமே இருக்கும் மனசு தான் தாய் மனசு.. நம்ம தமிழ்நாடு மண்ணும் அப்படிப்பட்ட மண்ணுதாங்க . தாய் அன்பு கொண்ட மண்ணுதான். ஒரு தாய்க்கு எல்லாம் பிள்ளைகளும் ஒன்று தான். அதனால் பொங்கல், தீபாவளி, ரம்ஜான்,கிறிஸ்துமஸ் போன்ற எல்லா பண்டிகைகளும், எல்லாரும் சந்தோஷமாக ஷேர் பண்ணிக்ககூடிய ஊரு தானே நம்ம ஊரு.. இங்கு வாழ்க்கை முறையும் வழிபாட்டு முறையும் வேறுவேறு என்றாலும் நாம் எல்லாருமே சகோதரர்கள் தானே.
அதனால் தான் நாம் அரசியலுக்கு வந்த பின்னர், கடவுள் நம்பிக்கை உள்ளது என்று அறிவித்தது ஏன் தெரியுமா? உண்மையான நம்பிக்கை தான் நல்லிணக்கத்தை விதைக்கும். மற்றவர்களின் நம்பிக்கையை மதிக்க சொல்லி தருகிறோம்.
அப்படிப்பட்ட நம்பிக்கை இருந்துட்டாலே போதும்.. எப்பேர்பட்ட பிரச்சனைகளையும் ஜெயிக்கலாம். அதுமட்டுமல்ல.. அப்படிப்பட்ட நம்பிக்கையோடு வலிமையை பற்றி சொல்வதற்கு பைபிளில் நிறைய கதைகள் உள்ளன. படிக்காதவர்கள்.. படித்து பாருங்கள். ஒரு இளைஞனுக்கு எதிராக சகோதரர்கள் பொறாமை பட்டு, அவனை பாழும் கிணற்றில் தள்ளிவிட்டார்கள், அவர் எப்படி மீண்டு வந்து நாட்டுக்கே அரசனாகி, (உற்சாக குரல் எழுப்புகிறார்கள்) தனக்கு துரோகம் செய்த சகோதரர்களிடம் நாட்டையே எப்படி காப்பாற்றினார் என்ற கதை பைளில் இருக்கிறது. படிக்காதவர்கள் படித்து பாருங்கள்.. அந்த குறிப்பிட்ட கதை யாரை பற்றியது என்று நான் சொல்லி தெரிய வேண்டும் என்ற அவசியம் உங்களுக்கு இல்லை (திமுகவை பற்றியது).
இப்படிப்பட்ட கதைகள் எல்லாம் நமக்கு எதை உணர்த்துகிறது என்றால், கடவுளுடைய அருளும், மக்களை மானசீகமாக நேசிக்கிற அந்த அன்பும், அதீத வலிமையும், அதற்கான உழைப்பும் இருந்துட்டாலே போதும்.. எவ்வளவு பெரிய போராட்டமோ அல்லது போரோ அல்லது எதிரிகளையே ஜெயிக்கலாம் அப்படீன்றது தான் இந்த கதைகள் எல்லாம் நமக்கு உணர்த்துகிறது. இந்த விழாவில் நாமும், தமிழக வெற்றிகழமும், சமூக சமய நல்லிணக்கத்தை பாதுகாப்பதில் 100 சதவீதம் உறுதியாக இருப்போம்." என்று கூறினார்.












Click it and Unblock the Notifications