பல்லடத்தில் மோடி அடித்த பல்டி! பாஜக ஆட்சியைக் கவிழ்த்தவர் ஜெ! மோடி Vs திமுக அனல் சர்ச்சை
சென்னை: திமுகவுக்கும் மோடிக்குமான மோதல் உச்சகட்டத்தைத் தொட்டு இருக்கிறது. இரண்டு நாள் பயணமாகத் தமிழகம் வந்த மோடி, தூத்துக்குடியில் 17,300 கோடிக்கான திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்தார்.
குலசேகரப் பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டிப் பேசினார். அப்போது மக்களைப் பிரித்தாளும் திமுக கட்சி இனி தமிழ்நாட்டில் இருக்காது என்று தாக்கினார்.

மேலும் மத்திய அரசின் திட்டங்களால் தமிழ்நாடு மாபெரும் வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் ஆனால் அந்தத் திட்டங்களை திமுக ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கப்படுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.
மோடியின் இந்தப் பேச்சால் திமுகவினருக்கும் மோடிக்கும் இடையேயான மோதல் போக்கை மேலும் அதிகரித்துள்ளது.
மோடியின் பேச்சுக்கு திமுக தரப்பிலிருந்து பலத்த எதிர்வினைகள் கிளம்பியுள்ளது.
மோடி எழுதிய பாராட்டுக் கடிதம்:
பிரதமரின் பேச்சு குறித்து கருத்துச் சொல்ல முன்வந்த திமுக செய்தி தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், "இன்று 17 ஆயிரம் கோடியில் பிரதமர் மோடி கொண்டுவந்துள்ள திட்டத்தை 2013இல் பிரதமராக மன்மோகன் சிங் இருந்தபோது நேரில் சந்தித்து வலியுறுத்தியவர் மு.கருணாநிதி. அதன்பிறகு கனிமொழி பலமுறை நாடாளுமன்றத்தில் இந்தத் திட்டத்திற்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துள்ளார்.

இன்றைக்கு திமுகவை விமர்சிக்கும் இதே பிரதமர் நரேந்திர மோடி அன்றைக்கு திமுகவைப் பாராட்டி கடிதமும் எழுதி இருக்கிறார். ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக நீங்கள் கொடுத்த அழுத்தத்தின் பெயரில் இத்திட்டம் வந்துள்ளது. அதற்கான பாராட்டுக்கள் என்று கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். அதே பிரதமர் இன்று மாற்றிப் பேசுகிறார்" எனக் கூறுகிறார்.
அமைச்சர் எ.வ.வேலு, அதிக நிதியை மாநில அரசு தரும் போது பிரதமரின் பெயரை ஏன் நாங்கள் வைக்க வேண்டும் என்று கேள்வி எழுப்புகிறார்.
70% எங்கள் நிதி எங்கள் பெயர்:
"பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டம் என்ற பெயரில் இலவசமாக வீடு வழங்கப்படுகிறது. அதில் மத்திய அரசின் நிதி பங்கீடு என்பது 30% தான். மீதியுள்ள 70% நிதியை மாநில அரசுதான் தருகிறது. இந்தத் திட்டத்தை நாங்கள் ஸ்டிக்கர் ஒட்டி உள்ளோம் குறிப்பிட்டு பிரதமர் சொல்லவில்லை. பொத்தாம் பொதுவாக ஒரு குற்றச்சாட்டைச் சொல்கிறார். அதற்கு எப்படி பதில் சொல்ல முடியும்?" என்கிறார்

திமுக காணாமல் போய்விடும் என மோடி சொன்னதற்குக் கனிமொழி "திமுக காணாமல் போய்விடும் என்று பலர் சொன்னதை நானே பார்த்திருக்கிறேன். ஒரு கட்டத்தில் அப்படிச் சொன்னவர்களே காணாமல் போய் உள்ளனர்.
ஆனால், திமுக இன்னும் இருந்து கொண்டுதான் உள்ளது. ஒவ்வொரு முறை பிரதமரைச் சந்திக்கும் போது தமிழ்நாட்டிற்கான நலத்திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் கோரிக்கையாக முன்வைத்துக் கொண்டுதான் உள்ளார். ஆனால், பிரதமர் மோடி இதுவரை ஒன்றைக்கூட நிறைவேற்றித் தரவில்லை.
சமீபத்தில் புயல் மழையால் தமிழ்நாடு பாதிக்கப்பட்டது. அதற்குக்கூட நிவாரணம் அளிக்கவில்லை. இதுதான் உண்மை நிலையாக இருக்கிறது. தமிழ்நாட்டிற்கு ஒரு நல்ல திட்டம் கிடைக்கும்போது திமுக அரசு அதை எந்தக் காலத்திலும் தடுத்ததே இல்லை" " என்று கூலாக பதிலளித்துள்ளார்.
கார் உள்ளவரைக் கடல்நீர் உள்ளவரை:

அமைச்சர் சேகர்பாபு, "திமுக காணாமல் போய்விடும் என்று சொன்னவர்கள் அரசியல் பாதைதான் முடிவுக்கு வந்துள்ளது. திமுக முடிந்து போகவில்லை. திமுகவுக்கு முடிவு என்பதே கிடையாது. இந்தக் கட்சி ஆயிரம் காலத்துப் பயிர். இந்த ஆட்சியும் கட்சியும் தொடர்ந்து கார் உள்ளவரைக் கடல்நீர் உள்ளவரை இந்த மண்ணில்தான் இருக்கும்" என்று ரைமிங் ஆக உதாரணம் கொடுத்திருக்கிறார்.
பொன்முடியோ, "மோடியே தெளிவாக ஒன்றை விளக்கி இருக்கிறார். தமிழ்நாடு முதல் இடத்தில் இருக்கிறது என்பதை அவர் ஒப்புக் கொண்டுள்ளார். அதற்கு யார் காரணம்? 1967இல் இருந்து இன்றுவரை கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆட்சி செய்த திராவிட மாடல் ஆட்சிதான் மோடியே மறைமுகமாக ஒப்புக்கொண்டுள்ளார்" என்று சொல்கிறார்
மத்திய அரசின் திட்டங்களுக்கு திமுக ஒத்துழைப்பு தருவதில்லை என்று மோடி குற்றச்சாட்டிற்கு திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, "தமிழ்நாட்டை வஞ்சித்து விட்டுப் பொய்களால் மறைக்க முயற்சிக்கலாமா?

அரசு முறை பயணமாகத் தமிழ்நாட்டிற்கு வந்துவிட்டு, பாஜக பொதுக்கூட்டங் களில் கலந்து கொண்ட மோடி தான் பிரதமர் என்பதையே மறந்து, அரசியல் அவதூறுகளை அள்ளி வீசிவிட்டுப் போய் இருக்கிறார். மோடியின் உரையைப் பார்த்தபோது அவரை நினைத்து பரிதாபமாக இருந்தது.
ஊழல்வாதி ஜெ தந்தது நல்லாட்சியா?
பாஜகவின் ஆட்சியைக் கவிழ்த்தவர் ஜெயலலிதா. ஊழல் வழக்கில் 2 முறை தண்டனைப் பெற்று முதல்வர் பதவியை இழந்தவர் ஜெயலலிதா. 4 ஆண்டு சிறைத்தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் பெங்களூரு நீதிமன்றத் தால் விதிக்கப்பட்டுப் பரப்பன அஹ்ரகார சிறையில் அடைக்கப்பட்டவர் ஜெயலலிதா.
அப்படிப்பட்ட ஜெயலலிதா தமிழ்நாட்டில் சிறப்பான ஆட்சியைக் கொடுத்தார் என்று மோடி பேசியதைக் கேட்டு, தமிழ்நாட்டு மக்கள் சிரிக்கிறார்கள். மோடி நிலைமை இந்தளவுக்குப் போய்விட்டதே என்று கேலி செய்கிறார்கள்.

பல்லடத்தில் மோடி அடித்த பல்டி:
2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது ஜெயலலிதா ஆட்சியைப் பற்றி, தமிழ்நாட்டின் லஞ்ச லாவண்யம் தலைவிரித்தாடுகிறது. இதனால் தமிழ்நாடே முற்றிலும் பாதித்துப் போய் இருக்கிறது' என்று கடுமையாக விமர்சித்த மோடிதான் இன்று பல்லடத்தில் பல்டி அடித்துள்ளார்" என்று நீண்ட கடிதம் எழுதி மோடியை விமர்சித்திருக்கிறார்
திமுகவுக்கும் மோடிக்கும் இடையே நடக்கும் இந்த மோதல் குறித்து பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன், "திமுகவை விமர்சிக்கலாம். தவறில்லை. குறைகளைச் சுட்டிக்காட்டலாம். அதுவும் தவறில்லை.
ஆனால், மதுரையில் எய்ம்ஸ் வந்துவிட்டது என்கிறார் பிரதமர் மோடி. எங்கே வந்தது? யாராவது போய் பார்த்திருக்கிறார்களா? இதுவரை அங்கே ஒன்றுமே காணோம். ஆனால், எய்ம்ஸ் வந்துவிட்டது என்கிறார்.

எல்.முருகனைத் தமிழ்நாடு தேர்ந்தெடுக்கவில்லை. நாங்கள் தேர்ந்தெடுத்து மத்திய அமைச்சராக ஆக்கி உள்ளோம் என்கிறார். யாரை முருகனைப் போட்டிப் போடக்கூடாது என்று தடுத்தார்கள். அவர் ஏன் தேர்தலில் நிறுத்தப்படவில்லை. இப்போதுகூட மீண்டும் ராஜ்ய சபா சீட்டுக் கொடுத்து அவரை நிற்கவிடாமல் தடுத்தது யார்? இப்போதும் வாய்ப்பு உள்ளதே? ஏன் செய்யவில்லை.
தூத்துக்குடிக்கு 5 பைசா தராத மோடி:
மழை வெள்ளத்தால் தூத்துக்குடி மூழ்கியபோது மோடி திருச்சி வரை வந்துவிட்டு அந்தப் பாதிப்புகளைப் பார்க்காமல் திரும்பி விட்டார். இன்று எந்தத் தைரியத்தில் போய் பிரதமர் மோடி தூத்துக்குடியில் நிற்கிறார்? தூத்துக்குடி வெள்ளத்திற்கு இதுவரை 5 பைசா கொடுக்காத மனிதர், அங்குப் போய் நிற்கிறார்.

அங்கே போய் நின்று கொண்டு திமுகவைக் குறைசொல்கிறார். அந்த வெள்ளத்தில் அந்த மக்களுடன் யார் இருந்தார்? கனிமொழி மட்டும்தான் இருந்தார்.
கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடந்தபோது வெள்ள நிவாரணம் கொடுத்தவர்கள், குஜராத்திற்கு 1000 கோடி வெள்ள நிவாரணம் கொடுத்தவர்கள் தமிழ்நாட்டுக்கு ஏன் 5 பைசா கூட நிவாரணம் தரவில்லை என்று கேட்கமாட்டார்களா?" என்கிறார்.

-
புதுசு புதுசா யாரை கூட்டிட்டு வந்தாலும் தமிழ்நாடு பாஜகவுக்கு அவுட் ஆப் கண்ட்ரோல்தான்.. ஸ்டாலின் -
திருச்சி திமுக மாநில மாநாடு LIVE:உங்க அப்பனே வந்தாலும் நடக்காது! பாஜவுக்கு சவால் விட்ட ஸ்டாலின் -
திருச்சி திமுக மாநாட்டில் கமகமக்கும் பிரியாணி.. 10 லட்சம் பேருக்கு சுடச்சுட ரெடி! -
அப்போ நான் கைக் குழந்தையா இருந்தப்போ.. இதே திருச்சியில் தான்! பழைய நினைவுகளை பகிர்ந்த ஸ்டாலின்! -
திருச்சியில் திமுக மாநாடு! 10 லட்சம் பேர் பங்கேற்பு! முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறாரா ஸ்டாலின்? -
ONOE: "ஒரே நாடு ஒரே தேர்தல்.. நோயை விடக் கொடிய மருந்து" - முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு! -
இந்த நாளுக்காகத் தான் வெயிட்டிங்! திருச்சியை திணற வைக்கும் திமுக! ஸ்டாலின் கையில் ‘மெகா’ அஸ்திரம்! -
ஸ்டாலினுக்கு போன் அடித்த ராகுல்.. அப்ப எல்லாமே தப்பா.. செல்வப்பெருந்தகை அப்டேட் -
க்ளோஸ்.. சுள்ளென சுட்டெரிக்கும் உதயசூரியன்.. சூடான தேர்தல் களம்! அடுத்த கட்டத்துக்கு நகர்ந்த திமுக! -
இன்றைய டாப் 10 பேச்சுக்கள் 09/03/2026: ஸ்டாலின் முதல் சீமான் வரை கூறிய நச் கருத்துகள் -
மிஸ் பண்ணாதீங்க! மார்ச் 31-க்குள் இதை செய்யலைன்னா பி.பி.எஃப், செல்வமகள் சேமிப்பு கணக்கு முடங்கிடும்! -
வெல்லும் தமிழ்ப்பெண்களே! தடைகளைத் தகர்த்தெறிந்து முன்னேறுங்கள்! ஸ்டாலினின் மகளிர் தின வாழ்த்து












Click it and Unblock the Notifications