தட்டி தூக்கிய காங்கிரஸ்! தடம் புரண்ட ஆம் ஆத்மி? பஞ்சாபில் பஞ்சரான பாஜக?
இந்தியா கூட்டணியில்தான் ஆம் ஆத்மி இருக்கிறது. டெல்லியில் இணைந்து போட்டியிடும் இந்த இரண்டு கட்சிகளும் பஞ்சாபில் தனித்தனியே களம் காண்கின்றன.
அதற்குக் காரணம், அம்மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ளது. ஆகவே அங்கே இணைந்து போட்டியிட்டால் இரண்டு கட்சிகளும் பலவீனம் அடையலாம் என்பதால் காங். கட்சியும் ஆம் ஆத்மியும் தனித்துப் போட்டியிட முடிவு செய்தன.

இப்படி மாநிலத்திற்கு ஒரு முடிவு எடுத்து கூட்டணி அமைத்ததால்தான், பாஜக இதைச் சுட்டிக்காட்டி விமர்சனத்தை முன்வைத்து வந்தது. இந்தியா கூட்டணியில் உள்ளவர்களிடையே ஒற்றுமை இல்லை. இவர்கள் ஆட்சிக்கு வந்தால் வருடத்திற்கு ஒரு பிரதமரை நாடு சந்திக்க நேரிடும் எனப் பிரதமர் மோடி முன்பே விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் பிரதமர் மோடி சுட்டிக்காட்டியதைப் போலப் பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது. அம்மாநிலத்தில் மொத்தம் 13 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. அதில் காங்கிரஸ் கட்சி கிட்டத்தட்ட 7 இடங்களில் முன்னிலை வகித்து வருவதாகத் தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.
ஆம் ஆத்மி கட்சியானது மொத்தம் 3 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இந்த முடிவுகள் அரசியல் வியூகர்கள் இடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதற்குக் காரணம், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு அனுதாப அலை வீசி வருவதாகச் சொல்லப்பட்டது. அவருக்கு ஆதரவாக மக்கள் உள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால், தேர்தல் முடிவுகள் கிட்டத்தட்ட அதைப் பொய்யாக்கி வருகின்றது என்றே சொல்ல வேண்டும்.
இந்த மாநிலத்தில் விவசாயிகள் போராட்டம் மிகப்பெரிய அலையை நாடு முழுவதும் ஏற்படுத்தியது. ஆகவே பாஜக இங்கே ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது என்றே பலரும் கணித்து வந்தனர்.
அதேபோல் பாஜக இந்த மாநிலத்தில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. தொடக்கத்திலிருந்தே அந்தக் கட்சி போட்டியிலேயே இல்லை.
இம்மாநிலத்தைப் பொறுத்தவரைக் காங்கிரஸ் கட்சிக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கு இடையேதான் போட்டி நிலவி வருகிறது.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் பஞ்சாபில் காங்கிரஸ் 9 இடங்களில் வெற்றி பெற்றது. ஆம் ஆத்மி 1 தொகுதியிலும் அகாலி தளம் 2, பாஜக 2 இடங்களை வென்று இருந்தன. ஆனால், இந்த முறை பாஜக தனது 2 தொகுதிகளை இழந்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.
லூதியானாவில் பாஜகவின் ரவ்னீத் சிங் பிட்டுவை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் அம்ரீந்தர் சிங் ராஜா வார்ரிங் முன்னணியில் இருப்பதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதே போல அமிர்தசரஸ், ஜலந்தர், ஃபதேகர் சாஹிப், குர்தாஸ்பூர், பாட்டியாலா மற்றும் லூதியானா தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வருகின்றனர். ஹோஷியார்பூர், சங்ரூர் மற்றும் ஆனந்த்பூர் சாஹிப் ஆகிய இடங்களில் ஆம் ஆத்மி முன்னிலையில் உள்ளது.
முன்னாள் துணை முதலமைச்சரான அக்கட்சியின் சுக்ஜிந்தர் ரந்தவா, குர்தாஸ்பூர் தொகுதியில் தனது எதிர்க் கட்சியான பாஜகவின் தினேஷ் சிங் பாபுவை எதிர்த்து 8,696 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்துள்ளார்.
சீக்கியர்கள் ஆதிக்கம் செலுத்தக் கூடிய நாட்டின் எல்லை மாநிலமான பஞ்சாபில், பிஜேபி மற்றும் அதன் முன்னாள் கூட்டணிக் கட்சியான அகாலிதளம் ஆகியவை தனித்துப் போட்டியிடுகின்றன.
மொத்தம் 13 நாடாளுமன்ற தொகுதிகளிலும் 2019 ஆம் ஆண்டில், அகாலி தளத்துடன் கூட்டணி வைத்து பாஜக மூன்று மக்களவைத் தொகுதிகளில் (அமிர்தசரஸ், குர்தாஸ்பூர் மற்றும் ஹோஷியார்பூர்) போட்டியிட்டது.
கடந்த முறை அமிர்தசரஸ், ஃபரித்கோட், ஆனந்த்பூர் சாஹிப், ஜலந்தர், கதூர் சாஹிப், லூதியானா, ஃபதேகர் சாஹிப் மற்றும் பாட்டியாலா ஆகிய 8 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.
அகாலி தளம் பதிண்டா, பெரோஸ்பூர் மற்றும் பாஜக குர்தாஸ்பூர், ஹோஷியார்பூர் ஆகிய இடங்களை வென்றது. சங்ரூரில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications