ரெண்டே ரெண்டுக்குதான் போட்டியே! ஒன்னு மின்வெட்டு.. இன்னொன்னு அரிவாள் வெட்டு.. ஸ்டாலின் பேச்சு
சென்னை: இப்போது இரண்டே இரண்டுக்கு தான் போட்டியே, ஒன்னு மின்வெட்டு, இன்னொன்னு அரிவாள் வெட்டு. அந்த அளவுக்கு மோசமான ஆட்சி நடக்கிறது. ரீல்ஸ் வெறி ஆட்சி நடக்கிறது. தவெக ஆட்சியால் 25 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது தமிழக வளர்ச்சி என திமுக முப்பெரும் விழாவில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
திமுக முப்பெரும் விழாவில் மு.க ஸ்டாலின் பேசியதாவது:- தமிழ்நாடே அவர்கள் வருகைக்கு காத்திருந்த மாதிரி பில்டப் பண்ணிட்டு இருக்காங்க.. நம்மளை விட 17 லட்சம் ஓட்டுகள் தான் அதிகம் பெற்று இருக்கிறார்கள். நம் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தான் தவெக ஆட்சி அமைத்து வருகிறது. முதலில் பஞ்ச் டயலாக் பேசினார்.. இப்போது ஃபாரினில் சூட்டிங் ஆட்சி நடக்கிறது.

நாங்க ஆட்சிக்கு வந்திருந்தால் இந்நேரம் மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 வாங்கியிருப்பீர்கள். இப்போது இரண்டே இரண்டுக்கு நடுவில் தான் போட்டியே, ஒன்னு மின்வெட்டு, இன்னொன்னு அரிவாள் வெட்டு. அந்த அளவுக்கு மோசமான ஆட்சி நடக்கிறது. ரீல்ஸ் வெறி ஆட்சி நடக்கிறது. தவெக ஆட்சியால் 25 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது தமிழக வளர்ச்சி.
நான் வெளிநாடு போகும் போது, சிஎம் சார் வெளிநாடு முதலீடா அல்லது வெளிநாட்டில் முதலீடா என்று கேட்டார். ஆனால் இன்றைக்கு மக்கள் கேட்கிறார்கள், "இந்தியாவில் இருக்கிற கம்பெனிக்கு லண்டனில் போய் ஏன் கையெழுத்து போட்டிங்க சிஎம் சார் என கேட்கிறாங்க".. தவெகவினரால் சட்டமன்ற மாண்பு கெட்டுவிட்டது. ரீல்ஸ் வெறி பிடித்தவர்களாக தவெகவினர் உள்ளனர். கொளத்தூர் மக்களுக்கு கோடான கோடி நன்றி..
திமுக தந்தது ரியல் ஆட்சி. இவர்கள் நடத்துவது ரீல்ஸ் ஆட்சி. ஒரு முறை மக்கள் ஏமாந்திருக்கலாம். தொடர்ந்து ஏமாறுவார்கள் என்று நினைத்தால், ஏமாறப்போவது இப்போது இருக்கும் முதல்வர்தான். அவதூறுகளைப் பரப்பி, கொச்சையாகப் பேசி, திமுகவை அவமானப்படுத்தலாம். நாங்கள் வட்டியும் முதலுமாகத் திருப்பித் தர காத்திருக்கிறோம். நேரம் விரைவிலேயே வரும்.
தவெகவின் திமிருத்தனத்திற்கும், ஆணவத்திற்கும் பாடம் புகட்டும் வாய்ப்புதான் இந்த இடைத்தேர்தல். அதனால், மதுராந்தகம், தாராபுரம் வாக்காளர்கள் ஆளுங்கட்சிக்குத் தக்க பாடம் புகட்டத் தி.மு.க.விற்கு வாக்களிக்க வேண்டும். என்று பேசினார்.


Click it and Unblock the Notifications
