Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டெல்லியில் கனிமொழி நடத்தும் ‘டீல்’... கைகொடுக்குமா கை? கிடுகிடுத்த அறிவாலயம்.. அவரையே பார்க்கிறாராமே

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியல் களம் இப்போது 'திக் திக்' நிமிடங்களில் நகர்ந்து கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் 2026 சட்டமன்றத் தேர்தல் ஜுரம் ஏறிக்கொண்டிருக்க, மறுபக்கம் அறிவாலயத்திற்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் இடையிலான 'சீட்' யுத்தம் க்ளைமாக்ஸை எட்டியிருக்கிறது.

கடந்த சில வாரங்களாகவே, "கூட்டணிக்குள் குழப்பமில்லை" என்று வெளியுலகிற்குச் சொல்லிக்கொண்டாலும், உள்ளுக்குள் புகைச்சலோ ஓயவில்லை. இந்த நிலையில் தான், இன்று டெல்லியில் நடக்கும் ஒரு சந்திப்பும், நாளை சென்னையில் நடக்கவிருக்கும் அதிகாரப்பூர்வப் பேச்சுவார்த்தையும் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியின் தலையெழுத்தைத் தீர்மானிக்கப் போகின்றன.

tamil nadu assembly elections 2026 congress

டெல்லியில் கனிமொழி... ராகுலிடம் சொல்லப்போகும் 'மெசேஜ்' என்ன?

கூட்டணிப் பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை விழுந்தபோதெல்லாம், அந்த முடிச்சை உடைக்கும் 'பாலமாக' இருப்பவர் கனிமொழி. இன்றும் அதே அசைன்மென்ட் தான்! இன்று டெல்லியில் ராகுல் காந்தியைச் சந்திக்கிறார் கனிமொழி. ஆம் இத்தனை நாட்கள் அமைதியாக.. மௌனியாக இருந்த ராகுலுடன் கனிமொழி சந்திப்பு நடத்துகிறார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் ராகுல் காந்திக்கும் தனக்கும் இடையிலான உறவு அரசியல் கடந்தது என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார். "அரசியலைத் தாண்டி ராகுல் காந்தி என்னை தனது மூத்த சகோதரராகப் பார்க்கிறார்; நானும் அவரை அப்படித்தான் கருதுகிறேன். அவர் என் குடும்பத்தில் ஒருவர்," என்று ஸ்டாலின் உருகியிருந்தார்.

இந்த 'சென்டிமென்ட்' பேச்சு டெல்லி காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் கூட ராகுல் இறங்கி வரவில்லை. இப்படிப்பட்ட நிலையில்தான் கனிமொழி களமிறக்கப்பட்டு உள்ளார்.

எத்தனை சீட் வேண்டும்?

சத்தியமூர்த்தி பவன் வட்டாரங்களில் விசாரித்தபோது, "காங்கிரஸ் தரப்பில் 39 முதல் 45 சீட்கள் வரை கேட்கிறார்கள். ஆனால், அறிவாலயமோ '25 + 1' (25 தொகுதி + 1 ராஜ்யசபா) என்பதில் பிடிவாதமாக இருக்கிறது. இதைச் சரிசெய்யத்தான் 'தளபதி' ஸ்டாலினின் மெசேஜோடு கனிமொழி கிளம்பியிருக்கிறார்," என்கிறார்கள் உள்விவரம் தெரிந்தவர்கள்.

முக்கியமாக, 'ஆட்சியில் பங்கு' என்ற காங்கிரஸின் கோரிக்கைக்கு தி.மு.க மேலிடம் காட்டும் சிவப்புக்கொடி பற்றி ராகுலிடம் கனிமொழி பக்குவமாகப் பேசுவார் எனத் தெரிகிறது.

நாளை சென்னை... அனல் பறக்கும் அறிவாலயம்!

டெல்லியில் இன்று நடக்கும் 'ஐஸ் பிரேக்கிங்' சந்திப்பைத் தொடர்ந்து, நாளை (பிப்ரவரி 28) சென்னையில் தி.மு.க - காங்கிரஸ் இடையே அதிகாரப்பூர்வக் குழுக் கூட்டம் நடைபெறுகிறது.

சீட் எண்ணிக்கை: 25-ல் தொடங்கி 30-க்குள் காங்கிரஸை அடக்க தி.மு.க தரப்பு கணக்கு போடுகிறது.

விஜய் ஃபேக்டர்: இன்னொரு பக்கம், 'தளபதி' விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) காங்கிரஸை வளைக்க வலை விரிப்பதாக வரும் தகவல்கள், தி.மு.க-வுக்கு லேசான நெருக்கடியைத் தந்துள்ளன.

உள்ளாட்சிப் பங்கு: சட்டமன்றத் தேர்தலில் விட்டுக்கொடுத்தால், வரும் உள்ளாட்சித் தேர்தலில் 25% இடங்களை எழுத்துப்பூர்வமாகத் தர வேண்டும் என்ற காங்கிரஸின் பிடிவாதமும் நாளை மேசைக்கு வருகிறது.

கிளைமாக்ஸ் நெருங்குது!

"கூட்டணி தர்மம் காக்கப்படும்" என ஸ்டாலினும், "மரியாதையான இடங்கள் தேவை" என க்ரிஷ் சோடங்கரும் பொதுவெளியில் பேசினாலும், இன்று கனிமொழி - ராகுல் சந்திப்பில் என்ன 'டீல்' பேசப்படுகிறதோ, அதுதான் நாளை ஒப்பந்தமாக மாறும்.

கை சின்னம் உதயசூரியனுடன் ஒட்டிக்கொள்ளுமா? அல்லது 'தனி வழி' தேடுமா? நாளை மாலைக்குள் தெரிந்துவிடும்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+