இதெல்லாம் பிள்ளைங்களா.. பற்றிக் கொண்டு வருகிறது இந்த வீடியோவை பார்த்தால்!

இளைஞர் பஸ்ஸில் பயணம் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    இந்த இளைஞர்களை என்ன செய்ய?-வீடியோ

    சென்னை: இவங்க எல்லாம் என்ன பிள்ளைங்கதானா? என்றுதான் அந்த வீடியோவை பார்த்ததும் கேட்க தோன்றுகிறது.

    நெருக்கடி என்றால், பஸ்ஸில் படிக்கட்டில் தொங்குவார்கள், ஜன்னலை பிடித்து கொண்டு தொங்குவார்கள், அவ்வளவு எதுக்கு, பஸ் கூரை மேல் கூட உட்கார்ந்துட்டு போவாங்க. ஆனால் இப்படியா?

    சக்கரத்தில் கால்

    சக்கரத்தில் கால்

    ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. அதை பார்த்தாலே பத்திக்கொண்டுதான் வருகிறது. ஒரு பஸ் நடுரோட்டில் போய் கொண்டிருக்கிறது. அதில் ஒரு இளைஞன் பஸ்ஸில் பயணம் செய்கிறார். பயணமா அது? ஆபத்தின் விளிம்பு... மரணத்தின் வாசல்... ன்னுதான் சொல்லணும். பஸ் டயர்ல கால் வெச்சிக்கிட்டு பயணம் செய்கிறார். பஸ் வேகமாக போகிறதென்றால், சக்கரமும் வேகமாக சுழல்கிறதுன்னுதானே அர்த்தம்?

    உயிரோடு விளையாட்டா?

    உயிரோடு விளையாட்டா?

    பஸ்ஸின் பின்னால் கம்பியை பிடித்து கொண்டு அந்த சக்கரத்தில் கால் வைத்து சிரித்த மேனிக்கு செல்கிறார் அந்த இளைஞர். அதை கூட இருக்கும் அவரது அள்ளக்கைகள் உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்துகிறார்கள். என்னத்தையோ வெட்டி முறிச்சிட்டது போல இளைஞரின் முகத்தில் ஒரு பூரிப்பு. இதெல்லாம் என்ன ஒரு கெத்தா? உயிரோட விளையாடி வருவதை பஸ்ஸின் கண்டக்டரோ, டிரைவரோ எதையும் கேட்கவில்லை போல தெரிகிறது.

    இளைஞர் யார்?

    இளைஞர் யார்?

    ரோட்டில் சென்ற பொதுமக்களும் இந்த கன்றாவியை பார்த்துகொண்டுதான் போனார்கள். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. சென்னை பஸ் என்று மட்டும் தெரிகிறது. இதை வைத்து போலீசார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். ஆனால் அந்த இளைஞர் யார், என்ன விவரம் என்று இன்னும் தெரியவில்லை. பார்ப்பதற்கு காலேஜ் படிப்பவராக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    பதற மாட்டார்களா?

    இது மாதிரி சில காலேஜ் பிள்ளைங்க, ஒன்னு கத்தியை வெச்சிக்கிட்டு சுத்தறாங்க.. இல்லேன்னா இது மாதிரி அமர்க்களம் பண்ணி சுத்தி இருக்கிறவங்களையும் பதற வெச்சிடறாங்க. இந்த வீடியோவில இப்படி சர்க்கஸ் காட்டிட்டு தொங்கிட்டு போறத அவங்க பெத்தவங்க பார்த்தா எவ்வளவு வயித்தெறிச்சல் படுவாங்கன்னு கூட இந்த பசங்களுக்கு தெரியாம போகிறதேன்னுதான் கவலையா இருக்கு!!

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+