Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்மார்ட் சேஞ்ச்.. தமிழ்நாடு 'மாதிரி பள்ளிகள்' நுழைவுத்தேர்வு.. பள்ளிக்கல்வி துறை முக்கிய அறிவிப்பு

மாதிரி பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு மார்ச் 04ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் 15 மாதிரி பள்ளிகள் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு அறிவித்த நிலையில், இப்பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு நாளை மறுதினம்(மார்ச்.04) நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகளின் தரத்திற்கு இணையாக அரசு பள்ளிகளையும் தரம் உயர்த்த வேண்டும் என்று மாநிலம் முழுவதும் 15 மாதிரி பள்ளிகள் மற்றும் 26 தகைசால் பள்ளிகள் தொடங்கப்படும் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்றிருந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு அறிவித்தார்.

அதன்படி முதற்கட்டமாக சென்னை, மதுரை, கோவை, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, ஈரோடு, ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இப்பள்ளி செயல்பட தொடங்க இருக்கின்றன. உண்டு உறைவிட வசதியுடன் கூடிய இப்பள்ளிகள் சிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் பயில அரசு பள்ளி மாணவர்களை தகுதிப்படுத்தும்.

 மாணவர் சேர்க்கை

மாணவர் சேர்க்கை


இந்த பள்ளிகளில் பயில 10ம் வகுப்பில் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இது தவிர தேசிய திறனறிவுத் தேர்வு மற்றும் தேசிய வருவாய் வழி தேர்வு மூலம் தேர்ச்சி பெறுபவர்களும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். மட்டுமல்லாது விளையாட்டு மற்றும் கலைகளில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கும் இப்பள்ளியில் சேர வாய்ப்பளிக்கப்படும். இந்நிலையில் இப்பள்ளிகளில் நடப்பாண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்குகிறது. இதற்கான தேர்வு நாளை மறுதினம் அதாவது மார்ச் 04ம் தேதி காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது.

தேர்வு

தேர்வு

இத்தேர்வு பிற்பகல் 12 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தேர்வுக்கு அரசியல் கட்சிகள் விமர்சனம் தெரிவித்துள்ளன. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இது குறித்து கூறுகையில், "தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கப்படவுள்ள 15 மாதிரி பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு மார்ச் 4-ஆம் நாள் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று மாதிரி பள்ளிகளின் உறுப்பினர் செயலர் சுதன் அறிவித்திருக்கிறார். இது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது; கண்டிக்கத்தக்கது!

எதிர்ப்பு

எதிர்ப்பு

மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வால் கிராமப்புற ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்பதால் தான், அத்தேர்வை தமிழக அரசும், பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளும் எதிர்க்கின்றன. நீட் தேர்வை எதிர்த்து கொண்டு பத்தாம் வகுப்புக்கு நுழைவுத் தேர்வு நடத்துவது என்ன வகையான சமூகநீதி? நவீன வகுப்பறைகள், ஆய்வகங்கள், உலகத்தர உள்கட்டமைப்பு மற்றும் உண்டு - உறைவிட வசதியுடன் மாதிரி பள்ளிகள் அமைக்கப்படுவது வரவேற்கப்பட வேண்டியதே. ஆனால், அவை கிராமப்புற ஏழை மாணவர்களின் முன்னேற்றத்திற்கானதாக இருக்க வேண்டுமே தவிர, அவர்களை புறக்கணிப்பதற்கானதாக இருக்க கூடாது!

 பாமக

பாமக

அண்ணா பல்கலை. பொறியியல் படிப்புக்கே நுழைவுத் தேர்வு இல்லாதபோது, பத்தாம் வகுப்புக்கு நுழைவுத் தேர்வு நடத்துவது தவறான முன்னுதாரணமாகி விடும். இத்தேர்வும், நீட்டும் ஒரே கொள்கையிலானவை. அச்சமூக அநீதிக் கொள்கை நமக்குத் தேவையில்லை. மாதிரி பள்ளி நுழைவுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும்" என்று ட்விட்டரில் கூறியுள்ளார். முன்னதாக இப்பள்ளியில் மாணவர் சேர்க்கை இட ஒதுக்கீட்டு கொள்கையை பின்பற்றியும், மாணவர்களின் ஒட்டுமொத்த செயல்திறனை அடிப்படையாக கொண்டும் நடைபெறும் என்று அரசு அதிகாரிகள் கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+