Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வங்கிகள் இனி வாரத்தில் 5 நாட்கள் மட்டும்தான் செயல்படும்? வெளியாக உள்ள அறிவிப்பு! குஷியில் ஊழியர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே வேலை, 2 நாட்கள் விடுமுறை என்பது வங்கி ஊழியர்கள் சங்கத்தின் தொடர் கோரிக்கையாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த கோரிக்கை ஏற்கப்பட்டு, இனி வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வங்கிகள் செயல்படும் என்கிற அறிவிப்பு விரைவில் வரலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொழிலாளர்களை 8 மணி நேரம் மட்டுமே வேலை வாங்க வேண்டும் என்று சட்டம் இருக்கிறது. ஆனால் இந்த சட்டத்தை அமல்படுத்தவே தொழிலாளர்கள் தொடர் போராட்டங்களை நடத்த வேண்டி உள்ளது. இந்நிலையில்தான் வங்கி ஊழியர்கள் வாரத்தில் 5 நாட்கள் வேலை 2 நாட்கள் விடுமுறை என்கிற கோரிக்கையை முன்வைத்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு தொடர்ந்து உயர்ந்துக்கொண்டேதான் இருக்கிறது.

The demand of bank employees to be given 2 days holiday in a week will be fulfilled soon

ஆனால் அவர்களுக்காக வேலை பார்க்கும் தொழிலாளியின் நிலை மேலும் மேலும் மோசமாகிக்கொண்டேதான் போகிறது. தற்போது 8-10 மணிநேரம் வாரத்தில் 6 நாட்கள் தொழிலாளர்கள் வேலை பார்க்கின்றனர். இதில் முதலாளியின் லாபத்தை எடுக்க தொழிலாளர்கள் அதிகபட்சமாக 4 நாட்கள் உழைத்தாலே போதுமானதுதான் என்று ஆய்வுகள் கூறுகின்றன. மட்டுமல்லாது இந்த 4 நாட்கள் வேலையின் காரணமாக ஏராளமான வேலைவாய்ப்புகளும் உருவாகும்.

உற்பத்தியும் 22% அதிகரிக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. எனவே உலகமே இதை நோக்கி நகர்ந்துக்கொண்டிருக்கையில் இந்தியா போன்ற நாடுகளில் வாரத்தில் ஒருநாள் லீவு கிடைப்பதே பெரும்பாடாக இருக்கிறது. இந்த சூழலில்தான் வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் வாரத்திற்கு 5 நாட்கள் வேலை என்கிற கோரிக்கையை முன்வைத்துள்ளனர். தற்போது வாரத்தில் 2 மற்றும் 4வது சனிக்கிழமைகள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.

The demand of bank employees to be given 2 days holiday in a week will be fulfilled soon

அதேபோல 3 மற்றும் 5வது சனிக்கிழமைகள் செயல்பட்டு வருகின்றன. இதை மாற்ற வேண்டும் என்று ஊழியர்கள் சங்கத்தினர், இந்திய வங்கிகளின் கூட்டமைப்பிடம் தெரிவித்துள்ளனர். இதை நிதியமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும், அவர்கள் ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் இனி வங்கிகள் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே செயல்படும். இது குறித்து ஊழியர்கள் சங்கத்தினர் கூறுகையில், தங்களது கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+