திமுகவில் ஸ்டாலின் முன்னிலையில் இணைந்த அமமுக மா.செ…. டிடிவி தினகரன் தரப்பு அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    அமமுகவின் ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளர் உள்ளிட்டோர் திமுகவில் இணைந்தனர்.

    சென்னை:அமமுகவின் ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளர் உள்ளிட்டோர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

    முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி டிடிவி தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். இதையடுத்து, அவரது ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலரும் அமமுகவில் இருந்து திமுகவில் இணைந்து வருகின்றனர். அதிமுகவிலும் அக்கட்சியினர் இணைந்து வருகின்றனர்.

    The district secretary of erode, ammk joined dmk in front of stalin

    அமமுகவின் திருப்பரங்குன்றம் ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் வேட்டையன், மாவட்ட விவசாய அணி, துணை அமைப்பாளர் முத்துசமி, நிலையூர் கிளைச்செயலாளர் முருகன் ஆகியோரும் சில நாட்களுக்கு முன்பு அதிமுகவில் இணைந்தனர்.

    இந்நிலையில், அமமுகவின் ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளர் பருவாச்சி எஸ்.பரணீதரன் மற்றும் மாநில மாணவர் அணி இணைச் செயலாளர் எம்.பிரபு உள்ளிட்டோர் மதுரையில் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

    இதுதொடர்பாக திமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், மதுரையில் டிடிவி தினகரனின் அமமுகவின் ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளர் பருவாச்சி எஸ்.பரணீதரன் மற்றும் மாநில மாணவர் அணி இணைச் செயலாளர் ஈரோடு எம்.பிரபு ஆகியோர் தலைமையில், அமமுகவின் பல்வேறு அணிகளைச் சேர்ந்த பலரும் திமுகவில் இணைந்தனர்.

    அப்போது திமுக துணைப் பொதுச்செயலாளர் பெரியசாமி, கரூர் மாவட்ட கழகப் பொறுப்பாளர் வி.செந்தில்பாலாஜி ஆகியோர் உடனிருந்தனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    செந்தில் பாலாஜி அமமுகவில் இருந்து திமுகவுக்கு போன பிறகு... அவரது ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலரும் மாற்றுக்கட்சிகளில் தங்களை இணைத்துக் கொண்டு வருகின்றனர். அவர்களில் சமீபத்திய வரவாக...ஈரோடு மாநகர் மாவட்ட அமமுக செயலாளர் திமுகவில் ஐக்கியமாகி இருப்பது அமமுகவை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+