"65-ல்" கை வைக்க பிளான்.. திமுக வைக்கும் குறி.. அமமுக போடும் ஸ்கெட்ச்.. மிரட்சியில் அதிமுக!
தங்கள் கட்சிகளை பலப்படுத்த அதிமுக, அமமுகவினர் தீவிரமாகி உள்ளனர்
சென்னை: கொரோனோ தாக்கம் ஒரு பக்கம் இருந்தாலும், மொத்தம் 3 கட்சிகள் தங்கள் பலத்தை அதிகரிக்கும் வேலையை தொடங்கி உள்ளதாகவும், இதனால் அரசியல் மீண்டும் சூடுபிடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
திமுக சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று, ஆட்சியில் அமர்ந்துள்ளது.. அதேபோல, மோசமான தோல்வி இல்லை என்றாலும், கவுரவமான தோல்வியை பெற்று எதிர்க்கட்சியாக அதிமுக அமர்ந்துள்ளது.
இப்போது, அதிமுகவை பொறுத்தவரை, தன் பலத்தை மேலும் பெருக்கி கொள்ள வேண்டும் என்று எடப்பாடியார் நினைக்கிறார்.. இதற்கு காரணம், வரப்போகும் உள்ளாட்சித் தேர்தலுக்கு இப்போதே தயாராவதற்காகவும், அதிமுகவை தன்னுடைய ஒற்றை தலைமையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பதற்காகவும்தான்.

அதிமுக
இதற்காகவே, அமமுகவில் உள்ளவர்களை அதிமுக பக்கம் கொண்டு வர எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டு வருகிறது. அதேபோல ஓஎஸ்ஸும் தன் பங்குக்கு ஆதரவை பெருக்க நினைக்கிறார்.. அதற்காகவே அமமுக தரப்பிலும், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற மாஜி, மற்றும் முன்னாள்களையும் தொடர்பு கொண்டு பேசி வருவதாக சொல்லப்பட்டு வருகிறது.

திமுக
இவர்கள்தான் இப்படி என்றால், அமமுக வேறு ரூட்டை பிடித்துள்ளது.. அதாவது இந்த தேர்தல் முடிவில், ஓபிஎஸ், இபிஎஸ் இருவரின் மீதும் சில நிர்வாகிகளுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளதாம்.. இவர்கள் ஓபிஎஸ் பக்கமும் போகாமல், இபிஎஸ் பக்கமும் போகாமல் உள்ளனர்.. இவர்களைதான் அமமுக கொக்கி போட்டு தங்கள் பக்கம் இழுத்து வருகிறதாம். இந்த லிஸ்ட்டை தினகரன் கையில் எடுத்து வருகிறார்..

நிர்வாகிகள்
மேலும் சிலர், சசிகலாவிடமும் அவ்வப்போது பேசி வருகிறார்களாம்.. அந்த லிஸ்ட்டை சசிகலா கையில் எடுத்து வருகிறார்.. சிலரிடம் சசிகலாவே போனில் பேசி வருகிறாராம்... எப்படியும் இன்னும் 3 மாசத்தில் அமமுகவை பலப்படுத்தி விட்டு, அதன்பிறகு அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் இறங்கக்கூடும் என்கிறார்கள்.

பலம்
இவர்கள்தான் இப்படி என்றால், திமுக மற்றொரு ரூட்டை பிடித்துள்ளதாம்.. அதிமுகவுக்கு இப்போது 65 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில், அதன் பலத்தை குறைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளதாம்.. இதற்காக, சிலரை அதிருப்தி எம்எல்ஏக்களாக்கும் வேலையும் நடக்கிறதாம்.. இதனால், அதிமுகவின் பலம் குறைவதுடன், திமுகவின் பலம் எகிறும் வாய்ப்புள்ளது.. இந்த பலம், எம்பி தேர்தலுக்கு அஸ்திவாரமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.. இப்படி திமுக, அதிமுக, அமமுக என ஆளுக்கு ஒரு பக்கம் தங்கள் கட்சிகளை ஸ்டிராங் ஆக்கி வருகின்றனர்..!












Click it and Unblock the Notifications