சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"கரப்ஷன்".. லிஸ்ட் ரெடியாமே.. ஜுனுக்கு பிறகு வெடிக்க போகும் பூகம்பம்.. கலக்கத்தில் அதிமுக

அதிமுக மாஜி அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை திமுக விசாரிக்க தயாராகிறது

Google Oneindia Tamil News

சென்னை: மொத்த லிஸ்ட்டும் ரெடியாம்.. இன்னும் ஒரு மாசம்தான்.. அதிமுகவின் ஊழல் புள்ளிகள் குறித்த விசாரணையை நடத்த திமுக தயாராகி வருகிறதாம்..!

இந்த முறை பிரச்சாரத்தின்போது, முதல்வர் முக ஸ்டாலின் பெரும்பாலும் பேசியது, அதிமுகவின் ஊழலைதான்..

அந்தந்த அமைச்சர்களின் தொகுதிகளுக்கே சென்று, ஊழல் செய்தவர்கள் மீதான வழக்குகள் விசாரிக்கப்பட்டு, சட்டப்படி நடவடிக்கை எடுத்து கைது செய்யாமல் விடமாட்டோம் என்று சொல்லி கொண்டே இருந்தார்.

ரேஷன் நிவாரண பொருட்களுக்கான பையிலும் முதல்வரின் படம், பெயர் இல்லை.. மக்களை கவரும் மு.க. ஸ்டாலின்! ரேஷன் நிவாரண பொருட்களுக்கான பையிலும் முதல்வரின் படம், பெயர் இல்லை.. மக்களை கவரும் மு.க. ஸ்டாலின்!

ஆதாரம்

ஆதாரம்

தற்போது அதற்கான வேலைகளையும் திமுக ஆரம்பித்துவிட்டதாம்.. அந்த வகையில், எடப்பாடி பழனிசாமி, 1 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் புரிந்ததாகவும், குறிப்பாக, நெடுஞ்சாலை துறையில் மெகா ஊழல் நடந்துள்ளதாகவும், திமுக முன்பிருந்தே சொல்லி வந்தது.. அதேபோல, ஓபிஎஸ் மீதான புகாரும் உள்ளது.. தாதுமணல் ஊழல் தொடங்கி பல வழக்குகளில் இவர் சிக்க உள்ளதாகவும், அது தொடர்பாகவும் விசாரணை நடத்த போவதாக தெரிகிறது.

 வேலுமணி

வேலுமணி

இதில் முக்கியமான நபர் எஸ்பி வேலுமணிதான்.. கோயம்புத்தூரில் ஸ்டாலினின் பிரச்சாரம் அனைவராலும் திரும்பி பார்க்கப்பட்டது.. "இது தான்டா திமுக... மிஸ்டர் வேலுமணி, திமுகன்ன என்னனு இப்போ தெரியுதா? பதவியில் இருப்பதால் இப்போது ஆடலாம். ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆட்டத்தை எல்லாம் அடக்கிவிடுவோம். ஆளுநர் நடவடிக்கை எடுக்கிறாரோ இல்லையோ நானே தலையிட்டு உங்கள ஜெயிலுக்குள்ள தள்ளுவேன்" என்று பேசியிருந்தார்.

 விஜயபாஸ்கர்

விஜயபாஸ்கர்

இப்படியேதான் குட்காவில் விஜயபாஸ்கர், ஆவின் பாலில் ராஜேந்திர பாலாஜி என லிஸ்ட் பெரிதாகி கொண்டே இருக்கிறது.. அரசியல் காழ்ப்புணர்ச்சி, பழிவாங்கும் நடவடிக்கை என்ற வழக்கமான பேச்சுக்கு இடம் தராமல், ஒவ்வொருவர் மீதான ஊழலுக்கும் வலுவான ஆதாரங்களை திரட்டி கொண்டிருக்கிறதாம் திமுக தரப்பு.. இதற்காகவே வலிமையான வழக்கறிஞர்கள் டீமை கையில் வைத்துள்ள நிலையில், நிச்சயம் அதிமுக தரப்பு ஆட்டம் காணும் என்கிறார்கள்..

அதிமுக

அதிமுக

ஒருவேளை அப்படி அதிமுகவின் மாஜிக்கள் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், அதிமுக கட்சி இன்னும் பலவீனப்பட்டு போய்விடும் நிலைமை ஏற்படலாம் என்கிறார்கள். இப்போது கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு மும்முரம் காட்டி வருவதால், அநேகமாக ஜூலை மாதத்துக்கு பிறகு இந்த ஊழல் புகார்கள் குறித்த அதிரடிகளை திமுக கையில் எடுக்கும் என்று தெரிகிறது..!

English summary
The DMK is preparing to take action against corrupt AIADMK Ex ministers, say sources
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X