ஓ இதுதான் எடப்பாடி கணக்கா.. சத்தமின்றி மேலே ஏறி வருகிறார்.. எகிறும் கிராப்.. கவனிச்சீங்களா?
சென்னை: 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் கணக்குகள் மெல்ல வடிவம் பெறத் தொடங்கியுள்ளன. கடந்த சில வாரங்களாக மேற்கொள்ளப்பட்ட அரசியல் நகர்வுகள், திமுக கூட்டணிக்கு சவாலை உருவாக்கும் வகையில் அமைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

தெற்கில் முளைத்த இரும்புக்கரம்
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) டி.டி.வி. தினகரன் மீண்டும் இணைந்திருப்பது தென் மாவட்டங்களில் அக்கட்சிக்கு மிகப்பெரிய உத்வேகத்தைத் தந்துள்ளதாகக் கருதப்படுகிறது. தினகரனின் வருகை தென் மண்டலத்தில் சிதறிக்கிடந்த அதிமுக வாக்குகளை மீண்டும் ஒருங்கிணைக்கும் என நம்பப்படுகிறது.
டிடிவி தினகரன் வருகை
அமமுகவின் இந்த மறுவருகை, எதிர்க்கட்சிக் கூட்டணி இழந்த தேவர் வாக்குகளின் ஒரு பகுதியையாவது மீண்டும் வெல்ல உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து அறிவித்த தினகரன், "பெரிய நல்லிணக்க நோக்கங்களுக்காக மேற்கொள்ளப்படும் அரசியல் சமரசங்களை பலவீனமாகக் கருதக்கூடாது. சமரசம் செய்துகொள்பவர்கள் எதையும் இழப்பதில்லை. கட்சியின் நலனையும், தமிழகத்தின் நலனையும் மனதில் கொண்டு, என்.டி.ஏ.வில் மீண்டும் சேர முடிவு செய்துள்ளோம்," என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் தமிழ்நாடு கூட்டணிக்கு மீண்டும் வந்த நிலையில் NDA வேகமாக முன்னேற்றம் அடைந்து வருகிறது. விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட அமமுக, பாமக அன்புமணி டீம் எல்லோரையும் பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் தூக்கி வருகிறார்.
அதோடு, தென் மாவட்டங்களில் செல்வாக்குள்ள தலைவர்களான டாக்டர் கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்) மற்றும் ஜான் பாண்டியன் (தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்) ஆகியோரின் முழுமையான ஆதரவு தென் தமிழகத்தில் அதிமுக கூட்டணியை "வெல்ல முடியாத சக்தியாக" மாற்றும் என அக்கட்சித் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
வடக்கை உறுதி செய்யும் பாமக?
வட மாவட்டங்களில் வலுவான வாக்கு வங்கியைக் கொண்டுள்ள பாமக (PMK), அதிமுக கூட்டணியில் இணைந்திருப்பது எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரிய நிம்மதியைத் தந்துள்ளது. ஆனால் பாமக உடைந்து இருப்பது அக்கட்சிக்கு கொஞ்சம் சவாலாக இருக்கலாம். பாமகவின் வருகையினால் வட தமிழகத்தின் பெரும்பான்மையான தொகுதிகளை "சீல்" செய்துவிடலாம் என்பது அதிமுக தரப்பின் பலமான நம்பிக்கை.
விஜய் காரணி: திமுக-விற்குச் சிக்கலா?
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (TVK) களமிறங்குவது யாருக்குப் பாதிப்பு என்ற விவாதம் ஒருபுறம் இருக்க, அதிமுக தரப்பிலோ இது தங்களுக்குச் சாதகமாகவே அமையும் எனக் கணிக்கப்படுகிறது. விஜய் பிரிக்கும் வாக்குகள் பெரும்பாலும்: கிறிஸ்துவர்கள், விசிக (VCK) மற்றும் நாம் தமிழர் (NTK) ஆகிய கட்சிகளின் அடிப்படை வாக்கு வங்கியைப் பாதிக்கும்.
அதிமுக-வின் வாக்குகள் இந்த சூழ்நிலையில் உறுதியானவை என்பதால், மற்ற கட்சிகளின் வாக்குகள் சிதறுவது திமுக-வின் வெற்றியைத் தடுக்கும் என அவர்கள் நம்புகின்றனர்.
டெல்டா: எஞ்சியிருக்கும் ஒரே சவால்
தமிழகத்தின் மற்ற அனைத்துப் பகுதிகளிலும் அதிமுக கூட்டணி திமுக-வை விட முன்னிலையில் இருப்பதாக அதிமுகவின் உட்கட்சி கணக்கெடுப்புகள் (Surveys) கூறுவதாகத் தெரிகிறது. இருப்பினும், காவிரி டெல்டா மண்டலம் மட்டும் தற்போது வரை ஒரு கவலையாகவே அக்கட்சிக்கு நீடிக்கிறது. டெல்டா பகுதியில் திமுக-வின் செல்வாக்கை உடைக்க எடப்பாடி பழனிசாமி இன்னும் சில அதிரடி மாற்றங்களைச் செய்யத் திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. இதற்கான முன்னெடுப்புகள் வரும் நாட்களில் நடக்கலாம் என்கிறார்கள்.
-
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா!












Click it and Unblock the Notifications