வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல்.. தமிழகத்தில் 6.13 கோடி வாக்காளர்கள்! சோழிங்கநல்லூருக்கு முதலிடம்
சென்னை: இந்திய தேர்தல் ஆணையம் தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல்படி தமிழகத்தில் 6 கோடியே 13 லட்சத்து 06,638 வாக்காளர்கள் உள்ளனர்.
ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 3,02,54,172 ஆகும். பெண் வாக்காளர்கள் 3,10,45,969 பேர். மூன்றாம் பாலினத்தவர் 6,474 பேர் உள்ளனர்.

தமிழகத்தில் அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் 6,60,317 வாக்காளர்கள் உள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க www.nvsp.in என்ற வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம். அல்லது கூகுள் பிளே ஸ்டோரில்' voter helpline App' என்ற ஆப்பை டவுன்லோடு செய்து அதன்மூலம் விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிந்துள்ளன. மாநகராட்சி, நகராட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படாமல் உள்ளது.
இது தொடர்பான வழக்கில் இந்திய தேர்தல் ஆணையம் இன்னமும் இறுதி வாக்காளர் பட்டியலை தயார் செய்து வெளியிடவில்லை.
இறுதி வாக்காளர் பட்டியல் ரெடியாகவில்லை என்பதால்தான், மாநகராட்சி, நகராட்சி போன்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதிகளை அறிவிக்க முடியவில்லை என நேற்று மாநில தேர்தல் ஆணையம் பதிலளித்திருந்தது. இந்த நிலையில், இன்று வாக்காளர் பட்டியல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications