பராமரிப்பு பணி.. சென்னை கடற்கரை - தாம்பரம்.. நவம்பர் 17 இல் மின்சார ரயில்கள் ரத்து.. நோட் பண்ணுங்க
சென்னை: சென்னை கடற்கரை - தாம்பரம் இடையேயான மின்சார ரயில் சேவை நவம்பர் 17 ஆம் தேதியன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நவம்பர் 17 ஆம் தேதி காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
சென்னையில் கல்வி, வேலை, தொழிலுக்காக பயணம் செய்யும் மக்களின் முதல் தேர்வாக இருப்பது மின்சார சேவை ரயில்தான். பயணிகளின் போக்குவரத்துக்கு இது பெரிதும் உதவிகரமாக இயங்கி வருகிறது. இந்த ரயிலில் தினமும் ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்து வருகின்றனர்.

குறிப்பாக, சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் ரயில் சேவையில் காலை மற்றும் மாலை நேரங்களான பீக் ஹவர்களின் கொஞ்சம் பாதிப்பு ஏற்பட்டாமலும் ஒட்டுமொத்த சென்னையும் ஸ்தம்பித்து விடும் என்று கூட சொல்லலாம். அந்த அளவுக்கு பயணிகள் போக்குவரத்தில் முக்கியப் பங்காற்றி வருகிறது மின்சார ரயில் சேவை.
மாணவ, மாணவிகள், வேலைக்குச் செல்லும் இளைஞர்கள் பலர் இந்த மின்சார ரயில் சேவையைத் தான் நம்பியிருக்கிறார்கள். சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடம் மட்டுமின்றி பல்வேறு வழித்தடங்களில் குறிப்பிட்ட இடைவெளியில் மின்சார ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. மற்ற நாட்களை விட ஞாயிற்றுக்கிழமைகளில் பயணிகள் குறைவாகவே ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர். இதனால் ரயில் சேவைகளும் குறைவாக இயக்கப்படும்.
அதேபோல, ஞாயிற்றுக்கிழமைகளில் தான் பராமரிப்பு பணிகளும் நடைபெறும். பயணிகள் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் விதமாக இந்த பராமரிப்பு பணிகள் வாரம் வாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் நவம்பர் 17 ஆம் தேதி தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
அதன்படி, சென்னை கடற்கரை - தாம்பரம், தாம்பரம் - சென்னை கடற்கரை இடையே மின்சார ரயில் சேவை வரும் நவம்பர் 17 ஆம் தேதி ரத்து செய்யபட்டுள்ளது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாகவும், இந்த நேரத்தில் கடற்கரை-பல்லாவரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர், அரக்கோணம் செல்லும் ரயில்கள் அட்டவணைப்படி இயங்கவுள்ளது. எனவே, இந்த மாற்றத்திற்கு ஏற்ப பயணிகள் தங்களின் பயணத்தை திட்டமிட்டுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications