சென்னை மக்களே.. நீங்கள் இருக்கும் இடத்தில் இன்னைக்கு கரண்ட் கட் ஆக போகுது.. எந்தெந்த ஏரியா தெரியுமா?
சென்னை: சென்னையில் இன்று பல்வேறு இடங்களில் பவர்கட் செய்யப்பட இருக்கிறது. பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் கூறியுள்ளது.
தமிழ்நாட்டில் துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின்சாரம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அந்த வகையில் இன்று சென்னையில் தாம்பரம் தொடங்கி தண்டையார்பேட்டை வரை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "காலை 9 மணி தொடங்கி மதியம் 2 மணி வரை என சென்னையின் 7 முக்கிய பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட இருக்கிறது. ஒருவேளை பராமரிப்பு பணிகள் 2 மணிக்குள் முடிந்துவிட்டால் மின்சாரம் மீண்டும் விநியோகிக்கப்படும்.

தாம்பரத்தை பொறுத்த அளவில், பல்லாவரம், மல்லிகா நகர், பி.வி.வைத்தியலிங்கம் சாலை பகுதி, திருமுருகன் நகர், வேல்ஸ் கல்லூரி மெயின் ரோடு, பங்காரு நகர் பம்மல் அண்ணாசாலை, மோசஸ் தெரு, நேரு தெரு, ஆசிரியர் சாமுவேல் தெரு, ராஜலட்சுமி தெரு, சங்கர் நகர் (முழுவதும்), திருநீர்மலை சாலை, ஆதம் நகர், எல்ஐசி காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்வெட்டு இருக்கும்.
மயிலாப்பூரை பொறுத்த அளவில், "கோபாலபுரம், SPS I & IInd தெரு, பொன்னுசாமி தெரு, முத்து தெரு & சந்து, பீட்டர்ஸ் சாலை, இந்திரா கார்டன் LUZ சர்ச் சாலை, கிழக்கு அபிராமபுரம் 1 முதல் 3வது தெரு வரை, வாரன் சாலை, விசாலாட்சி தோட்டம், கேனல் வங்கி சாலை, தேசிகா சாலை, வெங்கடேச ஆசிரமம், பகுதி ராயப்பேட்டை உயர் சாலை, கச்சேரி சாலை மற்றும் அனைத்து சுற்றியுள்ள பகுதிகளில் மின்வெட்டு இருக்கும்.
போரூர் பகுதியில், பூந்தமல்லி, டிரங்க் சாலை, வைத்தீஸ்வரன் கோயில் தெரு, கங்கா சாரதி நகர், எஸ்ஆர்எம்சி அய்யப்பன்தாங்கல் மெயின் ரோடு, ஆர்.ஆர்.நகர், கோவூர், அம்பாள் நகர், முழு மாட வீதி, குமரன் நகர் (முழுமைக்கும்), ஆறுமுகம் நகர், மேல்மா நகர், காவனூர் ரீ நகர், சிறுகளத்தூர், மணிமங்கலம் சாலை, அழகாசன் நகர் , நந்தவனம் நகர், ராஜீவ் காந்தி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்வெட்டு இருக்கும்.

வடசென்னையில் தண்டையார்பேட்டை பகுதியில் டோல்கேட், வடக்கு டெர்மினேஷன் சாலை, TH சாலை பகுதி, அசோக் நகர், பாலகிருஷ்ணன் தெரு, தனபால் நகர், AE கோயில் தெரு மற்றும் இதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்வெட்டு இருக்கும்.
அம்பத்தூரில், கொரட்டூர், பாரதி நகர், மொகப்பேர் சாலை, காமராஜ் நகர், கஸ்தூரி நகர், 1வது மெயின் ரோடு அம்பத்தூர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் துண்டிக்கப்படும்.
கிண்டியை பொறுத்த அளவில் VOC தெரு, பிள்ளையார் கோயில் தெரு, திருவள்ளுவர் தெரு, வானுவம்பேட்டை, சுரேந்திர நகர், திருவள்ளுவர் நகர், டிஜி நகர், ராம் நகர், இந்திரா நகர், ராஜ் பவன், வேளச்சேரி மெயின் ரோடு, சர்தார் பட்டேல் ரோடு ஒரு பகுதி மற்றும் இதனையொட்டியுள்ள அனைத்து பகுதிகளுக்கும் மின்வெட்டு இருக்கும்.
கே.கே.நகரை பொறுத்த அளவில், ஆழ்வார்திருநகர், திருவள்ளுவர் சாலை, பாலாஜி நகர், அண்ணா தெரு, காமராஜர் தெரு மற்றும் இதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications