ஈரானின் மரண விளையாட்டு.. சத்தமின்றி அமெரிக்காவிற்கு ‘செக்மேட்’.. சிக்கி நிலைகுலைந்த இஸ்ரேல்!
டெஹ்ரான்: ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா மோதல் இப்போது வெறும் போராக மட்டும் இல்லை; அது ஒரு பிரம்மாண்டமான சதுரங்க ஆட்டமாக மாறியிருக்கிறது. நான்கு நாட்களுக்கு முன்பே கணிக்கப்பட்டதை போலவே, ஈரான் தனது காய்நகர்த்தல்களை மிகத் துல்லியமாகச் செய்திருக்கிறது.
அலை 22: வானைப் பிளந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள்!
நேற்று அரங்கேறிய 'வேவ் 22' (Wave 22) தாக்குதல் ஒட்டுமொத்த உலகையும் அதிர வைத்திருக்கிறது. இஸ்ரேலின் புகழ்பெற்ற மூன்று அடுக்கு பாதுகாப்பு கவசங்களையும் (Iron Dome, David's Sling, Arrow) கிழித்துக்கொண்டு ஈரானின் கோர்ரம்ஷாஹர் 4 (Khorramshahr 4), கைபர் (Kheibar) மற்றும் ஃபத்தா (Fattah) ஏவுகணைகள் டெல் அவிவ் நகருக்குள் புகுந்தன.

இவை சாதாரண ஏவுகணைகள் அல்ல; ரேடார்களில் சிக்காத ஹைப்பர்சோனிக் ரகங்கள். 'மிலிட்டரி வாட்ச்' இதழ் வெளியிட்ட தகவலின்படி, இந்தத் தாக்குதலில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையின் (IDF) முக்கியக் கட்டளை மையம் ஒன்று தரைமட்டமானது. இதில் 7 உயர் அதிகாரிகள் உட்படப் பலர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தொழில்நுட்பத்தின் பின்னே ஒளிந்திருக்கும் பலவீனம்?
1967-ல் நடந்த ஆறு நாள் போரில் இஸ்ரேலியர்கள் காட்டிய அந்த ஆக்ரோஷமும், அர்ப்பணிப்பும் இன்றைய தலைமுறையிடம் இல்லையோ என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இன்றைய இஸ்ரேலிய ராணுவம் முழுக்க முழுக்க தொழில்நுட்பத்தையும், எதிர்தாக்குதல் நடத்த முடியாத எளிய குழுக்களையும் (Guerrillas) நம்பியே தனது தற்காப்பு அரணை அமைத்திருந்தது.
ஆனால், ஈரான் இப்போது அந்தப் பாதுகாப்பு வளையத்தை உடைத்து இஸ்ரேலை 'நிர்வாணப்படுத்தி' நிற்கிறது. இதற்குப் பதில் சொல்ல முடியாமல் இஸ்ரேல் திகைத்துப் போயிருக்கிறது.
47 ஆண்டுகால தவம்: ஈரானின் மாஸ்டர் பிளான்!
ஈரான் இந்த வெற்றியை ஒரே நாளில் பெற்றுவிடவில்லை. கடந்த 30 ஆண்டுகால அமெரிக்கக் கட்டுப்பாட்டை வெறும் ஒரு வாரத்தில் வளைகுடாப் பகுதியிலிருந்து ஈரான் அகற்றியிருப்பது ராணுவ வரலாற்றிலேயே ஒரு 'மாஸ்டர் ஸ்ட்ரோக்'.
துல்லியமான கணிப்பு: அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் அடுத்தடுத்த நகர்வுகளை 20 ஆண்டுகளுக்கு முன்பே ஈரான் கணித்து வைத்திருந்தது.
தன்னிறைவு: கடும் பொருளாதாரத் தடைகள் மற்றும் போர்களுக்கு இடையிலும், ரத்தமும் தியாகமும் சிந்தி தனது ஆயுதக் கிடங்கை ஈரான் பலப்படுத்தியுள்ளது.
வியூகம்: அமெரிக்காவின் ராணுவ பலம் தங்களை விட அதிகம் என்பது ஈரானுக்குத் தெரியும். "எங்களை எவ்வளவு வேண்டுமானாலும் குண்டு வீசி அழியுங்கள், தலைவர்களைக் கொல்லுங்கள்... ஆனால் உங்களை விட நாங்கள் அதிக காலம் நிலைத்திருப்போம்" என்பதே அவர்களின் கணக்கு.
பொருளாதாரப் போர்: திணறும் அமெரிக்கா!
அமெரிக்கா கடந்த ஐந்து நாட்களில் மட்டும் 800-க்கும் மேற்பட்ட பேட்ரியாட் (Patriot) இடைமறிப்பு ஏவுகணைகளைச் செலவிட்டுள்ளது. ஒரு ஏவுகணையின் விலை சுமார் 4 மில்லியன் டாலர்! அமெரிக்காவின் ஒட்டுமொத்த கையிருப்பில் கால்வாசி இப்போதே தீர்ந்துவிட்டது.
மறுபுறம், நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட அறிக்கையின்படி, ஈரானிடம் இன்னும் பாதிக்கும் மேற்பட்ட ஏவுகணைகளும், ட்ரோன்களும் அப்படியே இருக்கின்றன. ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) இன்னும் மூடப்பட்டே இருக்கிறது. இது இன்னும் மூன்று வாரங்களுக்கு நீடித்தால், உலகப் சந்தை பெரும் பொருளாதார வீழ்ச்சியைச் சந்திக்கும் என்பது உறுதி.
ஈரானின் புதிய தலைமை இன்னும் தீவிரமான முடிவுகளை எடுத்து வருகிறது. அமெரிக்கா எதிர்பார்த்த 'மிதவாத' மாற்றுகள் ஏற்கனவே இஸ்ரேலால் 'தவறுதலாக' கொல்லப்பட்ட நிலையில், ஈரான் இப்போது பின்வாங்கத் தயாராக இல்லை. மத்திய கிழக்கில் அமெரிக்காவின் 30 ஆண்டுகால ஆதிக்கம் சரிவைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.
ஈரான் விளையாடுவது வெறும் போர் அல்ல... அது நீண்ட காலத் திட்டமிடப்பட்ட ஒரு மரண விளையாட்டு!
-
சொந்த செலவில் சூனியம்.. 2022க்கு பிறகு அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சி! டிரம்புக்கு எதிராக மக்கள் -
நீங்க ஒன்னும் மன்னர் கிடையாது.. அமெரிக்காவில் டிரம்புக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம் -
ஈரான் ஈரலை குறிவைக்கும் ட்ரம்ப்..கார்க்கை சுத்துப் போட்ட ‘இரும்பு அரக்கன்கள்’.. ரெடியான பாராசூட் படை -
அமெரிக்கா வான் தாக்குதலில் இந்தியா வர இருந்த ஈரான் விமானம் சேதம்! என்ன நடந்தது? -
இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருவது உண்மைதான்! அம்பலப்படுத்திய அமெரிக்கா -
ஈரானிடம் உள்ள 400 கிலோ யுரேனியம்.. கண்வைத்த டிரம்ப்.. தரைவழி தாக்கி மீட்க அமெரிக்கா மாஸ்டர் பிளான் -
பாகிஸ்தான் இருக்க வேண்டிய இடம் இதுதான்.. முகத்தில் அறைந்த அமெரிக்க நாடாளுமன்ற அறிக்கை -
ஈரான் போர் காரணமாக எந்தெந்த நாட்டில் என்ன இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது தெரியுமா? லிஸ்ட் இதோ -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
இனி ரேஷன் கடை மட்டுமில்லை! பெட்ரோல் பங்க்குகளிலும் மண்ணெண்ணெய் விற்பனை! மத்திய அரசு அனுமதி -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
இஸ்ரேல் முழுதும் வெடித்த போராட்டம்.. ஈரான் போரை கைவிட மக்கள் கொந்தளிப்பு! நெதன்யாகுவிற்கு சிக்கல்












Click it and Unblock the Notifications