தமிழ்நாட்டின் 60 ஆண்டுகால அரசியல் வரலாற்றை மாற்றிய தவெக! 1967க்கு பிறகு நடந்த மாற்றம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 1967-ஆம் ஆண்டு முதல் சுமார் 60 ஆண்டுகளாகத் தமிழக அரசியலில் நீடித்து வந்த திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை முறியடித்து, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 2026 சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

1967-ல் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்த பிறகு, தமிழகத்தில் ஒரு திராவிடக் கட்சி அல்லாத மாற்று சக்தி ஆட்சியைப் பிடிக்கும் சூழல் உருவாவது இதுவே முதல்முறை.

Vijay

தமிழ்நாடு என்பது திராவிட மண் என்று திமுக, அதிமுக தலைவர்கள் பேசி வந்த நிலையில், தற்போது திராவிட கட்சிகள் இல்லாத புதிய கட்சியின் தலைமையில் ஆட்சி உருவாகியிருக்கிறது.

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், தனது முதல் தேர்தலிலேயே 107 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. எனினும், ஆட்சி அமைக்கத் தேவையான அறுதிப் பெரும்பான்மைக்கு (118 இடங்கள்) இன்னும் சில இடங்கள் குறைவாக இருப்பதால், கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

தவெக தன்னை ஒரு திராவிடக் கட்சியாக அடையாளப்படுத்திக் கொள்ளாமல், 'மதச்சார்பற்ற சமூக நீதி' மற்றும் 'சமத்துவத்தை' முன்னிறுத்தும் ஒரு மாற்றாக முன்வைக்கிறது. இருப்பினும், பெரியார் மற்றும் அண்ணாதுரை போன்ற தலைவர்களை அக்கட்சியின் வழிகாட்டிகளாக விஜய் குறிப்பிட்டுள்ளார். என்னதான் பெரியார், அண்ணாவை தனது வழிகாட்டியாக விஜய் சொல்லியிருந்தாலும், தேர்தல் வெற்றிக்கு பின்னர் அவர்களின் நினைவிடத்திற்கு விஜய் போகவில்லை.

வழக்கமாக இதற்கு முன்னர் தேர்தலில் வெற்றி பெற்ற தலைவர்கள் அண்ணா, கருணாநிதி, ஜெயலிதா உள்ளிட்டோரின் நினைவிடத்திற்கு செல்வது வழக்கம். ஆனால் விஜய் இப்படி செய்யவில்லை.

கடந்த பல தசாப்தங்களாகத் தமிழகத்தை ஆட்சி செய்த திமுக 59 இடங்களிலும், அதிமுக 47 இடங்களிலும் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. குறிப்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தனது கோட்டையான கொளத்தூர் தொகுதியிலேயே தோல்வியடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்டுவாரியாக கட்சிகளின் வெற்றி நிலவரம்

1967 திமுக - சி.என். அண்ணாதுரை
1971 - திமுக - மு. கருணாநிதி
1977 - அதிமுக - எம்.ஜி. ராமச்சந்திரன்
1980 - அதிமுக - எம்.ஜி. ராமச்சந்திரன்
1984 - அதிமுக - எம்.ஜி. ராமச்சந்திரன்
1989 - திமுக - மு. கருணாநிதி
1991 - அதிமுக - ஜெ. ஜெயலலிதா
1996 - திமுக - மு. கருணாநிதி
2001 - அதிமுக - ஜெ. ஜெயலலிதா
2006 - திமுக (கூட்டணி ஆட்சி) - மு. கருணாநிதி
2011 - அதிமுக - ஜெ. ஜெயலலிதா
2016 - அதிமுக - ஜெ. ஜெயலலிதா
2021 - திமுக - மு.க. ஸ்டாலின்
2026 - தவெக (தமிழக வெற்றிக் கழகம்) - விஜய் (தனிப்பெரும் கட்சி)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+