அலைகள் ஓய்வதில்லையில் உருவான "ஆக்டிங்" சுனாமி.. சாக்லேட் பாய்.. கார்த்திக்குக்கு ஹாப்பி பர்த்டே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தின் எவர் கிரீன் சாக்லேட் பாய் நடிகர் கார்த்திக்குக்கு இன்று 59வது பிறந்தநாள்!

சாக்லேட் பாய்.. தமிழில் இந்த வார்த்தைக்கு 80ஸ், 90ஸ் களிலேயே அர்த்தம் கொடுத்தவர்தான் நடிகர் கார்த்திக். இப்போது இருக்கும் ஹீரோக்கள் எல்லாம் சாக்லேட் பாய் பெயர் எடுக்க பெண்கள் மத்தியில் கஷ்டப்படும் போது அசால்ட்டாக ஒரு சில படங்கள் மூலமே பெண்கள் மனதை கவர்ந்தவர் கார்த்திக்.

ஒரு பக்கம் ரஜினி, கமல்.. இன்னொரு பக்கம் விஜயகாந்த், சரத்குமார், மோகன், பிரஷாந்த் என்று பெரிய பட்டாளமே இருக்கும் போது எதையும் பற்றி கவலைப்படாமல் தனக்கு என்று தனி ரூட்டு போட்டு, 90ஸ்களில் ரூட்டு தலையாக சுற்றிய ''ஹிட்டு தல''தான் கார்த்திக்.

முத்துராமன்

முத்துராமன்

நவசர திலகம் முத்துராமனுக்கு பிறந்து இருந்தாலும் கூட அப்பாவின் எந்த ஜாடையும் இன்றி நடிப்பில் தனக்கு என்று தனி ஸ்டைலை பிடித்து.. தனி ரசிகர்களை அமைத்துக் கொண்ட நவசர நாயகன் கார்த்திக். 1981ல் அலைகள் ஓய்வதில்லை படத்தில் உருவான ஆக்டிங் சுனாமிதான் கார்த்திக். அந்த வருடமே சிறந்த புது முகத்திற்கான விருது வாங்கினார். அதன்பின் வரிசையாக மணிரத்னம், பாலச்சந்தர், விசு , பாரதி ராஜா, பாசில், விக்ரமன், அகத்தியன், சுந்தர் சி, தொடங்கி கேஎஸ் ரவி குமார், கேவி ஆனந்த் வரை இவர் வேலை பார்க்காத இயக்குனர்களே இல்லை.

டிரெண்ட் செட்டர்

டிரெண்ட் செட்டர்

நல்லவனுக்கு நல்லவன் படத்தில் ரஜினிக்கு போட்டியாக நடித்தது, கவுண்டமணியுடன் வரிசையாக காமெடி படங்களில் ஹிட் கொடுத்து புதிய டிரெண்ட் உருவாக்கியது. அப்போது இவர் எடுக்காத ரிஸ்க்கும் இல்லை உருவாக்காத டிரெண்டும் இல்லை. நினைவெல்லாம் நித்யா, ஆகாய கங்கை, மௌன ராகம் என்று இவர் கொடுக்காத ஹிட் படங்களே 80ஸ், 90ஸ் காலத்தில் இல்லை. அதிலும் ராதாவுடன் இவருக்கு உண்டான கெமிஸ்ட்ரியை வேதியியல் வல்லுநர்களே பார்த்து மலைத்து போனார்கள்.. லவ்வன்னா லவ்வு அப்படி ஒரு ஸ்கிரீன் லவ்.

பெண்களின் ஹீரோ

பெண்களின் ஹீரோ

அதிலும் மௌனம் ராகம் படத்தில் இவரின் துள்ளலான நடிப்பு காரணமாக ஒரே அடியாக துள்ளி குதித்து பெண்கள் மனதில், 10 ஏக்கர் நிலம் வாங்கி இடம் பிடித்தனர். 1987ல் இருந்து 1992வரை இவருக்கு கோல்டன் பீரியட் என்றுதான் சொல்ல வேண்டும். வரிசையாக வண்ண கனவுகள், அக்னீ நட்சத்திரம், வருஷம் பதினாறு, இதய தாமரை, கிழக்கு வாசல் என்று எல்லாம் படமும் ஹிட்.

எப்போவும் ராஜா

எப்போவும் ராஜா

அதிலும் இவர் நடித்த ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா பாட்டு மைக்கேல் ஜாக்சன் டியூனுக்கே சவால் விட்ட ரகம். இப்போதும் இது ஒரு எவர் கிரீன் ஹிட் பாடல்தான். ஒரு பக்கம் காமெடி, ரொமான்ஸ், இன்னொரு பக்கம் நடிப்பு, பாடல் என்று இவர் படத்தில் இல்லாத விஷயங்களே கிடையாது. அவ்வப்போது ஆக்சனிலும் கை வைத்து இருக்கிறார் இந்த அணையாத அக்னி நட்சத்திரம்.

கெமிஸ்ட்ரி

கெமிஸ்ட்ரி

அதிலும் இவர் ராதா தொடங்கி ரேவதி வரை இவர் யாருடன் நடித்தாலும் கட்சிதமாக அப்படியே சாக்லேட் பாய் போல செட்டானார். அதன்பின் 1996ல் இவர் நடித்த உள்ளத்தை அள்ளித்தா படம் மூலம் தமிழ் சினிமா டிரெண்டே புதிய பாதைக்கு சென்றது. ஒரு பக்கம் கவுண்டமணி காமெடி, இன்னொரு பக்கம் பாடல்கள் ஹிட், இன்னொரு பக்கம் கார்த்திக்கின் நடிப்பு என்று படம் மாஸ் ஹிட் அடைந்தது.

எத்தனை வருடம்

எத்தனை வருடம்

கிட்டத்தட்ட 20 வருடங்கள் கோலிவுட்டில் தனக்கென தனி கோட்டையை கார்த்திக் கட்டி வைத்து இருந்தார். அடுத்த 4 வருடம் வரிசையாக ஹிட் கொடுத்தாலும் 2000ல் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக சரிவை சந்தித்தார். ஆனால் மீண்டும் அதே, துடிப்போடு கம்பேக் கொடுத்தார். ராவணன் படத்தில் வித்தியாசமான ரோலில் நடித்து பெயர் பெற்றார்.

மீண்டும் வந்தார்

மீண்டும் வந்தார்

அதன்பின் அனேகனில் செம யூத் வில்லனாக வந்தார். தேவ், தானா சேர்ந்த கூட்டம் என்று வரிசையாக முக்கிய ரோல்களில் நடித்த கார்த்திக் மீண்டும் சினிமாவில் டாப் பார்மிற்கு திரும்பி இருக்கிறார். வயது 59 ஆகிவிட்டாலும் இப்போதும் அப்படியே அதே அலைகள் ஓய்வதில்லை சாக்லேட் பாயாகவே கார்த்திக் இருக்கிறார். சினிமா ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் அரசியலிலும் அவ்வப்போது பிசியாகி வருகிறார்.

பாராட்டினார்கள்

பாராட்டினார்கள்

இதனால்தான் இன்று அவரின் பிறந்த நாளை முன்னிட்டு சினிமா நடிகர்களும், திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜா போன்ற அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். எப்பவும் நீங்கள் சாக்லேட் பாய்தான்.. எப்படி இளமையவே இருக்கீங்க என்று பலரும் இவரிடம் இணையத்தில் கேட்டு வருகிறார்கள். அலைகள் ஓய்வதில்லையில் அறிமுகமாகி பலரின் உள்ளத்தை அள்ளி எடுத்த கார்த்திக்குக்கு ஹாப்பி பர்த் டே!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+