ஃபியூஸ் போன பியூஸ் கோயல் கூட்டணி திட்டம்.. பாஜக இருக்கும்வரை அதிமுக தேறாது! அப்ப திமுகவுக்கு மாற்று?
சென்னை: "தேமுதிகவின் வாக்கு வங்கி 1%க்கும் கீழே குறைந்துள்ளதால், அக்கட்சி தன்னுடைய அடையாளத்தை தக்கவைக்க திமுக கூட்டணியில் இணைந்து கொள்ளலாம் என்று நினைக்கிறது.. தேமுதிக என்றில்லை, பல கட்சிகளும் திமுகவுடன் கூட்டணி வைக்கவே முனைப்பு காட்டுகிறார்கள்" என்று அரசியல் விமர்சகர் ராஜ கம்பீரன் தெரிவித்துள்ளார்.
AramNaadu என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள அரசியல் விமர்சகர் ராஜ கம்பீரன், "டிடிவி தினகரனுக்கு 6 தொகுதிகள், ஓ.பன்னீர்செல்வத்திற்கு 3 தொகுதிகள் வழங்கப்படலாம் என்று அதிமுகவிடம் பியூஸ்கோயல் பேச்சு நடத்தினார்.. ஆனால் அதை ஓபிஎஸ் அணி விரும்பவில்லை.. பழனிசாமியின் தலைமையை ஏற்பது தங்களுக்கு இழிவு என்று அறிவித்துவிட்டார்கள்.

டிடிவி தினகரனும் தனக்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டதாக வந்த செய்தி முற்றிலும் வதந்தி என்று ஒரே போடாக போட்டார்.. இதனால் பியூஷ் கோயலின் தொகுதித் திட்டம் ஆரம்பிக்கும்போதே தோல்வியில் முடிந்துவிட்டது.
எடப்பாடி பழனிசாமி - அதிமுக சரிவு
அதிமுக தற்போது சரிவை நோக்கி செல்கிறது.. எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சரான பிறகு சசிகலாவை கண்டுகொள்ளவில்லை, கொடநாடு எஸ்டேட் விவகாரத்தில் முக்கிய ஆவணங்கள் அழிக்கப்பட்டு விட்டன.
இதனால் ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோருக்கு எடப்பாடி பழனிச்சாமி மீது கடும் கோபம் இன்றும் உள்ளது.. இவர் காட்டும் தயவில், இவரது கடைக்கண் பார்வையில் எம்எல்ஏ ஆக வேண்டிய அவசியமில்லை என்பது அவர்களது எண்ணம்.. எடப்பாடி பழனிசாமியின் தலைமையை தகர்ப்பதே அவர்களின் நோக்கம்
மைக்ரோ லெவல் சாதி
தென் மாவட்டங்களில் முக்குலத்தோர், முத்தரையர் சமூக மக்களின் 80 சதவீத வாக்கு வங்கியை திமுக தன் பக்கம் ஈர்த்து வருகிறது.. இதற்கான வேலை திட்டத்தை திமுக சரியாக நடத்தி வருகிறது.. மைக்ரோ லெவல் சாதியையும், தன் பக்கம் ஈர்க்கும் வேலையில் இறங்கியிருக்கிறது.. மெய்யநாதன் போன்றவர்களை அமைச்சராக்கியது இதற்கு ஒரு உதாரணம்
கடந்த தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓபிஎஸ் சுயேட்சையாக நின்று மூன்றரை லட்சம் வாக்குகளை பெற்றார்,.. இத்தனைக்கும் 20 நாளைக்கு முன்புதான் அவரை அறிவித்தார்கள்.. பலாப்பழம் சின்னமும் மக்களுக்கு அறிமுகமில்லை.. பன்னீர்செல்வம் என்ற பெயரில் பல சுயேட்சைகளை இறக்கி குழப்பத்தை உண்டு பண்ணினார்கள்.. அப்படியிருந்தும் 3 லட்சத்து 36 ஆயிரம் ஓட்டுக்களை பெற்றார்..
அன்வர் ராஜா - பாஜக
ஆனால் அதிமுக அங்கு டெபாசிட் இழந்துவிட்டது.. இப்போதும் அதிமுக மிகப்பெரிய பின்னடைவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.. இனியும் அதிமுக தேறாது என்பதை உணர்ந்துதான், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அன்வர் ராஜா, கட்சியில் மரியாதை இல்லை என்று கூறி வெளியேறினார்..
பாஜக இருக்கும்வரை அதிமுக தேறுவது கஷ்டம்... பாஜக தலைமையிலான கூட்டணி பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்துள்ளது என்றாலும் யாருமே கூட்டணிக்கு இதுவரை வரவில்லை.. தேமுதிக போன்ற கட்சிகள் கூட அந்த கூட்டணிக்கு வரத் தயாராக இல்லை..
தேமுதிகவின் வாக்கு வங்கி 1%க்கும் கீழே குறைந்துள்ளதால், அக்கட்சி தன்னுடைய அடையாளத்தை தக்கவைக்க திமுக கூட்டணியில் இணைந்து கொள்ளலாம் என்று நினைக்கிறது.. தேமுதிக என்றில்லை, பல கட்சிகளும் திமுகவுடன் கூட்டணி வைக்கவே முனைப்பு காட்டுகிறார்கள்.
திமுகவுக்கு மாற்று யார்?
அதிமுக வீழ்ச்சியில் உள்ளது.. பனையூர் பங்களாவில் விஜய் அடை காத்து கொண்டிருக்கிறார்.. வெளியே அவர் வருவதில்லை.. நாம் தமிழர் கட்சியும் தனியாக மரத்தை கட்டிப்பிடித்து கொண்டு, மானுடன் பேசிக்கொண்டு, கடலில் குதித்து கொண்டு வேறு வழியில் சென்று கொண்டிருக்கிறார்கள்..
அப்படியானால் திமுகவுக்கு மாற்று யார்? தமிழகத்தின் ஜனநாயகத்தின் மாபெரும் வீழ்ச்சி என்னவென்றால், ஒரு எதிர்க்கட்சி வலிமையாக இல்லாமல் போனதுதான்.. திமுகவுக்கு நிகராக இருந்த அதிமுக, இன்று தேய்மானத்துக்கு போய்விட்டது.. மண் குதிரை ஆற்றில் இறங்கியது போல கரைந்து கொண்டே இருக்கிறது..
அதிமுகவை ஒழித்துவிட்டு பாஜக முன்னே வர பார்க்கிறது.. ஆனால் அதிமுகவை ஒழித்தாலும் பாஜக இங்கே வர முடியாது.. பியூஷ் கோயல் காலையில் வந்து மாலையில் கிளம்புவதற்குள் அவரது திட்டங்கள் எல்லாமே பியூஸ் போய்விட்டன" என்று தெரிவித்துள்ளார்.
-
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications