"கூப்பிடுகிறார்கள்".. இதோ இன்னும் ஒரு டிக்டாக் சீரழிவு.. கண்ணீர் விட்டு புலம்பிய "ரவுடி பேபி" சூர்யா

ரவுடி பேபி சூர்யா கண்ணீர் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரைகுறை டிரஸ்ஸில் டிக்டாக் செய்த பெண் ஒருவர், இன்று தன்னை பாலியல் தொழிலுக்கு அழைக்கிறார்கள் என்று கண்ணீர் விட்டு புலம்பும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார். இது தேவையா என்றுதான் நமக்கு கேட்கத் தோன்றுகிறது.

பொதுமக்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த டிக்டாக் ஆப்பை பயன்படுத்தி வருகிறார்கள்.. இதனால் முடங்கி போய் 4 சுவற்றுக்குள் கிடந்த பல எளிய மக்களின் திறமைகள் வெளிவர தொடங்கின.. உலகம் அதனை ரசித்து பார்க்கவும் செய்தது.. இது திறமைசாலிகளுக்கு ஒருவித உந்துதலையும், மகிழ்ச்சியையும், அங்கீகாரத்தையும் தந்து வருகிறது.

அதே நேரத்தில் என்னதான் திறமையின் வெளிப்பாடாக டிக்டாக் இருந்தாலும் இதன் விபரீதங்கள் அதிகம் என்பதால், இந்த ஆப்பை தடை செய்ய கோர்ட்டும் முடிவெடுத்தது.. ஆனால், என்னென்னவோ வாதாடி, கடைசியில் இந்த டிக்டாக் ஆப்பை திரும்பவும் நடைமுறைக்கு கொண்டு வந்துவிட்டனர்.

கொலைகள்

கொலைகள்

இப்போது, டிக்டாக்கின் உச்சக்கட்டமாக குடும்பங்கள் பிரிவது முதல் கொலைகள் வரை அசால்ட்டாக நடந்து வருகிறது. அந்த வகையில் பாதிக்கப்பட்ட ஒரு பெண்தான் சூர்யா.. மலேசியாவை சேர்ந்தவர்.. தன் நடிப்பு திறமையை காட்ட டிக்டாக்கிற்குள் நுழைந்தவர்..

ஆபாச பேச்சுக்கள்

ஆபாச பேச்சுக்கள்

நாளடைவில் லைக்குகளை அள்ள அள்ள.. அரைகுறை டிரஸ்களும் அதிகமானது.. ஆபாச பேச்சுக்களை சர்வசாதாரணமாக பேசி வீடியோக்களை பதிவிட ஆரம்பித்தார்.. ரவுடி பேபி சூர்யா என்றால் டிக்டாக்கில் ரொம்பவும் ஃபேமஸ். இந்த பெண்ணுக்கு லைக்குகள் லட்சக்கணக்கில் ஏறி கொண்டே போகின்றன.. இதற்கு முக்கிய காரணம் அவரது டிரஸ்கள்தான்.. இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார்.. ஆனால், நாளுக்கு நாள் சூர்யாவின் அட்டகாசத்தை பார்த்து, அவரது கணவர் பிரிந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

ஆபாச பதிவு

ஆபாச பதிவு

இந்த சமயத்தில்தான், டிக்டாக்கில் ஜிபி முத்து என்பவருடன் இணைந்து சூர்யா வீடியோக்களை அதிகமாக பதிவிட்டார்.. சூர்யாவும், ஜிபி முத்துவும், டிவி ஷோக்களில் கலந்து கொள்ளும் அளவுக்கு பிரபலமானார்கள்.. ஒரு கட்டத்தில் ஆபாச பதிவுகள், மோசமான விமர்சனங்கள் சூர்யாவை ரொம்பவே பாதிப்புக்கு உள்ளாக்கி விட்டது.

அரைகுறை டிரஸ்

அரைகுறை டிரஸ்

இதனால், கெட்ட கெட்ட வார்த்தைகளை சர்வசாதாரணமாக பேசிய சூர்யா, நாளடைவில் பேச்சில் நாகரீகத்தை கொண்டு வந்தார். ஆனாலும் இது மக்கள் மனதில் பதியவில்லை.. ஆபாச பேச்சு, அரைகுறை டிரஸ் சூர்யாதான் இப்போதும் பதிந்து உள்ளார். சமீபத்தில் ஒருவீடியோவும் சூர்யா பதிவிட்டுள்ளார்.. அதில், டிக்டாக்கில் உள்ள நபர்களை பாலியல் தொழிலுக்கு அழைக்கிறார்கள் என்று கண்ணீருடன் பேசியுள்ளார்.

5 லட்சம் வேண்டும்

5 லட்சம் வேண்டும்

பலர் சூர்யாவுக்கு அட்வைஸ் தந்த நிலையில், "நான் அடக்க ஒடுக்கமாக வாழணும்னு ஆசை.. ஆனல், எனக்கு நிறைய கடன் இருக்கு.. கடனை அடைக்க ரூ.5 லட்சம் தந்து விட்டு எனக்கு புத்தி சொல்லுங்கள்" என்று கூறியுள்ளார். அதாவது தான் திருந்தி வாழ வேண்டும் என்றால் எனக்கு 5 லட்சம் தாருங்கள் என்று கண்டிஷன் போடுவது போல அந்த வீடியோ இருந்தது.

அட்வைஸ்

அட்வைஸ்

ஆபாச டிரஸ்களுடன் ஒரு பெண் பேசக்கூடாத பேச்சை பதிவிட்ட சூர்யா, இன்று கண்ணீர் மல்க பாலியல் தொழிலுக்கு கூப்பிடுகிறார் என்று சொல்வதை நினைத்து வருத்தப்படுவதா அல்லது "நான் அடக்க ஒடுக்கமா இருக்க வேண்டும் என்றால் எனக்கு 5 லட்சம் பணம் தந்துவிட்டு அட்வைஸ் பண்ணுங்க " என்று சொல்வதை நினைத்து பரிதாபப்படுவதா தெரியவில்லை.. ஆனால் டிக்டாக்.. மெல்ல கொல்லும் நோய் என்பது மட்டும் உண்மை!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+