டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர் கவலைக்கிடம்.. உயிருக்கு போராட்டம்.. நடிகர் சோனுசூட் உதவி..!
டான்ஸ் மாஸ்டர் சிவங்கருக்கு சோனுசூட் சிகிச்சைக்கு நிதி உதவி செய்வதாக அறிவித்துள்ளார்
சென்னை: டான்ஸ் மாஸ்டர் சிவசங்கரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.. எனினும் மிக தீவிரமான சிகிச்சையில் டாக்டர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
Recommended Video
இந்திய சினிமா உலகில் சீனியர் டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர்.. இவர் நடிகரும்கூட.. தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி கன்னடம் நடன இயக்குனராக பணிபுரிந்து இருக்கிறார்.
டான்ஸ் மாஸ்டராக மட்டும் 1300 படங்களில் டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்து உள்ளார்... இவரது பாடி லேங்குவேஜ் மற்றும் டயலாக் உச்சரிப்புக்கென்று தனி ரசிகர் கூட்டமே உள்ளது.

கொரோனா
மேலும், ஜப்பான் உள்ளிட்ட 10 மொழி படங்களில் டான்ஸ் இயக்குனராக பணியாற்றி உள்ளார்.. இந்நிலையில் இவருக்கு திடீரென கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டது.. கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவசங்கர், அவரது மனைவி, மூத்த மகன் என 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.. அதனால், 3 பேருமே சிகிச்சைக்காக ஹைதராபாத்தில் உள்ள AlG மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருக்கிறார்கள்..

ஆபத்தான நிலைலமை
இதில், சிவசங்கர் மாஸ்டர் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறார்... அவரது நிலை ஆபத்தான நிலைமையில் உள்ளதாக கூறப்படுகிறது.. இவரது சிகிச்சைக்கு அதிக செலவு ஆகும் என்று டாக்டர்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.. ஆனால், அந்த சிகிச்சைக்கான கட்டணத்தை அவருடைய குடும்பத்தினரால் செலுத்த முடியவில்லை.

கோரிக்கை
எனவே, சிவசங்கர் மாஸ்டரின் இளைய மகன் ஒரு கோரிக்கையை சோஷியல் மீடியாவில் வைத்துள்ளார். அதில், என்னுடைய அப்பா உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார்... எங்களிடம் சிகிச்சைக்கு தேவையான பணம் இல்லை... அதனால் அவருக்கு தயவுசெய்து உதவுங்கள் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.. இதையடுத்து, பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் சிகிச்சை செலவுக்கு உதவி செய்வதாக முன் வந்துள்ளார்.

சோனுசூட்
வழக்கமாக யார் கஷ்டம் என்று சொன்னாலும் சரி, உடனடியாக தானாகவே முன்வந்து தன்னால் ஆன உதவிகளை செய்பவர் சோனுசூட்.. அந்த வகையில் சிவசங்கருக்கும் உதவ முன்வந்துள்ளார். இதை தன்னுடைய ட்விட்டரிலும் தெரிவித்துள்ளார்.. அதில், நான் ஏற்கனவே மாஸ்டரின் குடும்பத்தாருடன் தொடர்பில் உள்ளேன்... அவரின் உயிரை காப்பாற்ற என்னால் முடிந்த அளவு செய்வேன் என்று பதிவிட்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications