விஜய் அரசியல் கணக்கு ஆரம்பம்.. மொத்தம் ஐந்து பேர்.. தமிழக வெற்றிக் கழகம் செய்த முதல் பெரிய சம்பவம்
சென்னை: நடிகர் விஜய் தொடங்கி உள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியினை பதிவு செய்ய அதிகாரப்பூர்வமாக நோட்டீஸ் வெளியாகி இருக்கும், அடுத்தடுத்து விஜய் தொடங்க உள்ள அரசியல்கள் குறித்து புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
அரசியலுக்கு வரப்போவதாக எதிர்பார்க்கப்பட்ட நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அத்துடன் கட்சியை பதிவு செய்வதற்கான விண்ணப்பமும் தேர்தல் ஆணையத்தில் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் தற்போது கட்சியின் பதிவு மற்றும் கட்சி நிர்வாகிகள் குறித்த தகவலை பொது நோட்டீஸாக வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், பொருளாளர் வெங்கட்ராமன், தலைமை கழக செயலாளர் ராஜசேகர், இணை கொள்கை பரப்புச் செயலாளராக தகிரா ஆகியோர் பெயர் இடம் பெற்றுள்ளார்கள்.
இந்த நோட்டீஸில், இந்த பதிவு குறித்து யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தலைமை தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஒரு கட்சி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யும்போது, அந்தக் கட்சியின் பெயரை பொது நோட்டீஸாக வெளியிடப்படுவது வழக்கம். மேலும் அந்த நோட்டீஸை பார்தது யாருக்காவது ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவிக்கும். அந்த நடைமுறையின்படி தான் நடிகர் விஜய் கட்சி தொடர்பாக நோட்டீஸ் வெளியிட்டுள்ளார். இந்த நோட்டீசுக்கு யாரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்றால் விண்ணப்பித்தவர்களுக்கு பெயர் ஒதுக்கப்பட்டு, கட்சியும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படும். ஒரு வேலை யாரேனும் ஆட்சேபனை தெரிவித்தால், அந்தப் பெயரும் கட்சியும் பதிவு செய்யப்படாது. விசாரணைக்கு பின்னரே பதிவு செய்யும் வாய்ப்புகள் ஏற்படும்,,
தேர்தல் ஆணையத்தில் கட்சியை அதிகாரப்பூவர்மாக பதிவு செய்யும் பணியில் தீவிரமாக உள்ள நடிகர் விஜய், 2026 சட்டசபை தேர்தலை மனதில் வைத்தே களம் இறங்க உள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளார். நடிகர் விஜய் கட்சியை ஆரம்பிக்கும் முன்பே, மற்ற கட்சிகளில் உள்ளது போல், மாவட்ட அணி, நகர அணி, ஊரக அணி என்று எல்லா அணியும் உருவாக்கிவிட்டார். மகளிர் அணி, வழக்கறிஞர்கள் அணி, சமூக வலைதள அணி என கட்சிகளுக்கு உரிய எல்லா கட்டமைப்பையும் தெளிவாக உருவாக்கியுள்ளார்.
இதனிடையே பூத் வாரியாக நிர்வாகிளை நியமிக்கும் அளவிற்கு கட்சியை பலப்படுத்த விரும்பிய தமிழக வெற்றிக் கழகத்துக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு செயலியை தொடங்கினார். இந்த ஆப் மூலம் இதுவரை புதிதாக கட்சியில் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை நெருங்கி உள்ளது. நடிகர் விஜய் விஜய் தற்போது 'தி கோட்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்த படத்துக்காக கடந்த சில நாட்களாக மயிலாப்பூரில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் விஜய் டப்பிங் பேசி வந்த நிலையில், மீண்டும் துபாயில் தி கோட் படப்பிடிப்பிற்காக இன்று பயணித்தார். படப்பிடிப்பு முடிந்து திரும்பிய பின்னர் முழுமையாக கட்சி பணியில் இறங்குவார் என சொல்கிறார்கள் விஜய் கட்சியினர்.
லோக்சபா தேர்தல் முடிவுகள் ஜூன் 4-ந் தேதி வெளியாக உள்ளது. தேர்தல் முடிவு வெளியான பிறகும் தமிழக வெற்றிக் கழகம் புதிய அரசியல் நடவடிக்கையை தொடங்கும் என்கிறார்கள். அடுத்த மாதம் (ஜூன்) 22-ந் தேதி விஜய் பிறந்த நாளை கொண்டாட உள்ளார்.. இதையொட்டி அன்று கட்சியின் மாநாட்டை மதுரையில் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
அதேநேரம் 10ம் வகுப்பு , 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகளுக்கு இந்த ஆண்டும் நடிகர் விஜய் பரிசு வழங்கி கௌரவிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுபற்றி அவர் வெளியிட்ட ட்வீட் பதிவினை பார்த்தாலே புரிந்திருக்கும்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications